நோர்வேயின் வழி இலங்கைக்கு சரி வருமா?

இந்த முறை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) என்ற பெயரை நீங்கள் கேட்டிருக்காமல் இருந்திருக்க முடியாது. மைதானத்தில் அவரது அட்டகாசமான ஆட்டம், Norway என்ற நாட்டை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ஆனால், வெறும் 5.63 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நாட்டிற்குள், கால்பந்தையும் தாண்டி உலகமே வியக்கும் பல ஆச்சரியங்களும் ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன.

சுவிட்சர்லாந்து போன்ற மிகச்சிறிய நாடுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், உலகின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) கொண்ட நாடுகளில் Norway முதன்மையாக உள்ளது. குறைந்த வேலையின்மை, மக்களின் மிக நீண்ட ஆயுட்காலம், திறமையான உழைப்பாளர்கள், மற்றும் கடுமையான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் எனப் பல சிறப்பம்சங்கள் இங்கு உள்ளன.

அமெரிக்காவில் 10.4% மக்களும், இலங்கையில் சராசரியாக 32% மக்களும் அதிக நேரம் (Over-time) வேலை செய்யும்போது, Norwayயில் வெறும் 1.4% மக்கள் மட்டுமே ஓவர்-டைம் வேலை செய்கிறார்கள். கடுமையான பனிப்பொழிவு இருந்தாலும், உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் Norway 6-வது இடத்தில் உள்ளது.

அதிக வரி வசூலிக்கும் ஒரு நாடாக இருந்தாலும், மக்கள் எவ்வாறு இவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் அங்கு வாழ்கிறார்கள்? அவர்களின் ரகசியம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில், அந்த நாட்டின் பொருளாதார மாதிரியாகத் தான் இருக்கும்.

  1. மீன்பிடி தொழிலில் இருந்து எண்ணெய் வளம் வரை:வரலாற்றுப் பயணம் இன்றைக்கு இவ்வளவு பணக்கார நாடாக இருக்கும் நார்வே, 1960-களில் ஒரு சாதாரண மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருந்த ஏழை நாடாக இருந்தது. அப்போது அவர்களின் வாழ்கைத்தரம் ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளைப் போலத்தான் இருந்தது. அப்போதைய மக்களின் GDPயானது, பங்களாதேஷ், நைஜீரியா போன்ற நாடுகளை போலத்தான் இருந்தது. ஆனால், 1963 மே மாதத்தில் அங்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. வட கடல் (North Sea) பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என Norway அரசு சட்டமியற்றியது. அதிர்ஷ்டவசமாக, 1969-இல் அங்கு எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், 'Ocean Viking' மூலம் எண்ணெய் துளையிடுதல் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, Norwayயின் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 1.6 மில்லியன் பீப்பாய்கள் வரை எகிறியது.

  2. 'Sovereign Wealth Fund':எதிர்கால சந்ததிக்கான தொலைநோக்கு பார்வை எண்ணெய் வளம் கிடைத்தவுடன் பெரும்பாலான அரபு நாடுகள் செய்தது போல, Norway ஆடம்பரமாகச் செலவு செய்து பணத்தைக் கரியாக்கவில்லை. எண்ணெய்க் கிணறுகள் நிரந்தரமானவை அல்ல என்பதை Norway அரசு தெளிவாக உணர்ந்திருந்தது. அதனால், எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு "Sovereign Wealth Fund" (அரசு இறையாண்மை நிதி) என்ற மிகப்பெரிய சேமிப்பு நிதியை உருவாக்கியது. இன்றைக்கு இதுதான் உலகிலேயே மிகப்பெரிய அரசு சேமிப்பு நிதி (Sovereign Wealth Fund) ஆகும். இது சீனாவின் சமூக நல சேமிப்பை விடப் பெரியது.

    இந்த நிதியின் இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது?

    மக்களுக்கான நிதி: இந்த இயற்கை வளம் நாட்டின் மக்களுக்குச் சொந்தமானது என்பதால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மக்களுக்கே சேர வேண்டும் என அரசு கருதியது.

    நேரடிச் செலவு இல்லை: எண்ணெய் பணத்தை நாட்டின் பொருளாதாரத்திற்குள் நேரடியாகக் கொண்டு வராமல், உலக நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தனர்.

    கட்டுப்பாடு: மக்கள் நினைத்தவுடன் இந்த பணத்தில் சொகுசுப் பொருட்களை வாங்க முடியாது; ஏன், Norway அரசாங்கம் கூட இந்த அசல் நிதியைத் தொட முடியாது.

    3% விதி: வெளிநாட்டு முதலீடுகள் மூலம் வரும் லாபத்தில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே நாட்டின் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

    இதன் காரணமாக, உலகச் சந்தையில் எண்ணெயின் விலை எவ்வளவு சரிந்தாலும், அது Norwayயின் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிப்பதே இல்லை. இந்த லாபப் பணத்தைக் கொண்டுதான் இலவசக் கல்வி, தரமான மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மக்களுக்கு வழங்குகிறது.  

  3. அதிக விலைவாசி vs சமூக பாதுகாப்பு வலை (Social Safety Net):Norwayயில் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகம்.

Table 1
ஒப்பீடு அமெரிக்கா (USD) நோர்வே (USD)
ஒரு ஹோட்டலில் 2 பேர் உண்ண  $78  $102 
மாதாந்த மின்சாரம் & Gas கட்டணம்  $216  $257 
Volkswagen Golf காரின் விலை  $35,500  $47,135 

ஆனால், இவ்வளவு அதிக விலைவாசியையும், அதிக வரியையும் Norway மக்கள் ஏன் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்கள்? சுருக்கமான ஒரு பதிலாக கூறின், அவர்கள் செலுத்தும் வரிக்கு, பதிலுக்கு முழுமையான பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கிறது.

  • மருத்துவச் செலவு: மருத்துவச் செலவுகளுக்காக அங்கு யாரும் கடனாளி ஆவதில்லை. 

  • கல்வி: உயர்கல்விக்காக மாணவர்கள் கடன் வாங்கிப் பயப்படத் தேவையில்லை.

  • வேலையின்மை பாதுகாப்பு: வேலை பறிபோனால் கூட நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வராது.

Norwayயிடம் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

Norwayயின் சோசலிச ஜனநாயகக் கலப்பு மாதிரியை (Socialist-Capitalist Mixed Economy) மற்ற நாடுகள் அப்படியே நகலெடுத்தது போல் பின்பற்றிட முடியாது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், மக்கள் தொகை மற்றும் புவியியல் அமைப்புகள் முற்றிலும் மாறுபட்டவை. ஆனால், Norwayயின் நிர்வாக முறையிலிருந்து சில முக்கிய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்:

அ) பொது-தனியார் கூட்டுமுறை (Public-Private Partnership) 

வளரும் நாடுகளில் அரசு ஒரு தொழிலை நடத்தினால், அங்கு தேவையில்லாத அரசியல் தலையீடுகளும் ஊழலும் இருக்கும். ஆனால், Norwayயில் Equinor, Telenor, DNB போன்ற பெரிய நிறுவனங்களில் அரசாங்கத்திற்குப் பங்குகள் இருந்தாலும், அரசு ஒரு முதலீட்டாளராக மட்டுமே செயல்படுகிறது. நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளைத் தனியார் துறை வல்லுநர்களே எடுக்கிறார்கள்.

ஆ) தொழில் தொடங்க இலகுவான தன்மை (Ease of Doing Business) 

உலகில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் எளிதான நாடுகளில் Norway 9வது இடத்தில் உள்ளது. வெளிப்படைத்தன்மை, லஞ்சமின்மை மற்றும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் காரணமாகத் தனியார் முதலீட்டாளர்கள் தைரியமாக முதலீடு செய்கிறார்கள்.

இ) புதிய தொழில்களுக்கான பயமின்மை (Risk-Taking Environment) 

வளரும் நாடுகளில் ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது ஒரு சூதாட்டம் போன்றது. அந்த முயற்சி தோல்வியடைந்தால், வாழ்நாள் சேமிப்பிலிருந்து குழந்தையின் படிப்பு செலவு வரை அத்தனையும் பாதிக்கப்படும். ஆனால், Norwayயில் அரசால் வழங்கப்படும் வலுவான சமூகப் பாதுகாப்பு (Social Safety Net) காரணமாக, தொழில் முயற்சி தோற்றாலும் அடிப்படை வாழ்க்கை பாதிக்கப்படாது என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இந்தத் தைரியமே அவர்களைப் புதிய கண்டுபிடிப்புகளையும் தொழில்களையும் உருவாக்க வைக்கிறது. இந்த வளங்களைக்கொண்டு அவர் சுவிட்சர்லாந்தின் முகவரியையே மாற்றிய இரண்டு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தினார். முதலாவதாக, சுவிட்சர்லாந்தின் அனைத்து மூலை முடுக்குகளையும் ரயில்வே மூலம் இணைத்தார். இன்று அவர்களின் உள்கட்டமைப்பு எந்தளவிற்குச் சிறந்து விளங்குகிறது என்றால், மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைதூர ஆல்பைன் (Alpine) கிராமங்கள் வரை தண்டவாளங்களை அமைத்து, உலகிலேயே மிக அடர்த்தியான ரயில்வே வலையமைப்பைக் கொண்ட நாடாகச் சுவிட்சர்லாந்து திகழ்கிறது. நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதியைக் கூட அவர்கள் இணைத்துள்ளனர். இதனை அவர்கள் 1800-களிலேயே சாத்தியமாக்கிக் காட்டினர். ஆனால், இலங்கையில், கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த தண்டவாளங்களைக் கூட இன்னும் முழுமையாகச் சீரமைக்க முடியாத நிலை நீடிக்கிறது. ஆனால், இவர்களோ 200 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.

முடிவுரை

அரசாங்கம் மக்களுக்கு ஒரு வலுவான பாதுகாப்புத் தூணாக இருந்து, தனியார் துறையோடு இணைந்து தொழில்களை வளர்க்கும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளரும்; மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள். கால்பந்து மைதானத்தில் ஹாலண்ட் ஒரு மிளிர்கின்ற நட்சத்திரமாக இருக்கலாம். ஆனால், பொருளாதார உலகத்தைப் பொறுத்தவரை Norwayயின் இந்த நிர்வாக மாதிரிதான் உண்மையான 'சூப்பர் ஸ்டார்'! 

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கைக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் Switzerland!

உங்களுக்குப் பிடித்தமான சாக்லேட் (Chocolate) எது என்று கேட்டால், பெரும்பாலானோரின் நினைவுக்கு வரும் முதல் நாடு சுவிட்சர்லாந்தாகத்தான் இருக்கும். அதேபோல், உலகத்தரம் வாய்ந்த கைக்கடிகாரம் என்றாலே 'Swiss Watch' தான் உலகளாவிய அடையாளமாகத் திகழ்கிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கூட, கதாநாயகனும் கதாநாயகியும் டூயட் பாடுவதற்கு சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அந்த அளவிற்கு அழகான, வசதியான மற்றும் தரமான தயாரிப்புகளைத் தரும் நாடாக சுவிட்சர்லாந்து உலகப் புகழ்பெற்றிருக்கிறது. 'பூமியின் சொர்க்கம்' என்று பலராலும் வர்ணிக்கப்படும் இந்த நாடு, இன்று பார்ப்பதற்கு மிக உன்னதமான நிலையில் உள்ளது. ஆனால், ஒரு காலத்தில் இந்த உலகம் கண்ட மிக ஏழ்மையான, வறுமை சாபமிட்ட நாடாக சுவிட்சர்லாந்து இருந்தது என்ற உண்மை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்று இத்தனை வசதிகளுடன் ஆடம்பரமாகத் திகழும் இந்த நாடு, ஒரு காலத்தில் உலக வரைபடத்தில் கண்டிப்பான தோல்வியைத் தழுவும் என்று கணிக்கப்பட்ட மிக ஏழ்மையான நாடுகளுள் ஒன்றாக இருந்தது.

பொதுவாக, உலகிலுள்ள பணக்கார நாடுகள் எதனை எடுத்துக்கொண்டாலும், அவற்றின் வளர்ச்சிக்கு பின்னணியில் எண்ணெய், தங்கம், நிலக்கரி போன்ற ஏதேனும் ஒரு இயற்கை வளம் அல்லது வர்த்தக மையமாக மாறுவதற்கான சாதகமான சூழல் இருப்பதை நாம் அவதானிக்கலாம். உதாரணமாக, துபாயிடம் எண்ணெய் வளம் உள்ளது; ஆஸ்திரேலியாவிடம் இரும்புத் தாதுவும் தங்கமும் உள்ளன; ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமோ எண்ணெய், எரிவாயு, தங்கம் என இந்த உலகில் சாத்தியமான அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்துள்ளன. ஆனால், சுவிட்சர்லாந்தை நோக்கினால் அவரிடம் உண்மையிலேயே குறிப்பிடும்படி எதுவுமே இல்லை. நிலக்கரி, எண்ணெய், தங்கம் எனப் பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டக்கூடிய எந்தவொரு இயற்கை வளமும் அந்த மண்ணில் இல்லை.

அதுமட்டுமன்றி, சுவிட்சர்லாந்து என்பது ஆப்கானிஸ்தானைப் போல நாலாபுறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும் (Landlocked Country). ஆப்கானிஸ்தானைப் போலவே இவர்களுக்கும் கடல் வழியோ அல்லது பிரத்தியேகமான சர்வதேச வர்த்தகப் பாதைகளோ கிடையாது. நாட்டின் 75 சதவீத நிலப்பரப்பு மலைகளால் சூழப்பட்டிருப்பதால், அங்கு விவசாயம் செய்வதோ அல்லது நிலப்பகுதிகளை ஒன்றாக இணைப்பதோ மிகவும் கடினமான காரியமாக இருந்தது. அங்கு நிலவும் கடுமையான பனி காலநிலை காரணமாக, சொந்த நாட்டு மக்களுக்குத் தேவையான உணவைத் தங்களது சொந்தப் பயிர்கள் மூலம் உற்பத்தி செய்வதே சாத்தியமற்றதாக இருந்தது. சுவிஸ் நாட்டுச் சிறுவர்கள் வெறும் கூலி வேலை செய்வதற்காக அண்டை நாடான ஜெர்மனிக்கு நடந்து செல்லும் அளவிற்கு அங்கு வறுமை தாண்டவமாடியது.

இன்னும் சுருக்கமாகக் கூறின், 1816ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிஸ் மக்கள் உணவுக்கு வழியின்றி, கடுமையான பசி பட்டினியால் வாடினர். உயிர் பிழைப்பதற்காக வெறும் புற்கள், பாசி மற்றும் மரப்பட்டைகளைச் சாப்பிட்டு வாழ வேண்டிய அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். ஆனால், அதற்கடுத்து வந்த 200 வருடங்களில் சுவிட்சர்லாந்து எவரும் எதிர்பாராத ஒரு பிரம்மாண்டமான பொருளாதாரப் புரட்சியைச் செய்து காட்டியது. அதன் விளைவாக, இன்று அதே நாடு உலகிலுள்ள மிக முக்கியமான பணக்கார நாடுகளுள் ஒன்றாக நிமிர்ந்து நிற்கிறது. இன்று உலகிலுள்ள ஒட்டுமொத்த தங்கத்தில் 70 சதவீதத்தை அவர்கள் மட்டுமே சுத்திகரிப்பு (Refine) செய்கிறார்கள்; ஒரு சொகுசு காரை விட அதிக விலையுள்ள கைக்கடிகாரங்களைத் தயாரிக்கிறார்கள். அவர்களின் தனிநபர் வருமானம் (Per Capita GDP), ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளை விட ஒரு லட்சம் டாலர் அதிகமாக உள்ளது.

அப்படியாயின், எழக்கூடிய முக்கிய கேள்வி என்னவென்றால்: எந்தவொரு இயற்கை வளமும் இல்லாத, வறுமை சூழ்ந்த ஒரு நாடு எப்படி உலகிலேயே பணக்கார நாடாக மாறியது? பனிக்கட்டியால் மூடப்பட்ட பாறைகளின் மேல் நின்றுகொண்டு, மற்ற நாடுகளால் செய்ய முடியாத எந்த உத்தியை இந்த மக்கள் கையாண்டார்கள்?

இதற்கான பதில் 1850ஆம் ஆண்டு வரை பின்னோக்கிப் போகிறது. 'ஆல்பிரட் எஸ்ஷர்' (Alfred Escher) என்ற தொலைநோக்கு சிந்தனையாளர், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வரை பரவிக்கொண்டிருந்த ஒரு புதிய போக்கைக் (Trend) கூர்ந்து கவனித்தார். அதன் மூலம் ஒரு யதார்த்தத்தை அவர் உணர்ந்துகொண்டார். உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் அனைத்தும் ரயில்வே என்ற அளப்பரிய கண்டுபிடிப்பின் மூலமே அந்த வளர்ச்சியை எட்டுகின்றன என்பதை அவர் கண்டறிந்தார். ஏனெனில், ரயில்வேயானது, போக்குவரத்துச் செலவை 95 சதவீதம் வரை குறைத்தது. இதனால், 10 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் தனது பொருட்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு சாதாரண விவசாயியால், 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தைகளுக்கும் தனது பொருட்களைக் கொண்டு சேர்க்க முடிந்தது. சொல்லப்போனால், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரில் தக்காளி சோஸ் (Ketchup) மற்றும் குதிரைவாலி (Horseradish) போன்ற பொருட்களைப் போத்தல்களில் அடைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு விவசாயி, தனது தயாரிப்புகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க இந்த ரயில்வேயைப் பயன்படுத்தினார். அந்த நிறுவனம் இன்று 40 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகப் புகழ்பெற்ற 'கிராஃப்ட் ஹைன்ஸ்' (Kraft Heinz) நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இதேபோன்று, அட்லாண்டாவின் ஒரு கிராமப்புறப் பகுதியில் ஒரு மருந்தாளுனர் (Pharmacist) ஒரு சிரப்பைக் (Syrup) கண்டுபிடித்தார். ரயில்வே கட்டமைப்பு இருந்த ஒரே காரணத்தினால், இன்று அந்த நிறுவனம் உலகமே அறியும் 'கொக்கா கோலா' (Coca-Cola) நிறுவனமாக வளர்ந்துள்ளது. இவ்வாறு ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி என அனைத்து நாடுகளும் ரயில்வேயைக் கொண்டு தங்களது பொருளாதாரச் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருந்த வேளையில், சுவிட்சர்லாந்து மக்கள் இன்னும் கைவண்டிகளையே தள்ளிக்கொண்டிருந்தனர். இந்த நிலையை மாற்ற, 1852ஆம் ஆண்டில் ஒரு தொலைநோக்கு சிந்தனையுள்ள அரசியல்வாதியாகவும் தொழிலதிபராகவும் திகழ்ந்த ஆல்பிரட் எஸ்ஷர், சுவிட்சர்லாந்தில் ரயில்வேயை உருவாக்குவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரயில்வே சட்டத்தை' நிறைவேற்றினார்.

ஆனால், அங்குதான் ஒரு பெரிய சவால் காத்திருந்தது. சுவிட்சர்லாந்திடம் நிலக்கரி இல்லை, அதிகமான இரும்பு இல்லை, ஏன், சமமான நிலப்பரப்பு கூட இல்லை. நாட்டின் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி மலைகளாகவே இருந்தன. அவ்வாறாயின், சாத்தியமே இல்லாத இந்த உள்கட்டமைப்புத் திட்டத்தை அவர் எப்படிச் சாதித்தார்? அதற்காக, ஆல்பிரட் எஸ்ஷர் ஒரு வங்கியைத் தோற்றுவித்தார். அதனைத்தான் இன்று நாம் அனைவரும் 'கிரெடிட் சுவிஸ்' (Credit Suisse) என்று அழைக்கிறோம். ஆனால், பணமே இல்லாத ஒரு ஏழை நாட்டில் இவ்வளவு பெரிய மூலதனத்தை எப்படித் திரட்ட முடிந்தது?

அதற்காக எஸ்ஷர் ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை வகுத்து, சுவிஸ் மக்களிடமிருந்தே மூலதனத்தைத் திரட்டினார். வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் வாங்குவதற்குப் பதிலாக, தனது வங்கியின் 3 மில்லியன் பங்குகளைப் (Shares) பொதுமக்களுக்கு வெளியிட்டார். இந்த முதலீட்டுத் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், பங்குகள் தேவைப்பட்ட அளவை விட 73 மடங்கு அதிகமாக வாங்கப்பட்டன (Oversubscribed). அவ்வாறுதான் எஸ்ஷருக்குத் தேவையான மூலதனம் கிடைத்தது. ஆனால், வெறும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பாலத்தை வடிவமைக்கவோ, சுரங்கத்தைத் தோண்டவோ, ரயில் பாதைகளை அமைக்கவோ முடியாதல்லவா? அதற்குத் தகுந்த மனித உழைப்பும், அறிவும் அவசியம். ஆனால், அந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க எஸ்ஷர் இன்னொரு வியூகத்தைக் கையாண்டார்.

1848ஆம் ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் அரசியல் புரட்சிகள் வெடிக்க ஆரம்பித்தன. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி என அனைத்து இடங்களிலும் மக்கள் அரசியலமைப்புச் சட்டம், பேச்சுரிமை மற்றும் முடியாட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், இந்த இக்கட்டான காலகட்டத்தைப் பயன்படுத்திய சுவிட்சர்லாந்து, அதற்கு நேர்மாறான ஒரு கொள்கையை எடுத்தது. பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் ஒரு முற்போக்கான அரசியலமைப்பை அவர்கள் எழுதினர். இதன் காரணமாக, ஐரோப்பாவிலேயே மிகப்பாதுகாப்பான நாடாகச் சுவிட்சர்லாந்து மாறியது.

இதன் விளைவாக, ஐரோப்பா முழுவதும் இருந்த மிகச்சிறந்த அறிவாளிகளும், சிந்தனையாளர்களும், திறமையாளர்களும், தங்களது சொந்த நாடுகளில் பாதுகாப்பு இல்லாததால் சுவிட்சர்லாந்தை நோக்கி வரத் தொடங்கினர். அவ்வாறுதான் தனது கைது ஆணையில் இருந்து தப்பிக்க 'ரிச்சர்ட் வாக்னர்' (Richard Wagner) சூரிச் நகருக்கு வந்தார்; அங்குதான் அவர் மேற்கத்திய இசையையே புரட்டிப்போட்ட ஒபேராக்களை (Operas) எழுதினார். விளாடிமிர் லெனின் சூரிச் நகரத்திலுள்ள ஒரு நூலகத்தில் அமர்ந்துதான் தனது புரட்சிக்கான திட்டங்களை வகுத்தார். அந்த சூரிச் பல்கலைக்கழகம் எந்தளவிற்கு முற்போக்கானதாக இருந்தது என்றால், ஐரோப்பாவின் முதல் பெண் மருத்துவரை அந்தப் பல்கலைக்கழகமே உருவாக்கியுள்ளது. அதைவிட முக்கியமாக, உலகின் மிகச்சிறந்த பேராசிரியர்கள் பலர் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுவிட்சர்லாந்தில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கினர். சொல்லப்போனால், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உருவாக்கிய சூரிச் 'ஃபெடரல் பாலிடெக்னிக் பள்ளி' (Federal Polytechnic School in Zurich), இந்தத் திறமையாளர்களால் தான் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சுவிட்சர்லாந்தின் மனிதவளப் (Talent) பற்றாக்குறை நீங்கியது. சுவிட்சர்லாந்து பணத்தைக் கொடுத்துத் திறமையாளர்களை வாங்கவில்லை; மாறாக, ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களுக்குப் புகலிடமும் பாதுகாப்பும் தந்தது, அவ்வளவுதான். இவ்வாறு எஸ்ஷரின் கைகளில் மூலதனமும் திறமையும் ஒன்றாக இணைந்தன.

இந்த வளங்களைக்கொண்டு அவர் சுவிட்சர்லாந்தின் முகவரியையே மாற்றிய இரண்டு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தினார். முதலாவதாக, சுவிட்சர்லாந்தின் அனைத்து மூலை முடுக்குகளையும் ரயில்வே மூலம் இணைத்தார். இன்று அவர்களின் உள்கட்டமைப்பு எந்தளவிற்குச் சிறந்து விளங்குகிறது என்றால், மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைதூர ஆல்பைன் (Alpine) கிராமங்கள் வரை தண்டவாளங்களை அமைத்து, உலகிலேயே மிக அடர்த்தியான ரயில்வே வலையமைப்பைக் கொண்ட நாடாகச் சுவிட்சர்லாந்து திகழ்கிறது. நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதியைக் கூட அவர்கள் இணைத்துள்ளனர். இதனை அவர்கள் 1800-களிலேயே சாத்தியமாக்கிக் காட்டினர். ஆனால், இலங்கையில், கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த தண்டவாளங்களைக் கூட இன்னும் முழுமையாகச் சீரமைக்க முடியாத நிலை நீடிக்கிறது. ஆனால், இவர்களோ 200 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.

அதன் பிறகு, சுவிட்சர்லாந்து இதைவிட ஒரு வியக்கத்தக்க உத்தியைக் கையாண்டது. சுவிட்சர்லாந்தின் வரைபடத்தை நோக்கினால், அதன் வடக்கே தொழில்துறையின் அரக்கனான (Industrial Giant) ஜெர்மனியும், தெற்கே மத்திய தரைக்கடலின் நுழைவாயிலாக விளங்கிய இத்தாலியும் அமைந்திருந்தன. இவ்விரு நாடுகளுக்கும் நடுவே சுவிட்சர்லாந்து அமைந்திருந்தாலும், அவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தது 4 கிலோமீட்டர் உயரத்திற்குப் பரந்து விரிந்திருந்த ஆல்ப்ஸ் (Alps) மலைத்தொடர் தான். கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக ஆல்ப்ஸ் மலை அவர்களுக்கு ஒரு சாபமாகவே இருந்தது. அதைக் கடந்து செல்வதற்கு இருந்த ஒரேயொரு வழி 'கோத்ஹார்ட் பாஸ்' (Gotthard Pass) என்ற பாதை மட்டுமே. அந்த பாதையில் கோவேறு கழுதைகளைப் பயன்படுத்திப் பொருட்களை மலையின் உச்சி வரை இழுத்துச் செல்ல வேண்டும். இப்பயணத்திற்கு 2 முதல் 3 நாட்கள் வரை தேவைப்பட்டதோடு, இப்பாதை கோடைகாலத்தில் வெறும் 5 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

இந்த நிலையில், ஆல்பிரட் எஸ்ஷர் ஆல்ப்ஸ் மலையின் மையப்பகுதி வழியாக நேராக ஒரு ரயில்வே சுரங்கப்பாதையைத் தோண்ட முடிவு செய்தார். அதுமட்டுமன்றி, சுவிட்சர்லாந்தை ஒரு தவிர்க்க முடியாத நாடாக மாற்றப்போகும் இந்தச் சுரங்கப்பாதைத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க, தனது இரு அண்டை நாடுகளையும் அவர் சம்மதிக்க வைத்தார். இறுதியில், 10 ஆண்டுகாலத் தீவிர உழைப்பிற்குப் பிறகு, சூரிச்சிலிருந்து மிலான் நகருக்கான பயண நேரம் 3 நாட்களிலிருந்து வெறும் 8 மணி நேரமாகக் குறைந்தது. போக்குவரத்துச் செலவு 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்தது. இதன் காரணமாக, அந்தப் பாதை வழியாகச் சென்ற பொருட்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இது சுவிட்சர்லாந்தை ஐரோப்பாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக (Transit Country) மாற்றியது.

இன்று இந்த கோத்ஹார்ட் ரயில்வே பாதை நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளை இணைக்கிறது. இவ்வாறு, நிலத்தால் சூழப்பட்ட தங்களது புவியியல் பலவீனத்தை, ஐரோப்பாவின் வர்த்தக மையமாக உருமாற்றித் தங்களது பலமாக மாற்றிக்கொண்டது சுவிட்சர்லாந்து. இப்பகுதி ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) GDPயில் 16 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது. இங்குதான் சுவிட்சர்லாந்தின் இரண்டாவது முக்கிய கட்டம் தொடங்குகிறது. உலகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறுவதற்கு, அவர்கள் 'பூஜ்ஜியச் செலவு உத்தி' (Zero-cost Strategy) என்ற புத்திசாலித்தனமான பொருளாதாரக் கொள்கையைப் பயன்படுத்தினர்.

அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எளிமையாகக் கூறின், தங்களிடம் இல்லாத பணத்தை விற்றார்கள், தங்களால் கண்டுபிடிக்கப்படாத மருந்துகளை விற்றார்கள், தங்களது மண்ணில் பயிரிட முடியாத சாக்லேட்டுகளையும் விற்றார்கள். உதாரணமாக, துபாயில் இன்று உலகளாவிய முதலீட்டு வணிகம் மிக வெற்றிகரமாக நடப்பதற்கு முக்கிய காரணம், துபாயின் ரியல் எஸ்டேட் விலைகள் உலகில் நிலவும் 'பயத்திற்கு நேர் விகிதத்தில்' (Directly Proportional) இருப்பதுதான். அதாவது, ரஷ்யா-உக்ரைன் போர் வெடிக்கும்போது, அந்த நாட்டு மக்கள் தங்களது பாதுகாப்பிற்காகப் பணத்தைத் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். சிரியா, லெபனான் அல்லது ஐரோப்பாவில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் இதுவே நிகழ்கிறது. உலகில் எப்போதெல்லாம் பயமும் நிச்சயமற்ற தன்மையும் உருவாகிறதோ, அப்போதெல்லாம் துபாயின் சந்தை வளர்கிறது. ஏனெனில், அது பூமியின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இன்று மக்கள் எவ்வாறு பாதுகாப்பை விரும்புகிறார்களோ, அதேபோல அன்றைய காலகட்டத்திலும் மக்கள் தங்களது சொத்துக்களை எந்தவொரு அரசாங்கமோ, வருமான வரி அதிகாரியோ அல்லது எதிரி நாடுகளோ கண்டறிய முடியாதவாறு மறைத்து வைப்பதற்கான தனிஉரிமையை (Privacy) விரும்பினர். இதனை உணர்ந்த சுவிட்சர்லாந்து, 1934ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்பாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு சுவிஸ் வங்கிக் கணக்கு யாருக்குச் சொந்தமானது என்ற ரகசியத்தை எந்தவொரு வங்கியாளராவது வெளியே கூறினால், அது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜெர்மனியின் நாணயமான 'ஜெர்மன் மார்க்ஸ்' (German marks) மதிப்பு இழந்திருந்த வேளையில், உலகமே நம்பிய, தாராளமாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரே பண அலகாக 'சுவிஸ் பிராங்க்' (Swiss Franc) மட்டுமே இருந்தது. இதனால் ஹிட்லருக்குத் தனது போர் ஆயுதங்களை வாங்குவதற்குச் சுவிஸ் பிராங்க் தேவைப்பட்டது; அதற்கு அவர் சுவிட்சர்லாந்தைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

இதன் காரணமாக, நாசிப் படைகள் சுவிஸ் பிராங்குகளைப் பெறுவதற்காக டொன் கணக்கிலான தங்கத்தை சுவிட்சர்லாந்திற்கு விற்றன. அவ்வாறு நாசிக்களின் தங்கம் மூலம் சுவிஸ் வங்கிகள் தோராயமாக 1.2 பில்லியன் பிராங்க், அதாவது இன்றைய மதிப்பில் 2.5 பில்லியன் டாலர் அளவிலான மூலதனத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தன. இவ்வாறு இரண்டாம் உலகப் போரின்போது சுவிட்சர்லாந்து ஹிட்லரின் வங்கியாளராகச் செயல்பட்டது. ஆனால், இதற்கடுத்து அவர்கள் அதைவிட தந்திரமான ஒரு பொருளாதார உத்தியைக் கையாண்டனர். இன்று சுவிட்சர்லாந்து உலகின் முன்னணி மருந்துத் துறை மையமாக (Pharma Hub) விளங்குகிறது. ஆனால், எத்தகைய இரசாயன வளங்களோ, மூலப்பொருட்களோ இல்லாத ஒரு நாடு எப்படி மருந்துத் துறையின் மையமாக மாறியது?

அதற்கான பதில், அவர்களின் சட்டத்தில் இருந்த ஒரு சாதகமான ஓட்டை (Loophole) தான். 1800-களில் பிரான்ஸ் நாடு 'ஃபூக்சின்' (Fuchsine) என்ற லாபகரமான சாயத்திற்கு (Dye) காப்புரிமை (Patent Rights) பெற்றிருந்தது. பிரெஞ்சு காப்புரிமைச் சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்ததால், அங்குள்ள வேதியியலாளர்களால் அதனைத் தாராளமாகத் தயாரிக்க முடியவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய சுவிட்சர்லாந்து, தங்களது நாட்டிற்குள் எந்தவொரு அறிவுசார் சொத்தையும் (Intellectual Property) அப்படியே நகலெடுப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியது. அதாவது, உலகில் உள்ள எந்தவொரு ஃபார்முலாவையும் பிரதி செய்து சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வந்து, அங்கேயே தயாரித்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. மேலும், அந்தப் பணத்தைச் சுவிஸ் வங்கிகளிலேயே பாதுகாப்பாகச் சேமித்துக்கொள்ளவும் முடிந்தது. இதன் காரணமாக, உலகின் மிகச்சிறந்த வேதியியலாளர்கள் அனைவரும் சுவிட்சர்லாந்திற்கு இடம்பெயர்ந்தனர். சாயத் தொழிலில் தொடங்கிய அவர்களின் ஆராய்ச்சி மெல்ல மெல்ல மருந்துத் துறையாக உருவெடுத்தது. இன்று சுவிட்சர்லாந்து உலக நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் 169 பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது.

அடுத்ததாக, சாக்லேட் தயாரிப்பு. சுவிட்சர்லாந்தின் புவியியல் சூழலில் 'கொக்கோ' (Cocoa) மரங்கள் வளர்வதே இல்லை. அப்படி இருந்தும் சுவிஸ் சாக்லேட் எவ்வாறு உலகின் ஆகச்சிறந்த தரக் குறியீடாக (Gold Standard) மாறியது? அதற்கு இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள் காரணமாயின.

1875-இல், 'டேனியல் பீட்டர்' (Daniel Peter) என்பவர் நீண்டகாலமாக இருந்த ஒரு சிக்கலுக்குத் தீர்வு கண்டார். மில்க் சாக்லேட் (Milk Chocolate) தயாரிப்பதற்காக, சுண்டுகாச்சிய பாலையும் (Condensed Milk) கொக்கோவையும் கெட்டுப்போகாதவாறு எவ்வாறு ஒன்றாகக் கலக்க வேண்டும் என்ற வித்தையை அவர் கண்டறிந்தார். இவரே இன்று நாம் அறியும் புகழ்பெற்ற 'நெஸ்லே' (Nestle) நிறுவனத்தின் ஆரம்பகாலப் பங்காளர்களுள் ஒருவராவார். அதன் பிறகு, 'ருடால்ஃப் லிண்ட்' (Rodolphe Lindt) என்பவர் 'கான்சிங்' (Conching) என்ற புதிய செயல்முறையைக் கண்டுபிடித்தார். இந்தச் செயல்முறையின் மூலமே கரடுமுரடான, கசப்பான சாக்லேட்டின் பதம் மாற்றப்பட்டு, நாவில் உருகும் மென்மையான சுவைமிக்க சாக்லேட்டாக உருமாறியது. இதுவே இன்று 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'லிண்ட்' (Lindt) சாக்லேட் நிறுவனமாக உலகை ஆளுகிறது.

இதே உத்தியைத்தான் அவர்கள் கைக்கடிகாரத் துறையிலும் பயன்படுத்தினர். தங்களின் கைகளில் இரும்பு, பித்தளை போன்ற மதிப்பில்லாத உலோகம் மட்டுமே இருந்த நிலையில், அதனைக்கொண்டு மிக நுணுக்கமான கைக்கடிகாரங்களை உருவாக்கி, அதனை பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிப் பொருளாக மாற்றினர். பிரிட்டிஷ் கடிகாரத் தயாரிப்பாளர்கள் பழைய முறைகளையே நம்பியிருந்தபோது, சுவிஸ் தயாரிப்பாளர்கள் சந்தையின் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டனர். பிற்காலத்தில் ஜப்பானின் 'குவார்ட்ஸ் கைக்கடிகாரம்' (Quartz Watch) சந்தைக்கு வந்தபோது கூட, தங்களது உத்தியை மாற்றி, கைக்கடிகாரத்தை வெறும் நேரத்தைக் காட்டும் கருவியாகப் பார்க்காமல், ஒரு ஆடம்பர மற்றும் அழகுச் சாதனப் பொருளாக (Luxury Brand) உலகிற்கு சந்தைப்படுத்தினர். இதனால் 1900-களில் சுவிஸ் வாட்ச் என்பது அன்றைய காலகட்டத்தின் ஐபோன் போன்றதொரு அந்தஸ்தைப் பெற்றது.

இவ்வாறு, நாட்டை உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் இணைத்ததன் மூலமும், முறையான பொருளாதாரக் கொள்கைகளை வளர்ச்சியின் ஆயுதமாகப் பயன்படுத்தியதன் மூலமும், உலகெங்கிலும் உள்ள திறமையாளர்களை ஈர்த்ததன் மூலமும் சுவிட்சர்லாந்து உலகின் ஆகச்சிறந்த பணக்கார நாடாக உருவெடுத்தது. இந்த சுவிட்சர்லாந்தின் பொருளாதாரப் பயணத்திலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் மாற்றியமைக்க வேண்டிய 3 மிக முக்கியமான பாடங்கள் உள்ளன:

1. தற்காலிக தீர்வுகளில் இருந்து நீண்டகால உள்கட்டமைப்பை நோக்கி நகர்தல்:

சுவிட்சர்லாந்திடம் எண்ணெய் இல்லை, தங்கம் இல்லை, எந்தவொரு பெரிய இயற்கை வளமும் இல்லை. அப்படி இருந்தும், அவர்கள் மலையைக் குடைந்து சர்வதேச வர்த்தகப் பாதையை அமைத்து முன்னேறியுள்ளனர். ஆனால், இலங்கையைச் சுற்றி நாலாபுறமும் கடல் இருந்தும், நாட்டிற்குள் எக்கச்சக்கமான இயற்கை வளங்களும் அழகும் இருந்தும், நம்மால் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்கான நீண்டகால உள்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி நாம் இன்னும் சிந்திக்கவில்லை. ஒரு தற்காலிக எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் கூட, வரிசைகளில் நிற்பதைத் தவிர்க்க QR குறியீடு விநியோக முறை வேலை செய்யுமா என்று தற்காலிகத் தீர்வுகளைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது. நமது வர்த்தகங்களும் சரி, கொள்கை முடிவுகளும் சரி, குறுகிய காலத் தேவைகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனவே தவிர, எதிர்காலத்திற்கான நிலையான, பிரம்மாண்டமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதாக இல்லை.

2. மனித மூலதனப் பாதுகாப்பும் 'மூளை வெளுப்பு' (Brain Drain) தடுப்பும்:

உள்கட்டமைப்பு வசதிகளும் முதலீடுகளும் இல்லாதபோது, புதிய வாய்ப்புகளும் திறமைக்கான களங்களும் சுருங்கிவிடுகின்றன. இதன் விளைவாக, நாட்டின் ஆகச்சிறந்த திறமையாளர்களும், படிப்பாளிகளும், படைப்பாளிகளும் தங்களது எதிர்காலம் கருதி வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் 'மூளை வெளுப்பு' (Brain Drain) சூழல் இலங்கையில் தீவிரமடைந்துள்ளது. சுவிட்சர்லாந்து நெருக்கடி காலத்தில் உலகத் திறமையாளர்களைத் தன்பால் ஈர்த்து அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கியது. ஆனால், நாம் நமது சொந்த நாட்டுத் திறமையாளர்களையே தக்கவைக்க முடியாமல் இழந்து வருகிறோம். இந்த மனித மூலதன இழப்பைத் தடுக்காமல் நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.

3. நிலையான மற்றும் தீர்க்கமான பொருளாதாரக் கொள்கைகள்:

சுவிட்சர்லாந்தைச் சுற்றி எத்தனை தடைகளும் புவியியல் பலவீனங்களும் இருந்தபோதிலும், அவை அனைத்தையும் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளாக மாற்றுவதற்கு அவர்கள் தங்களது பொருளாதாரக் கொள்கைகளையே முதன்மை ஆயுதமாகப் பயன்படுத்தினர். ஆனால் நமது நாட்டில், ஒரு சிறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வருவதற்குள் எண்ணற்ற விவாதங்களும் இழுபறிகளும் நீடிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சில ஆண்டுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது, முந்தைய திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு கோப்புகள் தூசு படிந்து புதைக்கப்படுகின்றன. நிலையான, நீண்டகாலப் பொருளாதாரக் கொள்கைகள் இல்லாதவரை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நாம் பெற முடியாது.

1850ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தும் இன்றைய இலங்கையைப் போலத்தான் இருந்தது—வறுமை சூழ்ந்த, முறையான தொடர்புகள் இல்லாத, திறமைகளை இழந்து நின்ற, அப்படியே ஸ்தம்பித்த ஒரு சாதாரண நாடு. ஆனால், அவர்கள் அதிர்ஷ்டத்தை நம்பி அமர்ந்திருக்கவில்லை; மாறாக, அவர்களின் ஒரு தலைமுறை, அடுத்த 200 வருடங்களுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு தீர்க்கமாக காய் நகர்த்தியது. அந்த நீண்டகாலப் பயணத்தில் அவர்கள் ஒரு நொடி கூட பின்வாங்கவில்லை.

இன்று நம்முன் உள்ள ஒரே கேள்வி இதுதான்... சாபங்களை வரமாக மாற்றிய சுவிட்சர்லாந்தின் பொருளாதாரப் பாதையைப் பின்பற்றி, தற்காலிகத் தீர்வுகளிலிருந்து விடுபட்டு, நிலையான நீண்டகாலப் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களை நோக்கி நமது நாடும் பயணிக்கத் தயாராக உள்ளதா?

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

மத்தள விமான நிலையக் கடனின் வருடாந்திர வட்டி செலவு சுமார் ரூ. 2 பில்லியன்

இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகவும், சர்வதேச உலகோடு நாட்டை இணைக்கும் பிரதான நுழைவாயிலாகவும் விளங்குவது நமது விமான நிலையங்கள் ஆகும். சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வர்த்தகம் என பல்துறைகளிலும் நாட்டின் வருமானத்தை ஈட்டித்தரும் இந்த நுழைவாயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு 'விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனத்திடம்' (AASL) ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கணக்காய்வாளரின் அறிக்கையானது, இந்த நிறுவனத்தின் நிதியியல் நிலைமைகள், முகாமைத்துவத் திறன்கள் மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. சாதாரண பொதுமக்களின் வியர்வையிலும் வரிப்பணத்திலும் இயங்கும் தேசத்தின் சொத்துக்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த அறிக்கை ஒரு திறவுகோலாக அமைகிறது.

வருமானமும் இலாபமும்: எண்களுக்குப் பின்னாலான உண்மைகள்

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் வருமானத்தை மட்டுமே சார்ந்திருப்பதில்லை; அந்த வருமானம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதில்தான் அதன் உண்மையான வெற்றி தங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2023 இல் 38.2 பில்லியன் ரூபாவாக இருந்த வருமானம், 2024 இல் 43.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவைகளின் மீட்சி மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்பட்டதாகும்.

ஆனால், இந்த எண்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்யும்போது, நிறுவனத்தின் தேறிய இலாபத்தில் ஒரு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 2023 ஆம் ஆண்டில் 28.1 பில்லியன் ரூபாவாக இருந்த தேறிய இலாபம், 2024 ஆம் ஆண்டில் 21.1 பில்லியன் ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. வருமானம் அதிகரித்த நிலையிலும் இலாபம் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான காரணங்களாக, நிதியியல் வருமானத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் அதிகரித்த வரிச் சுமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம். குறிப்பாக, 2023 இல் 5.5 பில்லியன் ரூபாவாக இருந்த வருமான வரி, 2024 இல் 7.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், அந்நியச் செலாவணி மாற்று விகிதங்களில் ஏற்பட்ட தளம்பல்கள் காரணமாக, கடன்களை மீளச் செலுத்துவதிலும் வைப்புக்களைப் பேணுவதிலும் ஏற்பட்ட பரிமாற்ற நட்டங்களும் இந்த இலாப வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. இது, நிறுவனத்தின் உள்ளகக் கட்டமைப்புக்கள் எவ்வளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதையும், புறக்காரணிகளின் தாக்கத்தை எதிர்கொள்ளப் போதுமான ஆயத்தங்கள் இல்லை என்பதையும் உணர்த்துகிறது.

தேசத்தின் வளங்களை நிர்வகிக்கும் ஒரு நிறுவனம், அதன் இலாப நட்டங்களைக் கணக்கிடும் போது வெறும் எண்களாக மட்டுமே பார்க்காமல், அவை ஒவ்வொரு இலங்கையரின் வாழ்வாதாரத்துடனும் தொடர்புடையவை என்ற பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்.

மத்தள விமான நிலையம்: தேசத்தின் வளங்களை விழுங்கும் ஒரு பெருங்கனவு

இலங்கையின் பொருளாதார வரலாற்றில் எக்காலத்திலும் மறக்க முடியாத, அதேவேளை மிகவும் வேதனையான ஒரு அத்தியாயம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) ஆகும். ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு ஒரு மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கோடு அமைக்கப்பட்ட இந்த விமான நிலையம், கடந்த ஆறு வருடங்களில் வெறும் 321,577 பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது. இது எதிர்பார்ப்பின் ஒரு சிறு துளியை மட்டுமே தொட்டுள்ளது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.

இந்த விமான நிலையத்தின் நிதியியல் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகும். 2024 ஆம் ஆண்டில் இதன் தொழிற்பாட்டுச் செலவு 3,600.8 மில்லியன் ரூபாவாக அமைந்திருந்த அதேவேளை, அது ஈட்டிய வருமானம் வெறும் 242.2 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே. இதனால், 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 3,358.6 மில்லியன் ரூபா தொழிற்பாட்டு நட்டத்தை இந்த விமான நிலையம் சந்தித்துள்ளது. வரிகளுக்குப் பின்னரான தேறிய நட்டம் 879.7 மில்லியன் ரூபாவாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2024 ஆம் ஆண்டின் இறுதிவரை ஒட்டுமொத்தமாக 39,369 மில்லியன் ரூபா தேறிய நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் வியர்வையில் கட்டியெழுப்பப்பட்ட 36,564 மில்லியன் ரூபா (அதாவது சுமார் 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான பாரிய முதலீடு, எவ்வித பயனுமற்று முடங்கிக் கிடக்கிறது. அதுமட்டுமன்றி, இதற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடனுக்காக, வருடந்தோறும் 2,053 மில்லியன் ரூபாவை வட்டியாக நிறுவனம் செலுத்தி வருகிறது. ஒருபக்கம் நாட்டின் உள்ள பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழலில், மறுபக்கம் எந்தவொரு பயணமுமற்ற ஒரு வெற்று விமான நிலையத்திற்காக பில்லியன் கணக்கில் மக்களின் பணம் வட்டியாகச் செலுத்தப்படுவது ஒரு மாபெரும் சமூக அநீதியாகும்.

கட்டுநாயக்க விமான நிலைய விஸ்தரிப்பு: முடங்கிக்கிடக்கும் வளர்ச்சித் திட்டங்கள்

பயணிகளின் நெரிசலைக் குறைத்து, சர்வதேச தரத்திலான சேவைகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIADP) இரண்டாம் கட்ட விஸ்தரிப்புத் திட்டமும் பாரிய சவால்களையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் 6 மில்லியன் பயணிகளைக் கையாளுவதற்கான வசதியை 12 மில்லியனாக அதிகரிக்கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு இத்திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கான ஆலோசனைச் சேவைகளுக்காக 344.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. பின்னர், பயணிகளின் கொள்ளளவை 15 மில்லியனாக அதிகரிக்கும் வகையில் திட்டம் திருத்தப்பட்டதால், ஆரம்பத்தில் செலவிடப்பட்ட அந்தப் பணம் எவ்வித பயனுமற்று வீணடிக்கப்பட்டது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரமைப்பின் (JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை, ஜப்பானின் 'தைசே' (Taisei Corporation) நிறுவனம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றது. சுமார் 105 பில்லியன் ரூபா பெறுமதியான இந்த ஒப்பந்தம், 2023 டிசம்பரில் நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாடு எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாக, நிதியமைச்சினால் 2022 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தும் சுற்றறிக்கையைத் தொடர்ந்து, JICA நிறுவனம் தனது நிதியளிப்பை நிறுத்தியது. இதனையடுத்து, 2022 டிசம்பர் 9 ஆம் திகதியுடன் தைசே நிறுவனம் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேறியது.

இந்தத் திட்டம் இடைநிறுத்தப்படும் போது, நிர்மாணப் பணிகளுக்காக 37,311.3 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்ததுடன், எதிர்பார்க்கப்பட்ட 30 சதவீத வேலைப்பாடுகளுக்குப் பதிலாக வெறும் 5.44 சதவீத வேலைகளே நிறைவடைந்திருந்தன. ஒப்பந்தம் முறிவடைந்ததனால், பயன்படுத்தப்படாத 1,995 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டுமானப் பொருட்கள் தனியார் களஞ்சியசாலைகளில் தேக்கமடைந்துள்ளன; இவற்றிற்கான வாடகையாக மாத்திரம் 2024 இறுதிக்குள் 60.3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும், வேலைகள் இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில், திட்ட முகாமைத்துவ ஊழியர்களுக்கான சம்பளமாக 7.5 மில்லியன் ரூபாவும், கடனுக்கான வட்டியாக 43.8 மில்லியன் ரூபாவும் மூலதனமாகத் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் பொறுப்பற்ற நிதியியல் முகாமைத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நிர்வாகச் சீர்கேடுகளும் மக்களின் பணமும்

விமான நிலைய முகாமைத்துவத்தில் காணப்படுகின்ற வெளிப்படைத்தன்மையற்ற தன்மையும், நிதி மோசடிகளும் இந்த அறிக்கையின் ஊடாகத் தெளிவாகப் புலப்படுகின்றன. மக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள நிறுவனம், தனது சொந்தப் பணியாளர்களினதும் நிர்வாகிகளினதும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளது. உதாரணமாக, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நிறுவனத்தின் வாகனங்கள் சம்பந்தப்பட்ட 50 விபத்துக்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அவற்றுக்கான முறையான விசாரணைகள் அல்லது சட்டரீதியான நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. அதேபோல, நிறுவனத்தில் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட சுமார் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான 12 வாகனங்கள் காணாமல் போயுள்ளன; அவை எங்குள்ளன என்பதை நிர்வாகத்தால் சரிபார்க்க முடியவில்லை.

பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் கடன்கள் விடயத்திலும் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளன. சுற்றறிக்கைகளின் வழிகாட்டுதல்களை மீறி, 277 அதிகாரிகளுக்கு அவர்கள் தகுதிபெற்ற அளவை விட அதிகமாக எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது; இதனால் நிறுவனத்திற்கு 67 மில்லியன் ரூபா மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட கடன்களில், மீளச் செலுத்தும் காலம் முடிவடைந்தும் 11 ஊழியர்களிடமிருந்து 1.1 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இன்னும் அறவிடப்படாமல் உள்ளது. மேலும், 2023 ஏப்ரல் மாதம் 3,589 ஊழியர்களுக்கு தலா 50,000 ரூபா வீதம் முன்கூட்டிய போனஸ் தொகையாக 178.8 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. எனினும், வருட இறுதியில் வருடாந்த போனஸான 125,000 ரூபாவை வழங்கும் போது, முன்னர் வழங்கப்பட்ட முன்கூட்டிய தொகையைக் கழிக்காமல் முழுமையாக 664.6 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகள், ஒரு பொது நிறுவனத்தின் நிதி எவ்வாறு வீணடிக்கப்படுகிறது என்பதற்குச் சான்றாகும்.

நிதி மோசடி: விமான நிலைய முகாமைத்துவப் பிரிவில் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர் ஒருவரால், நுழைவு அனுமதிகளை வழங்கியதன் மூலம் பெறப்பட்ட 14.8 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியாகும் வரையிலும் அந்தப் பணம் மீளப் பெறப்படவில்லை.

கணக்காய்வு முரண்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியம்

நிறுவனத்தின் கணக்கீட்டுப் பதிவேடுகளுக்கும் உண்மையான தரவுகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் நிலவுவது, அதனது நிதியியல் அறிக்கைகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உதாரணமாக, 2023 ஆம் ஆண்டின் சொத்து சரிபார்த்தல் அறிக்கையின்படி, நிறுவனத்தில் இல்லாத 529.9 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களின் மூலப் பெறுமதி 1,952 மில்லியன் ரூபாவாகும்; ஆனால் இதற்கான எவ்வித திருத்தங்களும் கணக்குப் புத்தகங்களில் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோன்று, ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 52.1 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன அம்பியூலன்ஸ் மற்றும் குப்பை அகற்றும் வாகனம் என்பன நிறுவனத்தின் சொத்துக்களாகக் கணக்கிடப்படவில்லை.

நிலையான வைப்புக்கள் தொடர்பிலும் பாரிய குழப்பங்கள் நிலவுகின்றன. நிறுவனத்தின் நிதியியல் அறிக்கைகளின்படி, நிலையான வைப்பு முதலீடுகள் 100,970 மில்லியன் ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் வங்கிகளின் உறுதிப்படுத்தலின்படி அது 100,677.3 மில்லியன் ரூபாவாகவே காணப்படுகின்றது. இந்த 292.7 மில்லியன் ரூபா வித்தியாசத்திற்கான காரணத்தைக் கண்டறியவோ, அதனைச் சமன் செய்யவோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மேலும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அறவிடப்படும் பயணிகளின் வெளியேற்ற வரிக்கான (Embarkation Levy) கணக்கீட்டில், அதிகாரசபையின் பதிவுகளுக்கும் AASL நிறுவனத்தின் பதிவுகளுக்கும் இடையில் 4,697.1 மில்லியன் ரூபா வித்தியாசம் காணப்படுகிறது. அரச திணைக்களங்களுக்கிடையிலான இத்தகைய பாரிய கணக்கு முரண்பாடுகள், வினைத்திறனற்ற நிர்வாகக் கட்டமைப்பையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

சேவைத் தரமும் பயணிகளின் அதிருப்தியும்

விமான நிலையத்தின் பிரதான நோக்கமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதாகும். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, நாட்டை வாழவைக்கும் நமது புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது, அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், வாடிக்கையாளர் முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 977 வாடிக்கையாளர் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை, பயணப் பொதிகள் காணாமல் போதல், பொதிகள் சேதமடைதல் மற்றும் தவறாகக் கையாளப்படுதல் போன்றவையாகும். இத்தனை முறைப்பாடுகள் வந்த பின்னரும், இந்தச் சிக்கல்களை முழுமையாகத் தீர்ப்பதற்கான காத்திரமான தடுப்பு நடவடிக்கைகள் எவையும் நிறுவனத்தால் எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

அரச திறைசேரிக்கான பங்களிப்பும் தேசிய பொறுப்பும்

அரச நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தில் ஒரு பகுதி தேசத்தின் அபிவிருத்திக்காகத் திறைசேரிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது நியதி. பொது நிறுவனங்களுக்கான சுற்றறிக்கையின்படி, வரியின் பின்னரான இலாபத்தில் 30 சதவீதத்தை திறைசேரிக்குச் செலுத்த வேண்டும். இதற்கமைவாக, கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2022, 2023 மற்றும் 2024) AASL நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையானது 16,280 மில்லியன் ரூபாவாகும். ஆனால், நிறுவனம் வெறும் 7,336 மில்லியன் ரூபாவை மட்டுமே செலுத்தியுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட தொகையில் வெறும் 45 சதவீதம் மட்டுமேயாகும். நாட்டு மக்கள் பாரிய வரிச் சுமையால் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், இலாபமீட்டும் ஒரு அரச நிறுவனம் தனது தேசியப் பொறுப்பிலிருந்து இவ்வாறு விலகியிருப்பது கடுமையான விமர்சனத்திற்குரியது.

அதுமட்டுமன்றி, 2023 பெப்ரவரியில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, 30,423 மில்லியன் ரூபா (102.4 மில்லியன் அமெரிக்க டொலர்) வெளிநாட்டுக் கடன் தொடர்பில் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு, கடனுக்கான தவணைப் பணத்தை அரச திறைசேரிக்கு நிறுவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இந்த நிபந்தனையையும் நிறுவனம் நிறைவேற்றத் தவறியுள்ளது.

எதிர்காலத்தை நோக்கிய பயணமும் சீர்திருத்தங்களுக்கான தேவையும்

விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் இந்த இரு வருடப் பயணமானது, சவால்களும் நிர்வாகத் தவறுகளும் நிறைந்த ஒரு பாதையாகவே அமைந்துள்ளது. வருமானம் அதிகரித்தாலும், முறையற்ற முகாமைத்துவம், திட்டமிடப்படாத பாரிய முதலீடுகள் (குறிப்பாக மத்தள விமான நிலையம்), மற்றும் கணக்காய்வு முரண்பாடுகள் ஆகியவை நிறுவனத்தின் அத்திவாரத்தையே அசைத்துப் பார்க்கின்றன. ஒரு நாட்டின் நுழைவாயிலாகத் திகழும் இந்த நிறுவனம், தனது தவறுகளிலிருந்து பாடம் கற்று, அதிக பொறுப்புணர்வுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மக்களின் பணமும் தேசத்தின் வளங்களும் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, உண்மையான தேசிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வினைத்திறனான முகாமைத்துவச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே நாளைய தலைமுறைக்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய நன்மையாகும்.


அருள்கார்க்கி

இலங்கைக்கு வரப்போகும் Super El-Nino!

2022-ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் எழுதப்பட்ட மிக இருண்டதொரு பொருளாதாரப் பக்கம். அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை, எரிபொருள் வரிசைகள், மருந்துத் தட்டுப்பாடு என ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்த அந்தப் பாரிய வீழ்ச்சியின் வடுக்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை. கடுமையான வரிச் சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகள் என ஒருவாறு பொருளாதாரம் மீண்டுவரத் தட்டுத்தடுமாறி முயற்சிக்கும் இந்த வேளையில், இயற்கை நமக்கு மற்றுமொரு பாரிய சோதனையைத் தயார் செய்துள்ளது.

ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமடையவுள்ள ‘சூப்பர் எல்-நினோ’ (Super El Niño) எனும் அதிவெப்பக் காலநிலை, இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை உலுக்கப் போகிறது என உலக வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பொதுவாக, காலநிலை மாற்றங்களை நாம் வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த அல்லது அறிவியல் சார்ந்த பிரச்சினையாகவே பார்க்கிறோம். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, காலநிலை என்பது நமது நாட்டின் GDP, பணவீக்கம், அந்நியச் செலாவணி மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தோடு நேரடியாகப் பின்னிப் பிணைந்த ஒரு பொருளாதாரக் காரணியாகும். காரணம், இலங்கையின் அமைவிடம். வருடம் முழுதும் வெயிலும் மழையும் கிடைக்கிறது. மத்திய கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அதிக வெப்பமும் இல்லாமல், அதிக குளிரும் இல்லாமல் சமமாக கிடைக்கும் வளமான நாடு என்று புவியியல் பாடத்தில் படித்த ஞாபகம் உங்களுக்கு வந்து இருக்கலாம். அந்த அளவு, புவியியல் ரீதியாக, விவசாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் இலங்கை இருக்கிறது. இந்நிலையில், வரப்போகும் Super El Niño ஒரு பெரு வரட்சியை உருவாக்கலாம் என்று எச்சரிப்புகள் வெளியாகின்றன.

1. இயற்கையின் சீற்றம்: 'சூப்பர் எல்-நினோ' என்றால் என்ன?

புவியியல் ரீதியாக, தென் அமெரிக்காவின் மேற்குப் கடற்கரைப் பகுதியில் (பெரு நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்) இருந்து பசுபிக் பெருங்கடலை நோக்கி வீசும் காற்றுகளின் (Trade Winds) வேகம் குறையும்போது, அக்கடல் பகுதியில் வெப்பம் குவிகிறது. இதனால் மத்திய பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக அதிகம் வெப்பமடைகிறது. இந்த உலகளாவிய வானிலை நிகழ்வுதான் 'El Niño'.

ஆனால், தற்போது உருவாகி வருவது சாதாரண El Niño அல்ல, வீரியம் மிக்க 'Super El Niño'. இதன் நேரடிப் பாதிப்பாக, தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாக இலங்கையில் வீசும் தென்மேற்கு பருவக்காற்று கடுமையாகப் பலவீனமடையலாம். மழைப்பொழிவு இயல்பான அளவை விட வெகுவாகக் குறைந்து, வறண்ட காலநிலையும், அதீத வெப்பநிலையும் நீடிக்கலாம்.

2. விவசாயப் பேரழிவும் பொருளாதாரச் சங்கிலியும்

இலங்கையின் விவசாய அச்சாணியாக விளங்கும் அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற உலர் வலய மாவட்டங்கள் தான் நாட்டின் ஒட்டுமொத்த உணவுத் தேவைக்கான நெல் உற்பத்தியை மேற்கொள்கின்றன. Super El Niñoவினால் இந்த மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வற்றத் தொடங்கும்போது, அது ஒரு சங்கிலித் தொடரான பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும்:

நீர் பற்றாக்குறையால் பயிர்ச்செய்கை பாதியாகக் குறையலாம். அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடையும் போது, சந்தையில் தேவை அதிகரித்து விநியோகம் குறையும். இதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும், இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நுகர்வு திறனைக் கடுமையாகப் பாதிக்கும்.

பருவப்பெயர்ச்சி காலங்களில் இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் சுமார் 30% முதல் 35% வரை நீர்மின்சாரம் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. வறட்சியால் சமனலவெவ, விக்டோரியா, ரந்தெனிகல போன்ற பிரதான அணைகளின் நீர்மட்டம் குறையும் போது நீர்மின் உற்பத்தி மொத்தமாக முடங்கும்.

மின்சாரத் தேவையை ஈடுசெய்ய அரசாங்கம் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படும் டீசல் மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். ஏற்கனவே தட்டுப்பாடாக இருக்கும் டொலர்களை மீண்டும் எரிபொருள் இறக்கமதிக்காகச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, அது இலங்கை ரூபாயின் பெறுமதிக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

3. கொள்கை முடக்கங்களும் தடையற்ற சந்தையின் (Free Market) அவசியமும்

இயற்கை தரும் சவால்களை விட, நமது அரசாங்கத்தின் இறுக்கமான, முதிர்ச்சியற்ற கொள்கைகளே இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கப் போகின்றன. 2021-ல் இரசாயன உரங்களுக்கு ஒரே இரவில் விதிக்கப்பட்ட அவசரத் தடை, நமது நாட்டின் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் 25% வரை எப்படிச் சீரழித்தது என்பதை நாம் அறிவோம். அந்தப் பாதிப்பில் இருந்து விவசாயிகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இன்று உரத்தடை நீக்கப்பட்டிருந்தாலும், தடையற்ற சந்தை (Free Market) முறைமைக்கு இலங்கை இன்னும் முழுமையாக மாறவில்லை.

அரசாங்கம் விவசாயப் பொருட்களுக்கு விலை கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அது தற்காலிகமாக நுகர்வோருக்கு உதவுவது போல் தோன்றலாம். ஆனால் நீண்ட நோக்கில், உற்பத்திச் செலவு அதிகரிக்கும் வறட்சி காலங்களில் விவசாயி தனது பொருளைச் சரியான விலைக்கு விற்க முடியாவிட்டால், அவர் நஷ்டமடைந்து அடுத்த முறை பயிர் செய்வதையே நிறுத்திவிடுவார். இது சந்தையில் இன்னும் பெரிய தட்டுப்பாட்டை உருவாக்கும்.

சர்வதேச சந்தையில் வறட்சியைத் தாங்கக்கூடிய வீரியமிக்க விதைகள் (Drought-resistant seeds) தாராளமாகக் கிடைத்தாலும், நமது நாட்டின் கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரத்துவத் தாமதங்கள் காரணமாக அவை விவசாயிகளுக்குச் சென்றடைவதில்லை. நாம் இன்னும் 40 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய விவசாய முறைகளையும், நெல் வகைகளையும் மட்டுமே நம்பியிருக்கிறோம்.

4. தொழில்நுட்பப் பற்றாக்குறையும் முதலீட்டுத் தடைகளும்

சமீபத்தில்தான் விவசாயத்தில் 'ட்ரோன்' (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த ஆரம்பக்கட்ட சோதனைகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், உலக நாடுகள் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி நீர்ப்பாசனம் மற்றும் தரவுப் பகுப்பாய்வு மூலம் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட்டன.

சொட்டு நீர் பாசனம் மற்றும் வறட்சி காலங்களில் விளைச்சலைப் பாதுகாக்கும் நவீன களஞ்சிய வசதிகளை (Cold Storage) பெரிய அளவில் உருவாக்க அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை. இவ்வாறான சூழலில், தனியார் முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும். ஆனால், பழைய சோசலிசக் கொள்கைக் கட்டமைப்புகளும், அதிகப்படியான அரசாங்கத் தலையீடுகளும் இப்புதிய தொழில்நுட்ப முதலீடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

5. நாம் செய்ய வேண்டிய அவசரக் காலப் பொருளாதார நடவடிக்கைகள்

நெருக்கடி நம் வாசலில் நிற்கிறது. இப்போதிலிருந்தே நாம் போர்க்கால அடிப்படையில் சில கொள்கை மாற்றங்களைச் செய்ய வேண்டும்:

பயிர் பல்வகைப்படுத்தல்: வரப்போகும் பெரும்போக பயிர்ச்செய்கை பருவத்தில், அரசாங்கம் விவசாயிகளை நெல் உற்பத்தியை மட்டுமே நம்பியிருக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது. குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய மாற்றுப் பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், அதற்கான உலகத்தரம் வாய்ந்த விதைகள் சந்தையில் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

முன்கூட்டிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் அரிசி, உரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை இப்போதே சுதந்திர வர்த்தக அடிப்படையில் செய்துகொள்ள வேண்டும். நெருக்கடி உச்சமடைந்து சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் போது அவசர விலைக்கு வாங்குவதைத் தவிர்க்க இதுவே ஒரே வழி.

2022-ஆம் ஆண்டின் பொருளாதாரச் சரிவு என்பது முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவாக கொள்ளலாம். ஆனால், இந்த Super El Niño என்பது இயற்கையின் சவால்.

இயற்கையின் முடிவுகளை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் அதன் பாதிப்புகளின் தீவிரத்தைத் துல்லியமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தடையற்ற சந்தை முறைமைகளின் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இப்போதும் சந்தையைக் கட்டுப்படுத்த நினைக்கும் காலாவதியான கொள்கைகளை இறுகப் பற்றிக்கொள்ளப் போகிறோமா அல்லது நவீன பொருளாதார மாற்றங்களுக்குத் தயாராகப் போகிறோமா என்பதில் தான் இலங்கையின் உணவுப் பாதுகாப்பும், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் எதிர்காலமும் தங்கியுள்ளது. ஆனால் நமக்கு எப்போதும் போல நேரம் மிகக் குறைவாகவே உள்ளது!

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

தவறான தகவல்கள்: டிஜிட்டல் சவால்களும் பொருளாதார தாக்கமும்

By Milroy Anthony

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தகவல்கள் மிக வேகமாகப் பரவுகின்றன. குறிப்பாக, பேரிடர் காலங்களிலும் இக்கட்டான சூழல்களிலும் தவறான தகவல்கள் (Misinformation) மிக எளிதாகச் சமூகத்திற்குள் ஊடுருவி, குழப்பங்களை விளைவிப்பது மட்டுமன்றி மனிதாபிமான உதவிகளை தாமதவெடுத்துவதுடன் பொருளாதார ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

1. இக்கட்டான சூழல்களும் தகவல்களும்

சமூகத்தில் ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும்போது, மக்களுக்கு என்ன நடக்கிறது என்ற தெளிவான அறிவு இருப்பதில்லை. அந்த நேரத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை மக்கள் உண்மை என்று நம்பி, அடுத்த சில வினாடிகளில் அதனைப் பகிர்ந்து விடுகின்றனர,. இவ்வாறான தவறான புரிதல்கள் சில வாரங்கள் அல்லது ஒரு மாதம் கடந்த பின்னரே, அது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தெரியவருகிறது.

2. புவிசார் அரசியலும் தகவல் கையாளுதலும் (FIMI)

வெளிநாட்டு தவறான தகவல்களை உள்நாட்டுக்குள் கொண்டு வருதல் அல்லது தவறான முறையில் அணுகச் செய்தல் (Foreign Information Manipulation and Interference - FIMI) தற்போது ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஒரு நாட்டின் கொள்கைகளுக்கு ஏற்ப, புவிசார் அரசியல் நலன்களுக்காக சமூக ஊடகங்கள் வழியாகத் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன,.

  • உதாரணம்: இலங்கைக்கு அண்டை நாடு ஒன்று வழங்கிய நிவாரணப் பொருட்களில், பழைய காலாவதித் திகதி இருந்த ஒரு பையை மட்டும் வைத்து, அந்த நாடு காலாவதியான பொருட்களை வழங்கியதாகச் சமூக ஊடகங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும் ஒரு முயற்சியாகும்.

3. அல்கோரிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம்

முன்பு ஊடகங்கள் அரசாங்கத்தின் அல்லது சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், இன்று சமூக ஊடக அல்கோரிதம்கள் (Algorithms) நாம் எதை விரும்புகிறோமோ அதையே நமக்குக் காட்டுகின்றன. இது நடுநிலையான ஊடகவியலுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அதேபோல, செயற்கை நுண்ணறிவு (AI) என்பது தானாகச் சிந்திப்பதில்லை; இணையத்தில் மக்கள் எதைப் பதிவிடுகிறார்களோ அதை வைத்தே பதில்களை வழங்குகிறது,. ஒரு பொய் செய்தி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டால், AI தேடுதல்களிலும் அந்தப் பொய்யே உண்மையாகக் காட்டப்படும் அபாயம் உள்ளது,.

4. சமூக ஊடகங்களின் ஆதிக்கம் மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகள்

இன்று மக்கள் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளை விட சமூக ஊடகங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இது சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது:

  • ஆழமான கருத்துக்களை விட, கவர்ச்சியான மற்றும் தரம் குறைந்த நகைச்சுவை உள்ளடக்கங்களுக்கே (Glamour and Shallow Content) அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது.

  • தவறான தகவல்கள் மற்றும் கையாளுதல்கள் (Manipulation) மூலம் சமூகத்தின் ஒழுக்க விழுமியங்கள் சிதைக்கப்படும் அபாயம் உள்ளது,.

5. நாம் செய்ய வேண்டியது என்ன?

தவறான தகவல்களைக் கட்டுப்படுத்துவதில் பிரதான ஊடகங்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது,. ஒரு செய்தி உண்மையா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்த பின்னரே வெளியிட வேண்டும்,.இல்லாவிட்டால் பிழையான தகவல்களினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீள்கட்டமைப்பு தாமதப்படுத்தப்படுவதுடன் பொருளாதார மீழ்ச்சியும் பாதிக்கப்படலாம்

ஆகவே , பொதுமக்களாகிய நாமும் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்:

  • சமூக ஊடகங்களில் நாம் எவற்றைப் பார்க்கிறோம், யாரைப் பின்தொடர்கிறோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  • குறித்த நபர்கள் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக மறுபரிசீலனை செய்யவேண்டும் .

  • செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பம் வளர வளர, தகவல்களைப் பகுத்தறியும் மனித சுய சிந்தனை தேவையும் தற்போது அதிகமாக உள்ளது. தவறான பரப்புரைகள் ஒரு சமுதாயத்தின் கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் சிதைக்கக்கூடும் என்பதால், டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் 2025 வருடாந்த பொருளாதார ஆய்வு: ஒரு சுருக்கமான பார்வை

கடந்த ஏப்ரல் மாதம் (இலங்கை மத்திய வங்கி) தனது 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சில முக்கிய விடயங்களை இந்த கட்டுரையின் ஊடாக சுருக்கமாக வழங்குவதே எமது நோக்கமாகும். இந்த அறிக்கை பிரதானமாக பின்வரும் காரணிகள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது. அவை:

  1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

  2. நாணயக் கொள்கை நிலைப்பாடு

  3. சந்தை வட்டி வீதங்கள்

  4. வெளிநாட்டுத் துறையின் செயல்திறன்

  5. தனியார் துறைக்கான கடன்கள்

  6. பிரதான பணவீக்கம் (Headline Inflation)

  7. நிதித்துறை (Fiscal Sector)

  8. நிதிசார் துறை (Financial Sector)

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளையும் ஒப்பிடுகையில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Real GDP) 5% மட்டத்தில் தக்கவைத்துக் கொள்ள முடிந்துள்ளது. அதற்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒவ்வொரு துறைகளும் வழங்கிய பங்களிப்பை சதவீத அடிப்படையில் பார்க்கும்போது, அதிகபட்ச பங்களிப்பாக கைத்தொழில் துறை 7.8% பங்களிப்பை வழங்கியுள்ளது. ஏனைய துறைகளான விவசாயத்துறை மற்றும் சேவைத்துறை முறையே 1.4% மற்றும் 3.3% என்ற அளவில் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளன.

இந்த இரண்டு ஆண்டுகளில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Nominal GDP) வளர்ச்சி பதிவாகியுள்ளது. அதாவது, 2024ஆம் ஆண்டில் 30.1 டிரில்லியன் ரூபாவாக இருந்த பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025ஆம் ஆண்டில் 32.8 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பு அமெரிக்க டாலர்களில், 2024ஆம் ஆண்டில் 99.6 பில்லியனாகவும், 2025ஆம் ஆண்டில் 108.8 பில்லியனாகவும் காட்டப்பட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) 5000 அமெரிக்க டாலர்களாகக் காணப்பட்டதுடன், இது 2024ஆம் ஆண்டின் மதிப்பான 4546 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியாகும்.

2. நாணயக் கொள்கை நிலைப்பாடு

2025ஆம் ஆண்டின் பெரும்பகுதியில், இலங்கை மத்திய வங்கியானது நடுத்தர கால விலை ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக ஒரு தளர்த்தப்பட்ட (இணக்கமான) நாணயக் கொள்கை நிலைப்பாட்டைப் பேணியது. இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வட்டி வீதக் குறைப்புகளினால் உருவான குறைந்த வட்டி வீதச் சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், சந்தை நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் நிதி நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் உதவியது. விநியோகத் தரப்புக் காரணிகளால் பணவீக்கம் குறைந்த மட்டத்தில் காணப்பட்டதோடு, தற்காலிகமானதொரு பணவாட்ட (Deflation) நிலைக்குள்ளும் பொருளாதாரம் பிரவேசித்தது.

3. சந்தை வட்டி வீதங்கள்

2025ஆம் ஆண்டிற்குள் சந்தை வட்டி வீதங்கள் பொதுவாகக் குறையும் போக்கைக் காட்டியிருந்தன. இது தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டையும் மேம்பட்ட மா பொருளாதார (Macroeconomic) நிலைமையையும் பிரதிபலிக்கிறது. குறுகிய கால பணச் சந்தை வீதங்கள், ஒருநாள் கொள்கை வட்டி வீதத்துடன் பரந்தளவில் ஒத்துப்போனதுடன், வர்த்தக வங்கிகளின் கடன் மற்றும் வைப்பு வீதங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்தன. ஆண்டின் பிற்பகுதியில், உள்நாட்டுப் பணச் சந்தையில் அதிகப்படியான திரவத்தன்மை (Excess Liquidity) காணப்பட்டதால், அந்த உபரித் திரவத்தன்மையை உள் வாங்கி கொள்வதற்கும் குறுகிய கால வட்டி வீதங்களின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் மத்திய வங்கி மறுவிற்பனை ஏலங்களை (Reverse Repo Auctions) நடாத்தத் தூண்டப்பட்டது.

4. வெளிநாட்டுத் துறையின் செயல்திறன்

இது தொடர்பாக மிகக் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், வர்த்தக சமநிலைப் பற்றாக்குறை (Trade Deficit) விரிவடைந்துள்ளமையாகும். 2024ஆம் ஆண்டில் 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை, 2025ஆம் ஆண்டளவில் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளது. நாட்டிற்கு வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தரும் முக்கிய வழிகளில் ஒன்றான சுற்றுலாத்துறை, 2024ஆம் ஆண்டைப் போலவே 2025ஆம் ஆண்டிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.06 மில்லியனிலிருந்து 2.36 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுப் பணப் பிரேஷணங்களில் (Remittances) குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டில் இருந்த 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, 2025ஆம் ஆண்டில் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (Gross Official Reserves), 2025இல் 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சியடைந்தது. இலங்கை ரூபாயின் நடத்தை 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் ஒரு பின்னடைவைக் காட்டுகிறது. அதாவது, 2024ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க டாலருக்கு 292.58 இலங்கை ரூபாய் என்ற மதிப்பு பதிவாகியிருந்த நிலையில், 2025இல் அந்த மதிப்பு ஒரு டாலருக்கு 309.99 ரூபாவாகக் குறிக்கப்பட்டது. அதற்கமைய, 2024ஆம் ஆண்டில் ரூபாய் அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.7% இனால் அதிமதிப்பீட்டிற்கு (Appreciation) உள்ளாகியிருந்த நிலையில், 2025இல் அது 5.6% இனால் அவமதிப்பீட்டிற்கு (Depreciation) உள்ளாகியுள்ளது. ஒரு சாதகமான விடயமாக, 2025ஆம் ஆண்டில் உபரி நடப்புக் கணக்கு (Current Account Surplus) அதிகரித்தமையைக் குறிப்பிடலாம். இது 1.2 பில்லியனிலிருந்து 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான ஒரு உயர்வாகும்.

5. தனியார் துறைக்கான கடன்கள்

2025ஆம் ஆண்டில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான விரிவாக்கம் பதிவாகியுள்ளது. குறைந்த வட்டி வீதங்கள், மேம்பட்ட வணிக மனோநிலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பியமை என்பன இதற்குக் காரணங்களாக அமைந்தன. வருடாந்த பொருளாதார ஆய்வின்படி, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் இவ்வருடத்தில் சுமார் 2.1 டிரில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், இது வரலாற்றில் பதிவான அதிகூடிய வருடாந்த விரிவாக்கத்தைக் குறித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், வாகன இறக்குமதி உட்பட நிதியளிப்புக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, குறிப்பாக 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் தனியார் துறைக்கான கடன் வளர்ச்சி வேகமடைந்தது. நிதி ஒருங்கிணைப்பு (Fiscal Consolidation) காரணமாக அரசாங்கத்தின் கடன் வாங்கும் தேவைகள் குறைந்தமை, வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கான கடன் வழங்கலை விரிவுபடுத்துவதற்கு வங்கிகளுக்கு அதிக இடத்தை உருவாக்கியது.

6. பிரதான பணவீக்கம் (Headline Inflation)

2025ஆம் ஆண்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டு மட்டத்திலேயே காணப்பட்டது. கடந்த கால நெருக்கடி காலங்களில் கட்டுப்பாடின்றி மிக வேகமாக மாறுபட்டுக் கொண்டிருந்த பணவீக்கம், 2023 மற்றும் 2024 காலப்பகுதிகளில் எடுக்கப்பட்ட சரியான கொள்கை முடிவுகள் காரணமாகக் குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2024ஆம் ஆண்டின் இறுதிக்கதியில் மறைப் பெறுமானத்தை (Negative Value) நோக்கிச் சென்ற பணவீக்கம், 2025 ஆகஸ்ட் மாதம் வரை அதே மட்டத்திலேயே நீடித்தது. எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் எதிர்பாராத விதமாகவும் அதிகரித்தமை மற்றும் ரூபாய் அவமதிப்பிற்குள்ளானமை போன்ற காரணிகளால், இலக்கு வைக்கப்பட்ட 5% பணவீக்க வீதத்தைப் பேணுவது சவாலானதாக மாறியுள்ளது.

7. நிதித்துறை (Fiscal Sector)

வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2024ஆம் ஆண்டில் 6.8% மட்டத்திலும், 2025இல் 2.3% மட்டத்திலும் காணப்பட்டது. அதற்கமைய, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை கணிசமான அளவில் குறைந்துள்ளமை பதிவாகியுள்ளது. முதன்மை மிகுதி (Primary Balance) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் உபரியைப் பதிவு செய்ததுடன், வலுவடைந்த மா பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் நிதித்துறையின் செயல்திறன் மேம்பட்டது. 2024ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆக இருந்த முதன்மைச் சமநிலை, 2025இல் 5.4% வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2024இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.6% ஆக இருந்த அரசாங்கத்தின் வருமானம், 2025ஆம் ஆண்டளவில் 16.7% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கடனிலும் சதவீத அடிப்படையில் சிறு குறைவு பதிவாகியுள்ளது. அதன்படி, 2024இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95.5% ஆக இருந்த மத்திய அரசாங்கத்தின் கடன், 2025இல் 91.6% ஆகக் குறைவடைந்துள்ளது.

8. நிதிசார் துறை (Financial Sector)

வலுவடைந்து வரும் மா பொருளாதார நிலைமைகள் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு மத்தியில், 2025ஆம் ஆண்டில் நிதிசார் துறை மேம்பட்ட மீளெழுச்சித் திறனை வெளிப்படுத்தியது. நெருக்கடிமிக்க ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த திரவத்தன்மை நிலைமைகள், குறைந்த நிதி அழுத்தம் மற்றும் வலுவான சந்தை நம்பிக்கை ஆகியவற்றுடன் வங்கித் துறையின் நிலைமைகள் மேம்பட்டன. இறையாண்மை இடர் (Sovereign Risk) மிதமானதாக மாறியமையும், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றமும் நிதிச் சந்தைகளின் ஸ்திரத்தன்மைக்கு மேலும் ஆதரவளித்தன. இதற்கிடையில், கடன் வளர்ச்சி மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், முறையான ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நிதித் துறையின் மேற்பார்வை மற்றும் திரவத்தன்மை மேலாண்மை நடவடிக்கைகளை மத்திய வங்கி தொடர்ந்து வலுப்படுத்தியது. ஒட்டுமொத்தமாக, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உள்நாட்டு கட்டமைப்பு சவால்களுக்கு மத்தியிலும் நிதி முறையானது படிப்படியாக வழமைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகளைக் காட்டியது.

சுருக்கம்

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வு, சமீபத்திய ஆண்டுகளில் அநுபவித்த கடுமையான மா பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் படிப்படியாக ஸ்திரமடைந்து வரும் இலங்கைப் பொருளாதாரத்தின் சித்திரத்தை முன்வைக்கிறது. மேம்பட்ட நிதிச் செயல்திறன், தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகள், வலுவான வெளிநாட்டுத் துறை குறிகாட்டிகள் மற்றும் தனியார் துறை கடன்களின் மறுமலர்ச்சி என்பன கூட்டாக இந்தத் தொடர்ச்சியான மீட்சிச் செயல்முறைக்கு ஆதரவளித்தன.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, பணவீக்க அபாயங்கள் மற்றும் வெளிநாட்டு அபாயங்கள் போன்ற சவால்கள் இன்னும் நீடித்த போதிலும், 2025க்குள் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீளெழுச்சித் திறனை வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், நீண்ட கால மாகாே பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான கொள்கை ஒழுக்கம், நிதித்துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இன்றியமையாததாக இருக்கும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரையாகும்.

மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கையின் ஏழைகளை வஞ்சிக்கும் அரச கொள்கைகள்!

Sunday Times நாளிதழில் வெளியான இக்கட்டுரை, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் (Emeritus Professor) சிறிமல் அபேரத்ன அவர்களினால் எழுதப்பட்டதாகும். மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்

2000 ஆம் ஆண்டு பிறக்கும் போது, இலங்கையர்களில் நால்வரில் ஒருவர் தேசிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். காலப்போக்கில் இந்த அளவு படிப்படியாகக் குறைந்து வந்த போதிலும், 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாம் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்து சேர்ந்துள்ளோம். இன்று, நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் (25%) மீண்டும் வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

உண்மையில், நாட்டில் திடீரென வறுமை தலைதூக்குவதற்கு தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகள் வழிவகுத்தன என்பதில் ஐயமில்லை. எனினும், இதன் பின்னாலுள்ள கொள்கைசார் காரணங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், அரசாங்கத்தின் கொள்கைத் திசைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் உடனடித் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் வறுமை தொடர்வதென்பது வெறும் தற்செயலான நிகழ்வல்ல; அது திட்டமிட்ட கொள்கைசார் தெரிவுகளின் விளைவாகும். இக்கொள்கைகள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மிக அதிக செலவுமிக்கதாக மாற்றுவதுடன், பாதுகாப்பாக வாழும் ஒரு சிறுபான்மையினரின் சொகுசு வாழ்க்கையை மட்டுமே உறுதி செய்கின்றன.

செலவுமிக்க அடிப்படைத் தேவைகள்

கடந்த வாரம் நாம் விவாதித்த 'Para-வரி' (Para-tariffs) நீக்கம் தொடர்பான கலந்துரையாடலின் அடிப்படையில் நோக்கினால், இலங்கையின் வறுமை என்பது வெறும் சந்தையின் 'தோல்வி' (Market failure) மட்டுமல்ல. மாறாக, இறக்குமதி கட்டுப்பாடுகள், Para-வரிகள் மற்றும் உள்நாட்டு வரிகள் போன்ற கொள்கைகள் மூலம் அடிப்படைப் பொருட்களின் விலைகள் செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பான்மையான மக்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் முதல் கட்டுமானப் பொருட்கள் வரை பரந்துபட்ட வரம்பில் காணப்படும் பாதுகாப்புவாதக் கொள்கைகள் (Protectionist policies), திறந்த சந்தைப் போட்டியை முடக்கி, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையாவதை ஊக்குவிக்கின்றன. தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அடிப்படைத் தேவைகளுக்காகவே செலவிடும் ஏழை மக்களின் குடும்பங்களையே இந்த விலை உயர்வுகள் கடுமையாகப் பாதிக்கின்றன.

இலங்கையர்களில் 75%-க்கும் அதிகமானோர் இன்னும் கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றனர்; நாட்டின் ஏழை மக்களில் ஐந்தில் நான்கு பங்கினர் (80%) கிராமங்களில்தான் வசிக்கின்றனர். அதுமட்டுமன்றி, நாட்டின் தொழிலாளர் படையில் கால் பகுதியினர் (25%) விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், நாட்டின் ஏழைகளில் பெரும்பான்மையானோர் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத் துறையையே நம்பியுள்ளனர் என்பதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

உணவு, உடை, கட்டுமானப் பொருட்கள் மற்றும் எளிய உற்பத்திப் பொருட்களுக்கு ஏழைகள் தொடர்ந்து அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால், அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாவதுடன், மிகக்குறைந்த கிராமப்புற வசதிகளுடன் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

அதிக விலைமிக்க உணவு, எட்டாக்கனியாகும் இருப்பிடம்

செஸ் வரி (Cess), ரேட் வரி (PAL), விசேட வர்த்தகப் பண்ட வரி (SCL) மற்றும் VAT போன்ற இறக்குமதி வரிகள் காரணமாக அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பால் பொருட்கள், கோழி இறைச்சி மற்றும் தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அவற்றின் உண்மையான சந்தை மதிப்பை விட மிக அதிகமாகவே தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த விலைகள் இதைவிடக் குறைவாகவே இருந்திருக்கும்.

அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் போது, ஏழைப் பின்தங்கிய குடும்பங்களுக்கு வேறு வழிகள் இருப்பதில்லை. இதன் விளைவாக, அவர்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது ஊட்டச்சத்து குறைந்த மலிவான உணவுகளை நாடவோ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, உணவு விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் வேளை உணவைத் தவிர்ப்பதுடன், பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு உணவளித்துவிட்டு தாங்கள் பட்டினியாக இருக்க பழகியுள்ளனர். இதுவொரு தற்காலிகச் சரிக்கட்டல் அல்ல. இது காலப்போக்கில் மந்தபோஷணை, வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும்.

வீடு அல்லது இருப்பிட வசதியைப் பொறுத்தமட்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கொழும்பில் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பின் விலையானது, நல்ல ஊதியம் பெறும் ஒரு நிறைவேற்று அதிகாரி (Executive) தனது 25 வருட வருமானத்தை முழுமையாகச் செலவிட்டால் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் உள்ளது. அதாவது, நடுத்தர வர்க்கத்தினருக்கே ஒரு வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கும் போது, குறைந்த வருமானம் பெறுவோருக்கு அது வெறும் பகற்கனவாகவே கலைந்துவிடுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சிமெந்து, இரும்பு, டைல்ஸ் மற்றும் இயந்திரங்களுக்கான வரிகள் மற்றும் Para-வரிகள் காரணமாக கட்டுமானச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, வீடமைப்புத் துறையில் பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது பின்னர் வாடகை மற்றும் வீட்டு விலைகளின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.

நகரங்களில் வேகமாக உருவாகும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை பணக்காரர்களும், புலம்பெயர்ந்தோரும் (Diaspora), வெளிநாட்டினருமே வாங்குகின்றனர். அவர்கள் அவற்றை வசிப்பதற்காக அன்றி, ஒரு முதலீடாகவே கருதுகின்றனர். ஆனால், இந்த உயர்மட்ட சொத்துக்களை லாபகரமான முதலீடுகளாக மாற்றும் தற்போதைய கொள்கைகளும் வரி அமைப்பும், சாதாரண ஊழியர்கள் ஒரு சாதாரண நகர்ப்புற வீட்டைக் கூட வாங்க முடியாத அளவுக்கு விலைகளை உயர்த்தியுள்ளன.

“நகர்ப்புற வாழ்க்கை செலவுமிக்கதாக மாறும் போது, ஏழைகள் தொலைதூரக் கிராமங்களுக்கு விரட்டப்படுகிறார்கள். அங்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டுமன்றி, காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகளிடமிருந்தும் தமது உயிரைப் பாதுகாக்கப் போராட வேண்டியுள்ளது.”

தொழில்மயமாக்கலைத் தவறவிடுதல்

நீங்கள் வாழும் இடமே இறுதியில் உங்கள் வாழ்க்கையின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கிறது. இதில் அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரி மற்றும் வர்த்தகச் சட்டங்கள் நகர்ப்புற வாழ்க்கையை அதிக செலவுமிக்கதாக மாற்றும் போது, ஏழைகள் சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள நகரங்களை நோக்கி நகர்வது தடுக்கப்படுகிறது.

இதன் விளைவாக, பின்தங்கிய கிராமங்களில் பிறப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளிலேயே முடங்கிப்போகிறார்கள். வளர்ந்து வரும் பொருளாதார மையங்களிலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் குழந்தைகளும் இதே வரம்புகளையே எதிர்கொள்ள நேரிடுகிறது.

இலங்கையின் நீடித்த கிராமப்புற வறுமையானது, மெதுவான தொழில்மயமாக்கல் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உள்ள பலவீனங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. விவசாயத் துறை தொழிலாளர் படையில் 25% பங்கைக் கொண்டிருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதன் பங்களிப்பு மிகச் சிறியதே. இதன் காரணமாக, அங்கு உற்பத்தித்திறன் குறைவாகக் காணப்பட்டு, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் குறைந்த வருமானத்தையே பெறுகின்றனர்.

மறுபுறம், கைத்தொழில் மற்றும் நவீன சேவைத் துறைகள் கிராமப்புறங்களிலுள்ள உபரி உழைப்பை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு வேகமாகவோ அல்லது பரந்த அளவிலோ விரிவடையவில்லை. பெரும்பாலும் 'உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல்' என்ற பெயரில் பாதுகாப்புவாதக் கொள்கைகள் நியாயப்படுத்தப்பட்டாலும், ஏற்றுமதி செய்யக்கூடிய மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய போட்டித்திறன் மிக்க தொழில்களை ஊக்குவிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்குப் பதிலாக, சிறிய உள்நாட்டுச் சந்தையைப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் வேலைகளே நடக்கின்றன. இது நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரித்து லாபம் ஈட்டுவதை விட, சந்தையில் ஏற்படும் தட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதையே ஊக்குவிக்கிறது.

இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை உள்ளீடுகளை இறக்குமதி செய்யும் போது அதிக வரிகள் விதிக்கப்படுவதால், முதலீடு, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான செலவு அதிகரிக்கிறது. இதன் விளைவு துல்லியமானது: தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் சேவை மையங்களும் குறைகின்றன. இதனால், வாழ்வாதார விவசாயம் அல்லது முறைசாரா வேலைகளில் சிக்கி, வேறு துறைகளுக்கு மாற முடியாமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பு யாருக்கு வழங்கப்படுகிறது?

உயர் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், Para-வரிகள் மற்றும் உரிமக் கட்டுப்பாடுகள் (Licensing) பெரும்பாலும் 'விவசாயிகளைப் பாதுகாத்தல்' அல்லது 'உள்நாட்டுத் தொழில்துறையைக் காத்தல்' என்ற பெயரிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் நடைமுறையில், இவை வரையறுக்கப்பட்ட போட்டி மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற முடிவெடுத்தல் மூலம் லாபமடையும் ஒரு சில வர்த்தகர்கள், அரசியல் செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் மற்றும் சில இடைத்தரகர்களை மட்டுமே பணக்காரர்களாக்கியுள்ளன.

மோட்டார் வாகனங்கள் முதல் கோழித்தீவனம் வரை, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு முதல் கட்டுமானப் பொருட்கள் வரை, வரிகள் மற்றும் கோட்டாக்களில் (Quotas) ஏற்படும் திடீர் மாற்றங்களால், சரியான நேரத்தில் கையிருப்புகளைக் கொண்டிருப்பவர்கள் அல்லது உரிமம் பெற்றவர்கள் மட்டுமே எதிர்பாராத கொள்ளை லாபத்தை மீண்டும் மீண்டும் பெறுகின்றனர்.

இவற்றுக்கு மத்தியில், 22 மில்லியன் நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுத்து தங்களின் வாழ்வை இழக்கின்றனர். இந்த 22 மில்லியனுக்குள் ஏழைகளும், வறுமைக்கோட்டிற்கு அண்மையிலுள்ளோரும், மற்றுமொரு பொருளாதார அதிர்ச்சியால் வறுமைக்குள் வீழக் காத்திருப்பவர்களுமே அடங்குவர்.

முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த யதார்த்தத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்:

"இக்கொள்கையானது உள்நாட்டில் இயங்கும் ஒரு சில குடும்ப வணிகங்களைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது."

இதற்காக நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையும் நஷ்டஈடு செலுத்த வேண்டிய அவலநிலையே காணப்படுகிறது.

பாதுகாப்புவாதத்தின் அரசியல் பொருளாதாரம் (Political Economy of Protectionism) என்பது இதுதான்: சமூகத்தின் உச்சியிலுள்ள சில பயனாளிகளின் கூட்டமைப்பைப் பேணிக்கொண்டு, சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள மக்களுக்குத் தெரிவுகளையும் வாய்ப்புகளையும் மறுத்து, அவர்களை அதிக விலை நுகர்வுக்குள் அடிமையாக்குவதாகும்.

நாம் சந்தையைத் திறந்தால் என்ன நடக்கும்?

இப்போது இந்த நிலைமையை முற்றிலும் தலைகீழாக மாற்றி சிந்தித்துப் பாருங்கள். கூடுதல் இறக்குமதி வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டால், உணவு, உடை மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோர் மலிவான விலையில் பெற முடியும். தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவிடும் ஏழைகளுக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த மாற்றம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

குறைந்த இறக்குமதி வரிகள் மூலம் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தமக்குத் தேவையான மூலப்பொருட்களை மலிவாகப் பெற முடியும். இம்முறையைப் பின்பற்றினால், வெளிநாட்டுப் போட்டிக்கு அஞ்சி ஒளிந்திருப்பதை விடுத்து, திறம்படப் போட்டியிடும் திறன் வளரும். காலப்போக்கில், ஒரு மூடிய உள்நாட்டுச் சந்தையிலிருந்து விடுபட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளில் போட்டியிடும் நிலைக்கு நமது வணிகங்கள் உயரும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கு என்ன நடக்கும்? வர்த்தக வரிகள் (Trade taxes) தற்போது அரசாங்கத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தாலும், அவை மிகவும் பின்தங்கிய மற்றும் முற்போக்கான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு கருவியாகும்.

இலங்கையின் உள்நாட்டு வரிப்பகுப்பாய்வை முறையான வருமான வரி, நிறுவன வரி மற்றும் நுகர்வு வரி நிர்வாகத்தின் மூலம் படிப்படியாக விரிவுபடுத்தும் போது, உணவு மற்றும் இருப்பிடத்தின் மீது சுமையேற்றாமல் அரசாங்கத்தின் வருவாயைத் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது அதிகரிக்கவோ முடியும்.

சர்வதேச அனுபவங்கள் காட்டுவது போல, திறமையான உள்நாட்டு வரிகளை நோக்கி படிப்படியாக மாறுவது, நிதி ஆரோக்கியத்திற்கும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் உந்துசக்தியாக அமையும். இங்கு முக்கியமானது எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதல்ல, வரி எங்கிருந்து, எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்பதே ஆகும்.

முக்கியமானது விலைகளைப் பாதுகாப்பதல்ல, மக்களைப் பாதுகாப்பதே!

இலங்கையின் வறுமைப் பிரச்சினை பெரும்பாலும் வருமானமின்மையாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால், பொதுவான பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது கொள்கைகளால் உருவாக்கப்பட்ட ஒரு 'விலை பிரச்சினை' (Price problem) என்பது புலனாகும். இதன் விளைவாகவே அத்தியாவசியத் தேவைகள் எட்ட முடியாத உயரத்தில் உள்ளன.

தொடர்ந்து வரிகளை விதித்து, மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி, உணவு மற்றும் வீட்டு விலைகளை உயர்த்தி, நகர்ப்புற வேலைவாய்ப்புகளை மட்டுப்படுத்தினால், அது உண்மையான உற்பத்தியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக வறுமையையே நிரந்தரமாக்கும்.

மாறாக, சந்தையைத் திறந்து, கூடுதல் இறக்குமதி வரிகளைக் குறைத்து, வரி முறையை மேம்படுத்தி, வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளில் முதலீடு செய்தால், செயற்கையாக விலைகளை உயர்த்துவதை விடுத்து மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க முடியும்.

இலங்கையினால் தாராளமயமாக்கல் (Liberalization) செய்ய முடியுமா இல்லையா என்பது கேள்வியல்ல. உண்மையான கேள்வி என்னவெனில், பாதுகாப்புவாதம் என்ற போலிப் பெயரில் ஏழைகளைப் பட்டினியிலும், கிராமப்புறத் தனிமைப்படுத்தலிலும் வைத்திருக்கும் இந்த வங்குரோத்து பொருளாதார மாதிரியை நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பொறுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே ஆகும்.

"இக்கட்டுரையானது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியரும், வறுமை பகுப்பாய்வு மையத்தின் (CEPA) நிறைவேற்று பணிப்பாளருமான பேராசிரியர் சிறிமல் அபேரத்ன அவர்களினால் எழுதப்பட்டதாகும். அவரை sirimal@econ.cmb.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது @SirimalAshoka என்ற எக்ஸ் (X/Twitter) கணக்கின் ஊடாகத் தொடர்புகொள்ளலாம்."

மொழிபெயர்ப்பு:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

America வின் அடுத்த target Malacca நீரிணையா?

ஹோர்முஸ் (Hormuz) நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, தற்காலத்தில் உலகெங்கிலும் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. சுருக்கமாகக் கூறினால், இலங்கையில் மீண்டும் ஒருமுறை ஒதுக்கீட்டு முறை (Quota System) மற்றும் QR குறியீடு (QR System) முறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது. இந்த நெருக்கடியின் காரணமாக, இந்த ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2% வரை குறையக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. 

பொதுவாக நீரிணை என்பது, இரண்டு பெரிய கடல் பகுதிகளை ஒன்றாக இணைக்கின்ற குறுகலான, இயற்கையான நீர்ப்பாதையைக் குறிக்கும். இத்தகைய நீரிணைகளுக்குப் புவிசார் அரசியல் ரீதியாகவும், உத்தி (Strategy) ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதன் காரணமாகவே இவை முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச வர்த்தகம் மூலமாக நாடுகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற இன்றைய உலகில், வெளியுறவுக் கொள்கையில் இதொரு முக்கியமான கருவியாகத் திகழ்கிறது. அத்தகைய மற்றுமொரு முக்கியமான நீரிணைதான் மலாக்கா (Malacca) நீரிணை ஆகும். 

ஹோர்முஸ் நீரிணையைப் போலவே மலாக்கா நீரிணை குறித்தும் தற்போது அமெரிக்கா மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் மலாய் கடற்கரையில் அமைந்திருந்த மெலாக்கா/மலாக்கா வர்த்தகத் துறைமுகத்தின் மூலமாகவே இதற்கு இப்பெயர் கிடைத்தது. 900 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நீரிணை, இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கின்ற ஒரு கடல் பாதையாகும். இதற்கு மேற்குப் பகுதியில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவும், கிழக்கில் மலேசியாவும், தெற்கில் தாய்லாந்தும் அமைந்துள்ளன. எனவே, மலாக்கா நீரிணையின் முக்கியமான எல்லை நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை விளங்குகின்றன. 

இந்த நீரிணையின் வடக்கு நுழைவாயிலில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் இந்தியாவின் அந்தமான்-நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளதால், மலாக்கா நீரிணை இந்தியாவிற்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்தியாவின் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. 

2026 மார்ச் மாதம் அமெரிக்கா, இந்தோனேசியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன் மூலமாக அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இந்தோனேசிய வான்வெளியில் முன்னரை விட அதிகமாக நடமாடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதன் விளைவாக, மலாக்கா நீரிணை வழியாக அமெரிக்காவின் கண்காணிப்புப் பணிகளையும் கட்டுப்பாட்டையும் மேலும் அதிகப்படுத்த முடியும். அமெரிக்கா ஏன் இத்தகைய ஒப்பந்தத்தைப் போட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், மலாக்கா நீரிணையின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

உலகில் உள்ள இரண்டாவது பரபரப்பான எண்ணெய் போக்குவரத்துப் பாதையாக மலாக்கா நீரிணை கருதப்படுகிறது. முதலிடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ளது. மலாக்கா நீரிணையின் அகலம் மிகக் குறைவாக உள்ள இடமே 3 கிலோமீட்டர் மட்டும்தான். கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் 22% முதல் 29% வரை இந்த மலாக்கா நீரிணை வழியாகவே செல்கிறது. அதேபோல, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைத் தாண்டிச் செல்லும் வர்த்தகக் கப்பல்களில் 25% முதல் 30% வரை இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றன. 

வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அமெரிக்கா தற்போது போரைக் கடந்து அதற்கு மேலான ஏதோ ஒன்றிற்குத் தயாராகி வருவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். லாபமில்லாமல் எவரும் எதையும் செய்யப் போவதில்லை. ஆயுதங்களால் போர் செய்வதைக் காட்டிலும், எண்ணெய் விநியோகப் பாதைகளைத் தடுத்து, எதிரியான சீனாவின் பலத்தை உடைத்து, அவர்களை விட ஒரு படி மேலே செல்வதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அனைத்து நாடுகளுக்கும் வரி விதித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெனிசூலா மற்றும் ஈரானின் மீது ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றைக் கவனிக்கும்போது, மலாக்கா நீரிணையில் தலையிடுவது சீனாவிற்கும் ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

ஹோர்முஸ் நீரிணையைப் போலன்றி, மலாக்கா நீரிணை வழியாக எண்ணெய் மட்டுமின்றி வாகனங்கள், முடிவுற்ற பொருட்கள் (Finished goods) மற்றும் குறைக்கடத்திகள் (Semiconductors) போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன. சீனாவைத் தவிர்த்து தென்கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தித் தேவையில் 80% வரை இந்த மலாக்கா நீரிணை மூலமாகவே பூர்த்தியாகிறது. இந்த நீரிணையை அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பது சீனாவின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, என்றாவது ஒரு நாள் இந்த நீரிணை காரணமாகத் தங்களுக்குப் பெரிய அரசியல் ஆபத்து வரும் என்பதைச் சீனா முன்னரே உணர்ந்திருந்தது. இதனைத்தான் 'மலாக்கா தர்மசங்கடம்' (Malacca Dilemma) என்று அழைக்கிறார்கள். 

ஹோர்முஸ் மற்றும் மலாக்கா ஆகிய இரண்டு நீரிணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவற்றிற்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை வைத்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஹோர்முஸ் நீரிணை ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையில் அமைந்துள்ளது. ஆனால் மலாக்கா நீரிணை மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் உள்ளது. முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நுழைவாயிலாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. மலாக்கா நீரிணை ஆசியாவின் வர்த்தகத்திற்கும் எரிசக்திக்கும் ஒரு முக்கியப் பாதையாக (Energy Corridor) உள்ளது. 

எண்ணெய் போக்குவரத்தைப் பொறுத்தவரை, உலகின் மொத்த திரவ பெட்ரோலியப் பயன்பாட்டில் 20% முதல் 25% வரை ஹோர்முஸ் வழியாக நடைபெறுகிறது. அதேபோல உலகக் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் 29% மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட அடுத்த கணமே அதன் பாதிப்பு காட்டுத்தீயைப் போல உலகம் முழுவதும் பரவியது. அதற்கு முக்கியக் காரணம், ஹோர்முஸ் நீரிணைக்குப் பதிலாகப் பயன்படுத்த வேறு மாற்று வழிகள் (Alternative routes) இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி, சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈராக் மற்றும் கத்தார் போன்ற முக்கியமான எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல இருக்கும் ஒரே வழி இந்த ஹோர்முஸ் நீரிணை மட்டும்தான். 

மலாக்கா நீரிணை சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவின் பொருளாதாரங்களுக்கு மிக முக்கியமானது. ஒருவேளை இந்த நீரிணை மூடப்பட்டாலும் கூட, இந்தோனேசியாவின் சுண்டா (Sunda) மற்றும் லொம்போக் (Lombok) போன்ற மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த முடியும். ஆனால் அவற்றில் உள்ள சிக்கல் என்னவென்றால், அந்தப் பாதைகளில் பயணிப்பதற்கு அதிக தூரமும் நேரமும் செலவாகும். இதனால் கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலையும் உயரும். 

இந்த இரண்டு நீரிணைகளையும் சுற்றியுள்ள ஆபத்துகளைப் பார்க்கும்போது, ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி எப்போதும் புவிசார் அரசியல் மோதல்கள் (Geopolitical conflicts) நிலவுகின்றன. ஆனால் மலாக்கா நீரிணையில் கடல் கொள்ளையர்கள் (Piracy) மற்றும் கப்பல் போக்குவரத்து நெரிசல் (Congestion) ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த இரண்டில், ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமானது பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பாகும். ஏனெனில் போர் அல்லது கொள்கை மாற்றங்கள் என உலகில் எங்கு என்ன நடந்தாலும், அதன் பாதிப்பு முதலில் நமது பொருளாதாரத்தையே (Pocket) பாதிக்கும். அதனால்தான் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல மலாக்கா நீரிணைக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால், அது எண்ணெய்க்கு மட்டுமின்றி ஆசியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்திற்கே ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அமையும். 

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கை மின்சார துறை மறுசீரமைப்பு 2026: சவால்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள்

அருள்கார்க்கி | கொள்கை ஆய்வாளர்

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் இறக்குமதித் தங்கியிருப்பு 

இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்பு வெற்றியடைய வேண்டுமாயின், மின் உற்பத்தியானது எரிபொருள் இறக்குமதியுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பையும், அதில் காணப்படும் உட்கட்டமைப்பு பலவீனங்களையும் புரிந்துகொள்வது அவசியமாகும். 2026 மார்ச் மாதத்தில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்சாரத் துறையின் தங்கியிருப்பு நிலை ஆகியவை நுகர்வோர் மீது இரட்டைச் சுமையைச் சுமத்தியுள்ளன. 

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கை இதுவரை ஒரு தனித்துவமான 'மூலோபாய எரிபொருள் இருப்பைப்' (Strategic Reserve) பேணவில்லை. மாறாக, அன்றாடத் தேவைக்கான 'சுழற்சி இருப்பு' (Rolling Stocks) முறையிலேயே இயங்குகின்றது. இது மின்சாரத் துறைக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும். சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) பரிந்துரைப்படி 90 நாட்களுக்கான இருப்பு இல்லாதது, மத்திய கிழக்கு போர் போன்ற உலகளாவிய நெருக்கடிகளின் போது அனல் மின் உற்பத்தியை (Thermal Power) முற்றாக முடக்கி, நாடு தழுவிய மின் தடையை உருவாக்கக்கூடும். 

இலங்கையின் மின் உற்பத்தியில் அரைவாசிக்கு மேற்பட்டவை இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் டீசல் மூலமே பெறப்படுகின்றன. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் குறைவாக இருப்பதால், இலங்கை அதிக விலைகொடுத்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயையே (Refined Oil) இறக்குமதி செய்கின்றது (2,939.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 2025). இந்த அதிகப்படியான செலவீனமே மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அதிகரித்து 

கொழும்பு துறைமுகத்திலிருந்து களஞ்சிய முனையங்களுக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் 90 ஆண்டுகள் பழமையான குழாய்கள் மூலம் ஏற்படும் கசிவுகள் மற்றும் தொழில்நுட்ப இழப்புகள், மறைமுகமாக மின் உற்பத்திச் செலவை அதிகரிக்கின்றன. 99 டாங்கிகளைக் கொண்ட "உறங்கும் இராட்சதன்" என அழைக்கப்படும் திருகோணமலை எண்ணெய் பண்ணை, மின் உற்பத்தித் தேவைகளுக்கான ஒரு பிரதான சேமிப்பு மையமாக இன்னும் முழுமையாக மாற்றப்படவில்லை. 

மின்சாரத் துறை மறுசீரமைப்பு என்பது வெறும் இலங்கை மின்சார சபையைப் (CEB) பிரிப்பதோடு நின்றுவிடக் கூடாது. அது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) இறக்குமதி மற்றும் களஞ்சியப்படுத்தல் கொள்கைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு 'தேசிய வலுசக்தி பாதுகாப்புக் கொள்கையாக' அமைய வேண்டும். Advocata Institute (2023) வலியுறுத்தியபடி, இறக்குமதி எரிபொருட்களில் தங்கியிருப்பதை விரைவாகக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதே இத்தகைய நிதிப் பாதிப்புகளிலிருந்து மின்சாரத் துறையைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.  

முக்கிய செய்தி

இலங்கை மின்சார சபை (CEB) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் கீழ் ஆறு தனியார் நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் வலுசக்தி வரலாற்றில் தசாப்தங்களாகத் தொடர்ந்த ஏகபோக நிர்வாகத்திற்கும், நட்டங்களும் இலங்கை மின்சார சபைக்குள் இருக்கும் பாரிய ஊழல்களும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகும். இந்த மறுசீரமைப்பின் எதிர்பார்ப்புக்களையும் உண்மையான பலன்களை நுகர்வோருக்கு வழங்க வேண்டுமென்றால், கொள்முதல் முறைகேடுகள், அரசியல் தலையீடுகள், எரிசக்தி வறுமை மற்றும் பசுமை மாற்றம் என்ற நான்கு மையச் சவால்களை உடனடியாக எதிர்கொள்ள வேண்டும்.

தெற்காசியாவிலேயே வீட்டுப் பாவனைக்கான மின்சாரத்திற்கு அதிக கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

Verité Research (2023) - Analysis of Electricity Tariffs in South Asia. மற்றும் Advocata Institute (2024).

புதிய கட்டமைப்பு — என்ன மாறியது?

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு பின்வரும் ஆறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன:
Lanka Electricity Generation Lanka (Pvt) Ltd — மின் உற்பத்தியை முகாமைத்துவம் செய்தல்

National Transmission Network Service Provider (Pvt) Ltd — தேசிய மின் கடத்தல் கட்டமைப்பைப் பராமரித்தல்

Electricity Distribution Lanka (Pvt) Ltd (EDL) — நுகர்வோருக்கான மின் விநியோகம்

National System Operator (Pvt) Ltd — மின் முறைமைச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்

Employees Fund (Pvt) Ltd — ஊழியர் நலன்புரி நிதியங்களைக் கையாளுதல்

Energy Ventures Lanka (Pvt) Ltd — புதிய எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துதல்

இந்த மறுசீரமைப்பின் மிக முக்கியமான அம்சம் யாதெனில், மின்சாரக் கொள்முதல்கள் அனைத்தும் இனி போட்டி அடிப்படையிலான விலைமனுக் கோரல் (Competitive Procurement) மூலமே நடைபெறும் என்பதாகும். இது கடந்தகால கொள்முதல் முறைகேடுகளுக்கான நேரடியான கட்டமைப்பு மாற்றமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் துறை கொண்டுள்ள மொத்தக் கடன் சுமை, 600 பில்லியன் ரூபாய்களையும் கடந்துள்ளது.

நிதி அமைச்சு (Ministry of Finance) - Annual Report & Fiscal Management Report.

உடனடி சவால்கள் 

1. கொள்முதல் முறைகேடுகள்

Transparency International Sri Lanka (TISL, 2026) நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் கடுமையான முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. விநியோகஸ்தர் தெரிவில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, நிலக்கரி தரக் கண்காணிப்பு பதிவுகளில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு (COPE) விசாரணைகளில் தகவல் மறைக்கப்படுவது என்பன நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. Verité Research (2024) வலுசக்தித் துறையின் கொள்முதல் கட்டமைப்பில் உள்ள இத்தகைய ஓட்டைகள் பொது நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கின்றன என எச்சரித்துள்ளது. "கொள்முதல் மேற்பார்வையில் காணப்படும் பலவீனங்கள் பொது வளங்களின் வினைத்திறனான பயன்பாடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலுவிழக்கச் செய்யும்" என TISL (2026) கடுமையாக எச்சரித்துள்ளது.

2. எரிசக்தி வறுமை மற்றும் சமூக நீதி

மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்படும் "செலவை அடிப்படையாகக் கொண்ட விலைக் கொள்கை" (Cost-reflective Pricing) மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கக்கூடும். இது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே "எரிசக்தி வறுமையை" (Energy Poverty) உருவாக்கும் என Institute of Policy Studies (IPS, 2024) எச்சரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த ஊதியம் பெறுபவர்கள் மத்தியில் இந்தப் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கும். மின்சாரக் கட்டண உயர்வு ஒரு குடும்பத்தின் உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவுகளைக் குறைக்க வழிவகுக்கும் என்பது கவலைக்குரியது.

  இறக்குமதியில் தங்கியிருக்கும் இருள்;   இலங்கையின் மின் உற்பத்தியில் 45% - 50% வரை நிலக்கரி மற்றும் டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களிலிருந்தே பெறப்படுகிறது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) - Annual Generation Reports.

அரசியல் தலையீடு மற்றும் நிர்வாக ஆளுமை

மின்சாரக் கட்டண நிர்ணயம் என்பது ஒரு தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரச் செயன்முறையாக இருக்க வேண்டுமே தவிர, அது அரசியல் வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாக இருக்கக்கூடாது. PUCSL (2024) வலியுறுத்தியுள்ளபடி, நுகர்வோர் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே சமநிலையைப் பேண ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். Ravi Ratnasabapathy (2015) சுட்டிக்காட்டுவது போல, தகைமை அல்லாமல் அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகள் நிர்வாகப் பொறுப்புக்கூறலை முற்றாக இல்லாமல் செய்கின்றனர்.

கொள்கைப் பரிந்துரைகள்

1. ஒழுங்குமுறை அதிகாரத்தை வலுப்படுத்துதல்

PUCSL இன் சுயாதீனத்தன்மையை சட்ட ரீதியாகப் பாதுகாத்து, கட்டண நிர்ணயம் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றில் அரசியல் தலையீட்டை முற்றாக ஒழிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு நிறுவனங்களுக்கிடையே நியாயமான போட்டியினை உறுதிப்படுத்துவதும் PUCSL இன் கட்டாயப் பொறுப்பாக அமைய வேண்டும்.

2. கொள்முதல் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல்

TISL (2026) சுட்டிக்காட்டிய நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, அனைத்துக் கொள்முதல் செயன்முறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுயாதீன அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வலுவான கொள்முதல் அமைப்புகள் இன்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு மறுசீரமைப்பும் பொது நிதியை மீண்டும் ஒரு "நிழல் பொருளாதாரத்திற்கே" இட்டுச் செல்லும்.

3. இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு

அரசாங்கம் "அஸ்வெசும" (Aswesuma) போன்ற சமூக நலத்திட்ட தரவுகளைப் பயன்படுத்தி உண்மையிலேயே வறிய நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நேரடி நிதி உதவிகளை வழங்க வேண்டும். IPS (2024) பரிந்துரைப்பது போல, மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் நலிந்த மக்களைப் பாதுகாக்க "இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள்" (Targeted Subsidies) கட்டாயமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

4. பசுமை வலுசக்தி மாற்றத்தை துரிதப்படுத்துதல்

Energy Ventures Lanka (Pvt) Ltd நிறுவனமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் தனியார் துறையினரின் பங்களிப்பை வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மையுள்ள முறைகளின் கீழ் ஊக்குவிக்க வேண்டும். இது நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கான அந்நியச் செலாவணி வெளியேற்றத்தையும் குறைக்கும்.

  நாளுக்கு 250 மில்லியன் ரூபாய் நட்டம்:  2026 மறுசீரமைப்புக்கு முன்னர், மின்சார சபை நாள் ஒன்றுக்குச் சுமார் 250 மில்லியன் ரூபாய் வரை நட்டத்தைச் சந்தித்து வந்தது.

Ravi Ratnasabapathy (2015/2023) - State-Owned Enterprises: The Financial Black Hole.

நிதிச் சுமை மற்றும் பொருளாதார விளைவுகள்

CEB போன்ற அரசு நிறுவனங்கள் தொடர்ச்சியான நட்டங்களால் அரச வங்கிகளிடம் பாரியளவில் கடன் பெறுவதால் தனியார் துறைக்கான கடன் வாய்ப்புகள் குறைகின்றன — இதுவே பொருளாதாரத்தில் "Crowding Out" என்றழைக்கப்படும் எதிர்மறை விளைவாகும் (Ratnasabapathy, 2015). 2014 தரவுகளின்படி 55 அரசு நிறுவனங்கள் சுமார் 126 பில்லியன் ரூபாய் வரவுசெலவுத் திட்ட ஆதரவும் 47.6 பில்லியன் ரூபாய் திறைசேரி பிணைமுறிகளும் பெற்றுள்ளன. இது நாட்டின் சர்வதேச கடன் தரப்படுத்தல் நம்பகத்தன்மையையும் சிதைத்துள்ளது.

ஏகபோகத்தின் விலை

இலங்கையின் மின்சாரக் கட்டணம் ஆசியாவிலேயே மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது — இந்தியா, வியட்நாம் மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாகிறது (Advocata Institute, 2023). போட்டியின்மையால் ஏற்படும் "X-Inefficiency" — அதாவது லாபமீட்டும் ஊக்கமோ அல்லது நட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்ற பயமோ இல்லாத காரணத்தால் — CEB இன் மிகை ஊழியர் எண்ணிக்கையும் தேவையற்ற நிர்வாகச் செலவுகளும் அனைத்தும் இறுதியில் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தின் ஊடாகவே ஈடுசெய்யப்படுகின்றன.

சூரிய மற்றும் காற்றுச் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம்: 

தற்போது 15% க்கும் குறைவாகவே உள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) - Annual Report 2024 (Real Sector Section)

வலுசக்தி பாதுகாப்பும் பசுமை மாற்றமும்

2022 ஆம் ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடும் பாரிய மின்சாரத் தடைகளும் இறக்குமதி எரிபொருட்களை அதிகம் சார்வதன் அபாயத்தை உறுதிப்படுத்தின. அரசாங்கம் 2030 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், தற்போதைய மையப்படுத்தப்பட்ட மின் கடத்தல் கட்டமைப்பு இத்தகைய மாற்றத்தை உள்வாங்குவதற்குப் போதுமானதாக இல்லை என Advocata Institute (2023) சுட்டிக்காட்டியுள்ளது. காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற இடைவிட்டுக் கிடைக்கும் எரிசக்தி மூலங்களை நிர்வகிக்க Smart Grid தொழில்நுட்பமும் Battery Storage கட்டமைப்புகளும் அவசியமாகும்.

இந்தியாவில் டெல்லி முன்னெடுத்த மின் விநியோகச் சீர்திருத்தங்கள் தொழில்நுட்ப இழப்புகளைக் குறைத்து நுகர்வோர் சேவையை மேம்படுத்தியதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. வியட்நாம் தனது மின்சாரச் சந்தையை படிப்படியாகத் திறந்துவிட்டதன் மூலம் பாரியளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை ஈர்த்துள்ளது — இது ஏகபோக உரிமையை ஒழிப்பதன் மூலம் எவ்வாறு வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்பதற்குச் சிறந்த பாடமாகும்.

  காற்றோடு போகும் மின்சாரம்:  இலங்கையில் மின் கடத்தல் மற்றும் விநியோக இழப்பு

 (Transmission & Distribution Losses) 8.5% முதல் 9% வரை உள்ளது.

Ceylon Electricity Board (CEB) - Statistical Digest 2024.

பின்னணி சூழல்

இலங்கையின் மின்சாரத் துறை தசாப்த காலங்களாக ஒரு "இயற்கை ஏகபோகமாக" அரசால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பல தசாப்தங்களாக நிலவி வரும் பாரிய நிதி இழப்புகள், அரசியல்மயப்படுத்தப்பட்ட தீர்மானங்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலைத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கின. Ravi Ratnasabapathy (2015) "State-Owned Enterprises: The Financial Black Hole" என்ற ஆய்வில் இதை விரிவாக நிரூபித்துள்ளார். Advocata Institute (2023) "Reforming the Power Sector in Sri Lanka" என்ற கொள்கை ஆய்வு ஆவணத்தில் ஏகபோகத்தை ஒழித்து போட்டியை உருவாக்குவதன் (Unbundling) மூலம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கலாம் என்பதை தரவுகளுடன் விளக்கியுள்ளது. இந்தப் பின்னணியில்தான், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பிற்கு (Structural Reform) 2024 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்கியது.

முடிவுரை

இலங்கை மின்சார சபையின் கலைப்பு மற்றும் புதிய ஆறு நிறுவனங்களின் உருவாக்கம் என்பது இலங்கையின் வலுசக்தி வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, அது ஒரு பாரிய மாற்றத்தின் ஆரம்பம் மட்டுமேயாகும். தசாப்த காலங்களாகத் தொடர்ந்த திறமையற்ற நிர்வாகம் மற்றும் சந்தைப் போட்டியின்மை என்பவற்றிலிருந்து விடுபட்டு, ஒரு நவீன, வினைத்திறன் மிக்க வலுசக்தித் துறையை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. அரசு நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை விழுங்கும் ஒரு "நிதிப் படுகுழியாக" (Financial Black Hole) மாறுவதைத் தடுப்பதே இந்த மறுசீரமைப்பின் முதன்மையான இலக்காக இருக்க வேண்டும். Transparency International Sri Lanka (TISL, 2026) மற்றும் Verité Research (2024) ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வரும் கொள்முதல் முறைகேடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகக் கலாச்சாரம் என்பன முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துக் கொள்முதல் செயன்முறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சுயாதீன அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் போதே, நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை மீளக் கட்டியெழுப்பப்படும்.

மேலும், இந்த மாற்றமானது IPS (2024) வலியுறுத்தியது போல ஒரு "சமூக நீதியான மாற்றீடாக" (Just Transition) அமைவது அவசியமாகும். மின்சாரக் கட்டணச் சீர்திருத்தங்கள் நலிந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில், சரியான இலக்குகளை நோக்கிய மானியக் கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலைகள் பலப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, Advocata Institute (2023) முன்வைத்த பரிந்துரைகளுக்கமைய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே, இலங்கை 2030 ஆம் ஆண்டிற்கான பசுமை வலுசக்தி இலக்குகளை அடைய முடியும். இந்த மறுசீரமைப்புச் செயன்முறையானது, தொழில்முறை நிபுணத்துவம் (Professionalism), வெளிப்படைத்தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக்கூறல் (Accountability) ஆகிய மூன்று தூண்களின் மீது கட்டப்பட வேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் மட்டுமே, மின்சாரத் துறையானது இலங்கையின் பொருளாதாரச் சுமையாக அன்றி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் ஒரு வலுவான உந்துசக்தியாக மாறும்.  





இலங்கையின் புதிய நுண்நிதிச் சட்டம் 2026: பெண்களுக்கான பாதுகாப்பா அல்லது ஒழுங்குமுறைத் தோல்வியா? 

அருள்கார்க்கி  

இலங்கையின் நுண்நிதித் துறையானது நீண்டகாலமாக வறுமை ஒழிப்பிற்கான ஒரு கருவியாகவே பார்க்கப்பட்டது. குறிப்பாக, வங்கியியல் வசதிகள் அற்ற கிராமப்புறப் பெண்களை "சிறு தொழிலதிபர்களாக" (Micro-entrepreneurs) மாற்றுவதே இதன் அடிப்படை நோக்கம். இருப்பினும், 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இலங்கையில், நுண்நிதி என்பது ஒரு "கடன் பொறி" (Debt Trap) ஆக உருவெடுத்துள்ளது. 2026 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய ஒழுங்குமுறைச் சட்டம், இத்துறையை முறைப்படுத்த முயல்கிறது. இந்த ஆய்வானது, நுண்நிதி எவ்வாறு 'உற்பத்திக் கடன்' என்பதிலிருந்து 'நுகர்வுக் கடன்' (Consumption Debt) ஆக மாறியுள்ளது என்பதையும், புதிய சட்டத்திலுள்ள "வருமானச் சரிபார்ப்பு" (Income Verification) முறையின் அவசியத்தையும் ஆராய்கிறது. 

இலங்கையின் நுண்நிதி நெருக்கடி 

இலங்கையின் நுண்நிதித் துறையானது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது குறித்த ஆய்வுகள், அதன் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளையே முதன்மையாகச் சுட்டிக்காட்டுகின்றன. இக்கட்டுரையானது ஏற்கனவே இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான ஆய்வுகளைத் தரவுத் தளமாகக் கொண்டு, ஒரு கலப்பு ஆய்வு முறையியலை (Mixed Methods Approach) பின்பற்றுகிறது. 

இலங்கையின் நுண்நிதி நெருக்கடியின் வேர்களை ஆராய்ந்த பொருளாதார நிபுணர் W.A. விஜயவர்தன (2018), இந்தப் பிரச்சினை ஒரு 'வட்டி வீதப் பிரச்சினை' என்பதை விடவும், 'கடன் மதிப்பீட்டுப் பிரச்சினை' (Credit Assessment Failure) என்றே வாதிடுகிறார். நுண்நிதி நிறுவனங்கள் ஒரு வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை (Repayment Capacity) அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்யாமல், சந்தைப் போட்டியில் அதிக வாடிக்கையாளர்களைப் பிடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. இது வாடிக்கையாளர்களின் வருமானத்திற்கும் கடன் தவணைக்கும் இடையிலான சமநிலையைச் சீர்குலைத்தது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மோசமான கடன் நிலவரம் குறித்து NGO Forum on ADB (2021) வெளியிட்ட தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதன்படி, இம்மாகாணங்களில் நுண்கடன் பெறுபவர்களில் 99 சதவீதம் பேர் பெண்கள் என்பதோடு, அவர்கள் சராசரியாக 3 முதல் 7 வெவ்வேறு நிறுவனங்களில் கடன் பெற்று ஒரு தீராத கடன் சுழற்சியில் (Multi-debt Trap) சிக்கியுள்ளதை இவ்வாய்வு உறுதிப்படுத்துகிறது. இது நுண்நிதி என்பது 'வறுமை ஒழிப்பு' என்பதிலிருந்து மாறி 'வறுமையை நிலைநிறுத்தும்' ஒரு காரணியாக மாறியுள்ளதைக் காட்டுகிறது.

இதற்கிடையில், கொள்கை ஆய்வு நிறுவனமான அட்வொக்காடா நிறுவனம் (Advocata Institute, 2020) தனது ஆய்வின் மூலம் ஒரு மாற்றுப் பார்வையை முன்வைத்தது. அரசாங்கம் வட்டி வீதங்களுக்கு உச்ச வரம்புகளை (Interest Rate Caps) விதிப்பதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என அது எச்சரித்தது. இத்தகைய கட்டுப்பாடுகள் முறைசார் நிறுவனங்களைச் சந்தையிலிருந்து வெளியேறச் செய்யும் என்றும், அதன் விளைவாக ஏழை மக்கள் மீண்டும் எவ்வித ஒழுங்குமுறைக்கும் உட்படாத, ஆபத்தான 'கந்துவட்டிக்காரர்களிடம்' (Informal Lenders) தள்ளப்படுவார்கள் என்றும்  Advocata சுட்டிக்காட்டியது. 

இக்கட்டுரையானது மேற்கூறிய ஆய்வுப் பின்னணிகளின் அடிப்படையில், புதிய 2026 நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு விரிவான ஆய்வு முறையியலைப் பயன்படுத்துகிறது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 2024-2025 ஆண்டு அறிக்கைகள் மற்றும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம், நுண்நிதித் துறையின் தற்போதைய நிதி நிலைத்தன்மை மற்றும் கடன் வழங்கல் போக்குகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் அண்மைக்கால வறுமைச் சுட்டெண் (Poverty Headcount Index) மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (CCPI) தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பெண்களின் உண்மையான வருமானம் பணவீக்கத்தினால் எவ்வாறான சரிவைச் சந்தித்தது என்பதும், அது ஏன் அவர்களை நுகர்வுக் கடன்களை நோக்கித் தள்ளியது என்பதும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டம் (2026) எவ்வாறு ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட மேற்பார்வையை வழங்குகிறது என்பது சட்ட ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஆய்வு முறையியலானது, நுண்நிதித் துறையை வெறுமனே ஒரு நிதிச் சேவையாகப் பார்க்காமல், ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் கொள்கை சார் பிரச்சினையாக அணுகுவதற்கு உதவுகிறது.   

உற்பத்திக் கடன் Vs நுகர்வுக் கடன்

இலங்கையின் நுண்நிதித் துறையில் நிலவும் மிக முக்கியமான முரண்பாடு யாதெனில், வழங்கப்படுகின்ற கடன்களின் "நோக்கத்திற்கும்" (Intended Purpose) அதன் "யதார்த்தமான பயன்பாட்டிற்கும்" (Actual Utilization) இடையிலான பாரிய இடைவெளியாகும். நுண்நிதி என்பது அடிப்படையில் வருமானம் ஈட்டும் சுயதொழில்களை ஊக்குவிக்கும் 'உற்பத்திக் கடன்' (Productive Credit) ஆக வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், அண்மைக்காலப் பொருளாதாரத் தரவுகள் இக்கடன்கள் பெருமளவில் 'நுகர்வுக் கடன்' (Consumption Debt) ஆக மாற்றமடைந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து, பணவீக்கம் (Inflation) முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% வரை உயர்ந்தது (Department of Census and Statistics, 2022). இக்காலப்பகுதியில், வறிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் உண்மையான வருமானம் (Real Income) வீழ்ச்சியடைந்த நிலையில், உணவு, மருந்து மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை ஈடுகட்ட பெண்கள் நுண்நிதியை நாடத் தொடங்கினர். இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 2024 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நுண்நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களில் 60% க்கும் அதிகமானவை 'வாழ்வாதாரச் செலவுகளுக்காகவே' பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கடனை மூலதனமாகக் கருதும் பொருளாதாரக் கோட்பாட்டிற்கு (Capital Accumulation Theory) மாறானது.

வாடிக்கையாளர்களின் கடன் வாங்கும் திறனை (Repayment Capacity) மதிப்பீடு செய்வதில் நிலவும் அறிவியல் ரீதியான பலவீனம், இந்த நுகர்வுக் கடன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். W.A. விஜயவர்தன (2018) தனது ஆய்வில் குறிப்பிட்டது போல, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆதாரத்தை (Source of Income) உறுதிப்படுத்தாமல் கடன் வழங்குவது, பெண்களை மீண்டும் மீண்டும் கடன் வாங்கத் தூண்டுகிறது. 2026 ஆம் ஆண்டின் புதிய நுண்நிதிச் சட்டமானது, இந்த 'வருமானச் சரிபார்ப்பு' முறையைக் கட்டாயமாக்குவதன் மூலம், ஒரு பெண் தனது வருமானத்தில் 30% க்கும் அதிகமான தொகையை கடன் தவணையாகச் செலுத்துவதைத் தடுக்க முயல்கிறது.

NGO Forum on ADB (2021) மற்றும் Advocata  நிறுவனம் (2020) ஆகியவற்றின் கள ஆய்வுகளின்படி, ஒரு பெண் சராசரியாக 4 அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் கடன் பெற்றிருக்கும்போது, அவர் புதிய கடனைத் தனது பழைய கடனை அடைக்கவோ அல்லது அன்றாட வீட்டுச் செலவுகளுக்கோ பயன்படுத்துகிறார் (Debt Cycling). இது உற்பத்தியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, குடும்பங்களை ஒரு நிரந்தரக் கடன் சுழற்சியில் ஆழ்த்துகிறது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் நோக்கும்போது, நுண்நிதி என்பது தற்போது 'வறுமை ஒழிப்பு கருவி' என்பதிலிருந்து விலகி, 'அவசரக்கால நிதித் தேவை' (Emergency Liquidity) பூர்த்தி செய்யும் ஒரு கருவியாக மட்டுமே சுருங்கியுள்ளது.

வருமானச் சரிபார்ப்பு (Income Verification) மற்றும் அறிவியல் மதிப்பீடு  

நுண்நிதித் துறையில் கடன் வழங்கல் என்பது ஒரு நபர் அல்லது குடும்பத்தின் உண்மையான நிதி வலுவை அடிப்படையாகக் கொள்ளாமல், வெறும் 'நம்பிக்கை' அல்லது 'குழுப் பொறுப்பு' (Group Liability) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பது இத்துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய கட்டமைப்பு ரீதியான சவாலாகும். 2026 ஆம் ஆண்டின் புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள 'வருமானச் சரிபார்ப்பு' (Income Verification) முறையானது, கடனை ஒரு தற்செயலான நிதி உதவியிலிருந்து அறிவியல் ரீதியான நிதிச் சேவையாக மாற்ற முனைகிறது. 

ஒரு பெண்ணின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை (Repayment Capacity) மதிப்பிடுவதற்கு, நிதி நிறுவனங்கள் இனி 'தீர்மானிக்கப்பட்ட செலவு விகிதத்தை' (Predetermined Expense Ratio) பயன்படுத்த வேண்டும். இதற்கான ஒரு அடிப்படை ஆய்வுச் சூத்திரத்தை பின்வருமாறு வரையறுக்கலாம்:

RC = GI - (DE + IL)

இங்கு:

  • RC (Repayment Capacity): ஒரு மாதத்தில் கடனுக்காக ஒதுக்கக்கூடிய எஞ்சிய வருமானம்.

  • GI (Gross Monthly Income): குடும்பத்தின் அனைத்து வழிகளிலுமான மொத்த வருமானம்.

  • DE (Discretionary & Essential Expenses): உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் பணவீக்கத்தினால் ஏற்படும் மேலதிக செலவுகள்.

  • IL (Existing Indirect Liabilities): ஏற்கனவே பெற்றுள்ள ஏனைய நுண்கடன்கள் மற்றும் முறைசாரா கடன்கள்.

இந்த ஆய்வின்படி, ஒரு பெண்ணின் RC பெறுமதியில் 30% முதல் 40% வரை மட்டுமே ஒரு புதிய கடனுக்கான தவணைத் தொகையாக (EMI) நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த எல்லையைத் தாண்டும்போது, அது அக்குடும்பத்தை அத்தியாவசியத் தேவைகளைக் குறைக்கக் கட்டாயப்படுத்துகிறது, இதுவே சமூகச் சீர்குலைவிற்கு (Social Disruption) வித்திடுகிறது. 

தற்போது இலங்கையில் உள்ள பெரும்பாலான நுண்நிதி நிறுவனங்கள், கடன் தகவல் பணியகத்துடன் (CRIB) முழுமையாக இணைக்கப்படவில்லை. ADVOCATA நிறுவனம் (2020) சுட்டிக்காட்டியது போல, ஒரு வாடிக்கையாளர் எத்தனை நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என்ற தகவலைப் பகிர்ந்துகொள்வதற்கான 'தகவல் சமச்சீரின்மை' (Information Asymmetry) இத்துறையில் நிலவுகிறது. புதிய சட்டத்தின் கீழ், அனைத்து உரிமம் பெற்ற கடன் வழங்குநர்களும் டிஜிட்டல் முறையில் தரவுகளைப் பகிர்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது ஒரு பெண் தனது கடனை அடைக்க இன்னுமொரு கடனைப் பெறும் 'கடன் சுழற்சி' (Debt Cycling) முறையைத் தடுக்க உதவும்.  

பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய சூழலில், பெண்களின் வருமானம் நிலையற்றதாக (Volatile) மாறியுள்ளது. எனவே, ஒருமுறை மட்டுமே செய்யப்படும் வருமானச் சரிபார்ப்பு போதுமானதல்ல. அதற்குப் பதிலாக, 'இயக்கவியலான கடன் மதிப்பீடு' (Dynamic Credit Scoring) முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இது வாடிக்கையாளரின் கடந்தகாலச் செலுத்தல் நடத்தையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தற்போதைய சந்தை நிலைவரம் மற்றும் பணவீக்கத்தினால் அக்குடும்பத்தின் கொள்வனவுத் திறன் (Purchasing Power) எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளும். அறிவியல் ரீதியான வருமானச் சரிபார்ப்பு என்பது கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல, அது வாடிக்கையாளரைப் பாதுகாப்பதற்கான ஒரு 'நிதிப் பாதுகாப்பு கவசம்' (Financial Safety Net) ஆகும். முறைசார்ந்த வருமானச் சான்றிதழ்கள் இல்லாத தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் பெண்களுக்கு, அவர்களது பணப்புழக்கத்தை (Cash Flow) அடிப்படையாகக் கொண்டு கடன் மதிப்பீடுகளைச் செய்யும் நவீனத் தொழில்நுட்பங்களை (FinTech Solutions) இச்சட்டம் ஊக்குவிக்க வேண்டும். 

புதிய சட்டமூலத்தின் மீதான தர்க்கரீதியான விமர்சனங்கள்

இந்தச் சட்டத்தின் மீதான பிரதான பொருளாதார விமர்சனம் 'வட்டி வீதக் கட்டுப்பாடு' (Interest Rate Caps) தொடர்பானது. advocata நிறுவனம் (2020) மற்றும் சுதந்திரச் சந்தைப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல, அரசாங்கம் வட்டி வீதத்தை செயற்கையாகக் குறைக்கும்போது, நுண்நிதி நிறுவனங்கள் அதிக ஆபத்துள்ள (High-risk) கடன்களை வழங்கத் தயங்கும். இதனால், வங்கிப் பிணைகள் இல்லாத மற்றும் மிகக் குறைந்த வருமானம் கொண்ட ஏழைப் பெண்கள் முறைசார் நிதிச் சந்தையிலிருந்து (Formal Sector) வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு வெளியேற்றப்படும் பெண்கள், எவ்வித ஒழுங்குமுறைக்கும் உட்படாத சட்டவிரோத கந்துவட்டிக்காரர்களிடம் (Loan Sharks) தஞ்சம் புகுவர். இது 'நிதி உள்ளீர்ப்பை' (Financial Inclusion) நோக்கமாகக் கொண்ட சட்டமானது, நடைமுறையில் ஏழைகளை நிதி ரீதியாகத் தனிமைப்படுத்தும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது. இச்சட்டத்தில் "நுண்நிதி" என்பது "சமூக மற்றும் பொருளாதார வலுவூட்டல் நோக்கம் கொண்டது" என வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய சட்ட இடைவெளியாகும் (Legal Loophole). வர்த்தக வங்கிகள் மற்றும் பெரிய நிதி நிறுவனங்கள் தாம் வழங்கும் சிறிய அளவிலான கடன்கள் "வணிக நோக்கம்" கொண்டவை என்று வாதிடுவதன் மூலம், இந்தச் சட்டத்தின் கடுமையான ஒழுங்குமுறைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இது சிறிய அளவிலான நுண்நிதி நிறுவனங்களை மட்டுமே ஒடுக்குவதற்கும், பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமான ஒரு 'சமமற்ற ஆடுகளத்தை' (Uneven Playing Field) உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

கிராமப்புறங்களில் காலம் காலமாக இயங்கிவரும் மரணாதார சங்கங்கள், சிறிய சேமிப்பு குழுக்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் போன்றவற்றை இந்தச் சட்டத்தின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யக் கோருவது அவற்றின் தனித்துவத்தைச் சிதைக்கக்கூடும். இத்தகைய சிறிய அமைப்புகள் அதிகாரபூர்வமான கணக்காய்வு மற்றும் 'அனுமதிப்பத்திர' செலவுகளைத் தாங்க முடியாமல் முடங்கக்கூடும். கிராமப்புறப் பெண்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த 'முறைசாரா பாதுகாப்பு வலைகளை' (Informal Safety Nets) அதிகாரத்துவப்படுத்துவது, பெண்களின் தன்னாட்சி அதிகாரத்தைப் பாதிக்கும் ஒரு தர்க்கரீதியான வலுவற்ற செயலாகும்.  இச்சட்டம் எதிர்காலக் கடன்களை ஒழுங்குபடுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, ஏற்கனவே கடன் பொறியில் சிக்கித் தவிக்கும் இலட்சக்கணக்கான பெண்களின் பிரச்சினையில் காட்டவில்லை. 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், வறுமை இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், பழைய கடன்களுக்கான வட்டித் தள்ளுபடி அல்லது கடன் மீள்கட்டமைப்பு (Debt Restructuring) குறித்து இச்சட்டம் மௌனம் காக்கிறது. ஒரு முறையான 'வெளியேறும் மூலோபாயம்' (Exit Strategy) இல்லாமல் புதிய விதிகளை மட்டும் புகுத்துவது, ஏற்கனவே உள்ள சமூகப் பதற்றத்தைத் தணிக்கப் போதுமானதாக அமையாது. இலங்கை முழுவதிலும் பரந்துள்ள ஆயிரக்கணக்கான பணக்கடன் வழங்குநர்களைக் கண்காணிப்பதற்கான ஆளணி மற்றும் தொழில்நுட்ப வசதி புதிய 'அதிகாரசபையிடம்' (MCRA) உண்டா என்பது கேள்விக்குறியே. போதுமான கண்காணிப்பு வசதிகள் இல்லாமல் சட்டங்களை மட்டும் இயற்றுவது, மீண்டும் ஒரு 'முறைசாரா கருப்புச் சந்தை' உருவாகவே வழிவகுக்கும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டமூலம் தொடர்பாக Transparency International Sri Lanka (TISL) தனது ஆழமான கவலையை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டமானது உயர்நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட அரசியலமைப்பு முரண்பாடுகளைத் தீர்க்கத் தவறியுள்ளதோடு, நலிவடைந்த கடன் பெறுபவர்களைப் பாதுகாப்பதில் கணிசமான பின்னடைவைக் கண்டுள்ளதாக TISL சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக,புதிய சட்டமானது "நுண்கடன் வணிகம்" என்பதனை அதன் "சமூக வலுவூட்டல்" (Social Empowerment) நோக்கத்தை வைத்தே வரையறுக்கின்றது. இந்த வரைவிலக்கணத்தைப் பயன்படுத்தி பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாம் வழங்கும் சிறிய கடன்களை "வணிக நோக்கம்" கொண்டவை எனக் கூறி, நுண்கடன் நிறுவனங்களுக்குரிய வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைத் தரநிலைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றம் தடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்த அந்தச் சமத்துவமின்மையை மீண்டும் உருவாக்குவதாக TISL எச்சரிக்கிறது.கடன் பெறுபவர் பாதுகாப்பு பற்றி சட்டம் பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும், வருமான சரிபார்ப்பு தரநிலைகள் (Income Verification) அல்லது வருமானத்திற்கும் கடனுக்கும் இடையிலான விகித வரம்புகள் (Debt-to-income ratios) இதில் கட்டாயமாக்கப்படவில்லை. அத்துடன், ஒழுங்குமுறை முடிவுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான தெளிவான வழிமுறைகளும் சட்டத்தில் இல்லை.

நுண்கடன் துறையுடன் தொடர்புடைய மிரட்டல், வற்புறுத்தி கடன் அறவிடுதல் மற்றும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் இலஞ்சம் போன்ற கடுமையான துஷ்பிரயோகங்களை இந்தச் சட்டம் ஒரு ஒழுங்குமுறை மீறலாகக் கருதத் தவறியுள்ளது. இத்தகைய முறைகேடுகளுக்குக் கட்டாய அறிக்கையிடல் கடமைகளையோ அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் தடைகளையோ இச்சட்டம் வழங்கவில்லை.முன்மொழியப்பட்டுள்ள அதிகார சபையின் நிர்வாகக் கட்டமைப்பில் நலன்சார் முரண்பாடுகளை வெளிப்படுத்தும் கட்டாயம் இல்லை. மேலும், நிதி ஆதாரங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் தன்னிச்சையான அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பது போன்றவை ஒரு வலுவான ஒழுங்குமுறை நிறுவனத்திற்குரிய நேர்மைத் தரநிலைகளை மீறுவதாக அமைந்துள்ளன.பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய பெண்களையும் குறைந்த வருமானம் கொண்ட சமூகத்தினரையும் சுரண்டல் மற்றும் சூறையாடும் கடன் நடைமுறைகளிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள "கடுமையான தோல்வியாகவே" இந்தச் சட்டத்தை TISL கருதுகின்றது.  

நுண்நிதித் துறையின் உறுதித்தன்மைக்கான மூலோபாய நகர்வுகள்   

இலங்கையின் நுண்நிதித் துறையானது பெண்களைக் கடன் சுமையிலிருந்து விடுவித்து, அவர்களை உண்மையான பொருளாதாரப் பங்காளிகளாக மாற்றுவதற்கு வெறும் சட்ட ஒழுங்குமுறை மட்டும் போதுமானதல்ல. மாறாக, சந்தை சார்ந்து இயங்கக்கூடிய மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய காத்திரமான கொள்கை மாற்றங்கள் அவசியமாகும். 2026 ஆம் ஆண்டின் புதிய சட்டத்தின் பின்னணியில், பின்வரும் நான்கு முக்கிய கொள்கைப் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன:  

கடன்-வருமான விகிதத்தை (DTI) கட்டாயமாக்குதல் - நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது வாடிக்கையாளரின் மொத்த வருமானத்தில் கடன் தவணையானது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற கடன்-வருமான விகிதத்தை (Debt-to-Income Ratio - DTI) அதிகாரபூர்வமாக அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக, இலங்கையின் தற்போதைய உயர் பணவீக்கச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஒரு பெண்ணின் நிகர வருமானத்தில் 35 சதவீதத்திற்கு மேல் கடன் தவணைகள் அமையாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். இது 'வருமானச் சரிபார்ப்பு' (Income Verification) முறையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்க விடாமல், நடைமுறைச் சாத்தியமான ஒன்றாக மாற்றும். 

டிஜிட்டல் கடன் தகவல் கட்டமைப்பை (Digital Credit Infrastructure) வலுப்படுத்துதல் - தற்போதுள்ள கடன் தகவல் பணியகத்தின் (CRIB) வரம்பை விரிவுபடுத்தி, அனைத்து உரிமம் பெற்ற நுண்நிதி நிறுவனங்களும் சிறிய அளவிலான கடன்களையும் உடனுக்குடன் பதிவு செய்யும் வகையில் ஒரு 'நிகழ்நேர டிஜிட்டல் தளம்' (Real-time Digital Platform) உருவாக்கப்பட வேண்டும். ADVOCATA நிறுவனம் (2020) வலியுறுத்தியது போல, தகவல் சமச்சீரின்மையை (Information Asymmetry) நீக்குவதன் மூலம் மட்டுமே ஒரு பெண் பல நிறுவனங்களில் ஒரே நேரத்தில் கடன் பெறுவதைத் தடுக்க முடியும். இது கடன் வழங்குநர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான போட்டியையும், கடன் பெறுபவர்களின் நிதி ஒழுக்கத்தையும் மேம்படுத்தும்.

'குழுப் பொறுப்பு' முறையிலிருந்து 'தனிநபர் மதிப்பீட்டு' முறைக்கு நகர்தல் - தற்போதைய நுண்நிதி மாதிரியில் உள்ள 'குழுப் பொறுப்பு' (Group Liability) முறையானது, கடன் செலுத்த முடியாத பெண்களைச் சமூக ரீதியாகத் தனிமைப்படுத்துவதற்கும், தற்கொலை போன்ற தீவிர முடிவுகளை எடுப்பதற்கும் தூண்டுகிறது. இதற்கு மாற்றீடாக, தனிநபரின் கடன் மதிப்பீடு (Credit Scoring) மற்றும் நுண்-காப்புறுதி (Micro-insurance) திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். கடன் தவணைகளைச் செலுத்த முடியாத காலப்பகுதியில், அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சிதைக்காத வகையில் ஒரு 'நிதிப் பாதுகாப்பு வலை' (Financial Safety Net) இச்சட்டத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும். 

நிதிசார் அறிவுறுத்தல் மற்றும் தொழில் முனைவோர் கல்வி (Financial Literacy & Entrepreneurship) - கடன் என்பது ஒரு மூலதனம் மட்டுமே தவிர, அது வருமானமல்ல என்ற புரிதலை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நுண்நிதி நிறுவனமும் தனது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வாடிக்கையாளர்களின் நிதிசார் அறிவுறுத்தல் (Financial Literacy) திட்டங்களுக்குச் செலவிடுவதைக் கட்டாயமாக்கலாம். கடனை வாங்குவதற்கு முன், அதன் வட்டி கணக்கீடு மற்றும் தொழில் முதலீடு குறித்த குறைந்தபட்ச பயிற்சியைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், 'நுகர்வுக் கடன்' (Consumption Debt) கலாச்சாரத்தை படிப்படியாகக் குறைத்து, 'உற்பத்திக் கடன்' (Productive Credit) கலாச்சாரத்தை ஊக்குவிக்க முடியும். 

பாலியல் இலஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகள்- நுண்கடன் துறையில் பெண்களுக்கு எதிராகக் காணப்படும் பாலியல் இலஞ்சம், மிரட்டல் மற்றும் வற்புறுத்தி கடன் அறவிடுதல் போன்ற துஷ்பிரயோகங்களை 'ஒழுங்குமுறை மீறல்களாக' (Regulatory violations) சட்டத்தில் உள்ளீர்க்க வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்வதுடன், அவற்றுக்கு எதிராகக் கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டும்.அதிகாரசபையின் முடிவுகளுக்கு எதிராகக் கடன் பெறுபவர்கள் மேன்முறையீடு செய்வதற்கான தெளிவான மற்றும் எளிமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அத்துடன், சட்டப் போராட்டங்களின் போது கடன் பெறுபவர்கள் தமக்குரிய சட்டப் பிரதிநிதித்துவத்தைப் (Legal Representation) பெறுவதற்கான தடையற்ற வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.எதிர்காலத் திருத்தங்கள் அல்லது புதிய விதிமுறைகளை உருவாக்கும்போது, இறுதி நேரத்தில் அல்லாமல் ஆரம்பக் கட்டங்களிலேயே பாதிக்கப்பட்ட பெண்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று அவற்றைச் சட்ட வரைவில் ஒருங்கிணைக்க வேண்டும்.

முடிவுரை  

இலங்கையின் நுண்நிதித் துறையானது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது. 2026 ஆம் ஆண்டின் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைச் சட்டம் (MCRA Act) என்பது இத்துறையைச் சீரமைப்பதற்கான ஒரு தீர்க்கமான முயற்சியாகும். இருப்பினும், இந்த ஆய்வின் மூலம் நாம் கண்டறிந்தது யாதெனில், வெறும் சட்டவாக்கத்தினால் மட்டும் நுண்கடன் பொறி எனும் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது என்பதாகும்.பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய சூழலில், நுண்நிதி என்பது பெண்களைச் சிறு தொழிலதிபர்களாக மாற்றும் 'உற்பத்திக் கருவி' என்பதிலிருந்து விலகி, அவர்களின் அன்றாட உயிர்வாழ்வைத் தீர்மானிக்கும் 'நுகர்வுக் கடன்' ஆக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு, வட்டி வீதக் கட்டுப்பாடுகள் போன்ற மேலோட்டமான தீர்வுகளுக்கு அப்பால் நாம் நகர வேண்டும். வட்டி வீதங்களைச் செயற்கையாகக் குறைப்பது நிதி உள்ளீர்ப்பைச் சிதைப்பதோடு, ஏழை மக்களை மீண்டும் முறைசாரா கந்துவட்டிக்காரர்களிடம் தள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்பதை கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த ஆய்வின் முக்கிய பரிந்துரையான 'அறிவியல் ரீதியான வருமானச் சரிபார்ப்பு' (Scientific Income Verification) மற்றும் 'கடன்-வருமான விகிதத்தை' (DTI) அமுல்படுத்துவது ஆகியவை, பெண்களின் கடன் வாங்கும் திறனை அவர்களின் வாழ்வாதாரத்தோடு ஒத்திசைக்க உதவும். அத்துடன், டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கடன் தகவல் பணியகத்தின் (CRIB) வரம்பை விரிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே, தகவல் சமச்சீரின்மையால் ஏற்படும் கடன் சுழற்சியைத் தடுக்க முடியும். இறுதியாக, நுண்நிதி நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், வாடிக்கையாளரின் நிதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும் ஒரு 'பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை' (Responsible Lending Culture) இச்சட்டம் உருவாக்க வேண்டும். கடன் என்பது பெண்களின் கழுத்தைச் சுற்றியிருக்கும் சுருக்குக் கயிறாக இல்லாமல், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கான ஏணியாக மாற வேண்டும் எனில், நிதி ஒழுங்குமுறை (Financial Regulation) என்பது சமூகப் பாதுகாப்போடு (Social Protection) கைகோர்த்துச் செயல்படுவது அவசியமாகும். அப்போதுதான், நுண்நிதி என்பது உண்மையான அர்த்தத்தில் 'அதிகாரமளித்தல்' (Empowerment) என்ற இலக்கை எய்த முடியும்.

*வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

மத்திய கிழக்கால் இலங்கைக்கு ஆகப்போவது என்ன?

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிகள் குறித்து நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஊடகங்களில் முக்கியச் செய்தியாக (Breaking News) ஏதேனும் ஒரு புதிய தகவல் வந்தவண்ணமே உள்ளது. ஆனால் நாம்? போரின் ஆழமான பின்னணிகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே, அச்சப்படத் தேவையில்லை என்றும் அடுத்த மாதம் வரை போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் அரசாங்கம் உறுதியளித்த பின்னரும், எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று பதற்றத்துடன் எரிபொருளைக் கொள்வனவு (Panic Buying) செய்யத் தொடங்கிவிட்டோம்.

இந்த நெருக்கடிக்கெல்லாம் அடிப்படைப் பின்னணி என்னவென வினவினால், அணு ஆயுத உற்பத்தியும் அதனால் எழும் அச்சுறுத்தலுமே காரணங்கள் எனக் கூறப்படுகிறது. எனினும், இதற்கான உண்மையான காரணத்தை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும். இதன் பின்னணியில் நுணுக்கமான அரசியலும் அதிகாரப் போட்டிகளும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்த போரினால் ஏற்படக்கூடிய பாரிய மாற்றங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதைச் சுருக்கமாக ஆராயவுள்ளோம்.

இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழல் உருவாகும்போது, உடனடியாக எரிபொருள் விலை உயரும் அல்லது தட்டுப்பாடு ஏற்படும் என்பதுதான் நம் அனைவரது முதல் எண்ணமாக இருக்கிறது. இதனால்தான் மக்கள் அச்சமடைந்து எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்குகிறார்கள். இது கண்களுக்குத் புலப்படும் ஒரு நேரடிப் பாதிப்பாக இருந்தாலும், இதற்கு அப்பால் நாம் கவனிக்கத் தவறும் அல்லது மறந்துவிடும் சில முக்கியப் பொருளாதாரக் காரணிகளும் உள்ளன.

முதலாவதாக, அந்த நாடுகளில் பணிபுரியும் மக்களும், அதன் விளைவாகப் பாதிக்கப்படவுள்ள நமது வேலைவாய்ப்புச் சந்தையும் (Job Market). கிட்டத்தட்ட, 1 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கை மக்கள் Gulf Cooperation Council (GCC) countriesகளில், அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான புள்ளிவிவரங்களின்படி, பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் விபரங்கள் பின்வருமாறு:

நாடு பணியாளர்களின் எண்ணிக்கை
ஐக்கிய அரபு அமீரகம்(UAE)  350,000
சவூதி அரேபியா  246,139
குவைத்  175,000
கத்தார்  140,000
ஓமான்  32,000
ஜோர்டான்  14,500
பஹ்ரைன்  13,130

இத்தனை பேரின் வாழ்வாதாரமும் உயிரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, அவர்களால் இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittance) பெருமளவில் பாதிக்கப்படும். இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பில் முக்கியமான எலும்பு தான் இந்த remittance பணம். 2025 ஆம் ஆண்டில் மட்டும் 8 பில்லியன் டாலர் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டிற்குள் வரும் பணம் வங்கிகளில் வெறும் இருப்பாக மட்டும் தங்கிவிடுவதில்லை; மாறாக, கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும் அது பெரும் உதவியாக இருக்கின்றது. இந்தப் போர்ச் சூழல் நீடிக்குமாயின், இலங்கைக்குப் பணம் அனுப்புவதை விடத் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அங்குள்ளவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். இதன் விளைவாக, வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை நம்பியிருக்கும் இலங்கைக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். அதேவேளை, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில், இலங்கையின் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தப் போர் காரணமாக, இனிவரும் காலங்களில் வளைகுடா நாடுகளுக்குப் பணி நிமித்தமாகச் செல்லவிருப்போரின் பயணங்களும் தடைப்படக்கூடும். இவ்வாறு வேலைவாய்ப்புகள் சுருங்குவதால், இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மற்றொருபுறம், அங்கு பணிபுரியும் மக்கள் பாதுகாப்பு நிமித்தமாக மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், அதனால் ஏற்படும் வருமான இழப்பையும், வேலையற்ற நிலையில் உள்வாங்கப்படும் அதிகப்படியான மக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கும்.

அடுத்ததாக, சுற்றுலாத்துறையில் (Tourism Industry) ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்துப் பார்ப்போம். சுற்றுலாத்துறையைத் தனது பிரதான வருமான ஆதாரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ள இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு, இந்தப் போர்ச் சூழல் மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் மேலைத்தேயநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு துபாய் (Dubai), தோஹா (Doha) மற்றும் அபுதாபி (Abu Dhabi) போன்ற வளைகுடாப் பிராந்தியங்களே Transit points ஆக விளங்குகின்றன. அதேபோல், நாம் இலங்கையிலிருந்து மேலைத்தேயநாடுகளுக்குப் பயணிப்பதற்கும் மத்திய கிழக்குப் பகுதிகளையே Transit points ஆகப் பயன்படுத்துகின்றோம். எனவே, இந்தப் போர்க்கால நிலைமையால் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் எட்டிஹாட் (Etihad) போன்ற முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் தமது பல விமானப் பயணங்களை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ கூடும். ஏற்கனவே சில விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சுற்றுலாத்துறை மட்டுமன்றி, தளவாடங்கள் மற்றும் சரக்குக் போக்குவரத்து (Logistics and Cargo transport) உள்ளிட்ட வான்வழிப் போக்குவரத்து மூலம் கிடைக்கக்கூடிய வருமானங்களையும் நாம் இழக்க நேரிடும். இது இறுதியில் இலங்கை ரூபாயின் ஸ்திரத்தன்மையிலும் (Stability) நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அடுத்ததாக, எமது வர்த்தக வருமானம் (Trade Income) பற்றிப் பார்ப்போம். ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகள் இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் மிக முக்கியமான நாடுகளாகத் திகழ்கின்றன. எனவே, இந்த யுத்தச் சூழலால் அந்த நாடுகளின் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது (Market Collapse), அது எமது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை நேரடியாகப் பாதிக்கும். அத்துடன், இந்தப் பாதிப்பை ஈடுகட்ட நாம் புதிய சந்தைகளைத் தேட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாவோம். இன்றைய நிலையில் அதுவும் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

தற்போதைய சூழலில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடிவிட்டது; இதன் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் தாங்கிய கப்பல்கள் வந்து சேராது, நாட்டில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகும் (வரிசை யுகம்), மின்சாரத் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு நாடு இருளில் மூழ்கும் மற்றும் பொருளாதாரம் சரிவடையும் என்றெல்லாம் செய்திகள் பரவுகின்றன.

மக்கள் மீண்டும் சொல்லொணாத் துயரங்களை விரும்பியோ விரும்பாமலோ அனுபவிக்கப் போகிறார்கள் எனும் செய்தியை ஒரு தரப்பினர் பரப்ப விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ, இவ்வாறான விபரீதங்கள் உண்மையாகவே நடந்துவிடுமோ என்று மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்தால் எண்ணெய் விநியோகம் முழுமையாக ஸ்தம்பிதமடையும் என்றும், நாட்டில் பயன்பாட்டிற்கு ஒரு சொட்டு எரிபொருள் கூட எஞ்சியிருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.

இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெயின் பெரும்பகுதி ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளிலிருந்தே பெறப்படுகின்றது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் சிங்கப்பூர் அல்லது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

எனவே, தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியிருக்கும் ஈரானுக்கு அருகிலுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாகவே எமது எரிபொருள் தாங்கிய கப்பல்கள் கட்டாயம் வர வேண்டும் என்பதில்லை. அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளும் தற்போது போர்ச் சூழலுக்கு அப்பாற்பட்ட மாற்றுப் பயணப் பாதைகளையே பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஒருவேளை போர் மூண்டாலும் எரிபொருள் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% முதல் 30% வரையான அளவு ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகவே நடைபெறுகின்றது; குறிப்பாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகம் இந்தப் பாதையையே நம்பியுள்ளது. ஈரானிய நெருக்கடி காரணமாக இந்த நீரிணை வழியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டால், உலகளாவிய ரீதியில் எண்ணெய் விநியோகம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தச் சந்தர்ப்பத்தில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகக் கடுமையாக உயரும். இலங்கை தனது இறக்குமதிக்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தினாலும், சர்வதேச சந்தையில் நிலவும் அந்தப் பாரிய விலை அதிகரிப்பிற்கு ஏற்பவே எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். விநியோகப் பாதை வேறாக இருந்தாலும், சர்வதேச சந்தை விலையின் தாக்கத்திலிருந்து நாம் தப்ப முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை மிகப்பாரிய சிக்கல் என்னவெனில், உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயரும்போது, மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்காக நாம் பெருமளவிலான டொலர்களைச் செலவிட வேண்டியிருக்கும். இது எமது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்புக்கு (Foreign Exchange Reserves) கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், நாட்டில் மீண்டும் டொலர் பற்றாக்குறை உருவாகக்கூடிய அபாயம் உள்ளது. தற்போதைய சூழலில் நேரடிப் பாதிப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும், இலங்கை இப்போதுதான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. இத்தருணத்தில் ஏற்படும் இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகள், 'மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய' கதையாக மாறி, எமது பொருளாதார மீட்சியை மீண்டும் சீர்குலைத்துவிடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உருவானால், அந்தப் பிராந்தியத்தின் ஊடாகச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் (Insurance Premium) மற்றும் இதர கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இந்தக் காப்பீட்டுத் தொகையானது மிகச் சிறியது அல்ல; மாறாக அது ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் செலவில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கக்கூடியது. இவ்வாறு அதிகரிக்கப்படும் கூடுதல் செலவுகள் அனைத்தும், இறுதியாக இலங்கையில் நுகர்வோர் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையுடனேயே சேர்க்கப்படும்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையமானது ஆரம்பத்தில் Iranian Light வகை மூல எண்ணெயைச் சுத்திகரிப்பதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டது. சர்வதேசத் தடைகள் காரணமாக நாம் தற்போது ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை என்றாலும், ஒரு நெருக்கடி காலத்தில் சபுகஸ்கந்தவின் தொழில்நுட்பக் கட்டமைப்பிற்குப் பொருந்தக்கூடிய மாற்று மூல எண்ணெயை (Alternative Crude Oil) விரைவாகக் கண்டறிவது என்பது எளிதான காரியம் அல்ல.

ஆக மொத்தத்தில், இலங்கைக்குப் பாரிய ஆபத்து என்பது கப்பல்கள் தடைப்பட்டு எரிபொருள் இல்லாமல் போவது அல்ல; மாறாக, உலகச் சந்தையில் எண்ணெயின் விலை உயர்ந்து எமது பொருளாதாரச் சுமை அதிகரிப்பதே ஆகும். 

எது எப்படியோ, அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனவே, எவரும் உச்சந்தலையைப் பிளக்கும் இந்தப் பங்குனி வெயிலில் தேவையற்ற முறையில் வரிசைகளில் நின்று காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. 

இருப்பினும், தனது வாகனத்தின் எரிபொருள் கலனை (Tank) நிரப்பிக் கொண்டால் மட்டும் போதும், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நெருக்கடியும் தீர்ந்துவிடும் என்று நினைக்கும் விசித்திரமான மனிதர்கள் வாழும் நாடு இது. இத்தகைய மனப்பாங்கு கொண்டவர்களைத் திருத்துவது என்பது எப்போதும் ஒரு சவாலான காரியமே.

ஆக்கம்:- ச.துலாங்கன்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவின் திட்டமும் இலங்கையின் தயக்கமும்

இந்த கட்டுரை ஒரு சிங்கள கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும்.

இந்தியா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல், வர்த்தகக் களத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) அது அண்மையில் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் புது டெல்லி மற்றும் பிரஸ்ஸல்ஸை தாண்டி பல தாக்கங்களை ஏற்படுத்தும். இது கொழும்பிலும் விளைவுகளை உருவாக்கும்.

பல ஆண்டுகளாக, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஜிஎஸ்பி பிளஸ்' (GSP+) திட்டத்தினால் பயனடைந்து வந்தது. GSP+ திட்டத்தின் கீழ், இலங்கை போன்ற வளரும் நாடுகள் மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக ஆட்சி முறை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்கச் செயல்படும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யும் போது பூஜ்ஜியம் அல்லது சலுகை வரி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. 

அந்தச் சலுகை அணுகல் ஒரு தெளிவான ஊக்கத்தை உருவாக்கியது. GSP+ அணுகல் இல்லாத இந்திய முதலீட்டாளர்கள், இலங்கையை ஐரோப்பிய சந்தைக்கான ஒரு நுழைவாயிலாகப் பார்த்தனர். ஆடை, கடல் உணவு, இறப்பர் தயாரிப்புகள் மற்றும் பல உற்பத்தித் துறைகள் நேரடியாகப் பயனடைந்தன. GSP+ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகையின் காரணமாகவே சில நிறுவனங்கள் இலங்கையைத் தேர்ந்தெடுத்தன.
ஆனால், இந்தச் சூழ்நிலை இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.  

இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அணுகல்

இந்தியா இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், GSP+ இன் கீழ் இலங்கை அனுபவித்த ஒப்பீட்டு ரீதியான நன்மை அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, எமக்கு நிகரான அல்லது முன்னுரிமை அடிப்படையிலான அணுகல் இப்போது ஐரோப்பாவிற்கு கிடைக்குமென்றால், ஒரு காலத்தில் இலங்கையைத் தனித்துவப்படுத்திய வரிச் சலுகையின் தாக்கம் குறையத் தொடங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய வரி விதிப்பைப் பொறுத்தவரை, ஒரு தொழிற்சாலையை இலங்கையில் அமைப்பதற்கும் இந்தியாவில் அமைப்பதற்கும் இடையில் இனி பெரிய அளவில் வேறுபாடு இருக்காது.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு கட்டமைப்பு ரீதியான வேறுபாடும் உள்ளது. GSP+ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஒருதலைப்பட்சமாக வழங்கப்படும் ஒரு சலுகையாகும். அதனை எப்போது வேண்டுமானாலும் மீளப் பெறலாம். இதற்கு நேர்மாறாக, ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) என்பது இரு இறையாண்மையுள்ள அரசாங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்ட, பரஸ்பர ஏற்பாடாகும். இது வேறுபட்ட அளவிலான கணிக்கக்கூடிய தன்மை (predictability) மற்றும் சட்ட ரீதியான உறுதியைக் கொண்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியா கைச்சாத்திட்ட முதலாவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 1998 இல் கையெழுத்திடப்பட்டு 2000 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த 'இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்' (ISFTA) என்பதைப் பலர் நினைவில் வைத்திருப்பதில்லை. அக்காலப்பகுதியில், இரு நாடுகளும் தமது வர்த்தகத் தாராளமயமாக்கல் பயணத்தில் ஏறக்குறைய ஒரே நிலையிலேயே இருந்தன.

அதன் பிறகு, இந்தியா தீர்க்கமான முறையில் நகர்ந்து, வளர்ச்சியடைந்து, கிட்டத்தட்ட 60 நாடுகள் மற்றும் முக்கிய பொருளாதாரக் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தமே கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளை எடுத்துக்கொண்டது. இதற்கிடையில், இலங்கையானது பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் பின்னர் தாய்லாந்துடன் ஒப்பந்தங்களைச் செய்திருந்தாலும், இந்த ஏற்பாடுகளின் ஆழம், பயன்பாடு மற்றும் சீரான தன்மை குறித்து கேள்விகள் நீடிக்கின்றன. இந்த வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவாக தெரிகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அணுகல் ஏனைய உலகளாவிய தரப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வர்த்தக உறவுகள் மூலோபாய ரீதியானவை; ஒரு இடத்தில் ஏற்படும் ஒப்பந்தம் பெரும்பாலும் மற்ற இடங்களிலும் மாற்றங்களைத் தூண்டுகிறது. ஒரு பெரிய சந்தை இந்தியாவிற்குத் திறக்கப்படும்போது, மற்றவர்களும் அதைக் கவனத்தில் கொள்கிறார்கள்.

இலங்கையின் யதார்த்தம்

இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு, சந்தை அணுகலைப் பாதுகாப்பதில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) பெறுமதியான கருவிகளாகும். ஆனால் நாம் யதார்த்தத்தையும் யோசிக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பு பெருமளவில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களை (SMEs) உள்ளடக்கியது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் பொருட்களின் பிறப்பிட விதிகள் (rules of origin), சான்றிதழ் தேவைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களுக்கு இணங்குவது செலவு குறைந்ததாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். பல சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு, இந்த நிர்வாகச் சுமையே ஒரு தடையாக மாறுகிறது. ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது என்பது தானாகவே அது பயன்பாட்டிற்கு வரும் என்று அர்த்தமாகாது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் சிறிய உள்நாட்டு நிறுவனங்களை விட பெரிய அளவிலான முதலீட்டாளர்களையே ஈர்க்கின்றன. இருப்பினும், பெரிய முதலீட்டாளர்கள் கூட வரிச் சலுகைகளுக்காக மட்டும் வருவதில்லை. அவர்கள் ஸ்திரத்தன்மை, கணிக்கக்கூடியதன்மை மற்றும் கொள்கையிலுள்ள நம்பகத்தன்மை ஆகியவற்றுக்காகவே வருகிறார்கள். ஒரு வர்த்தக ஒப்பந்தத்தால் பேரினப் பொருளாதார ஸ்திரமின்மை அல்லது ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மையை ஈடுகட்ட முடியாது.

அதனால்தான் இலங்கை மேலதிக வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை எளிதாக்குதல், பரா-தீர்வை வரிகளை (para-tariffs) குறைத்தல், சுங்க நடைமுறைகளை முறைப்படுத்துதல் மற்றும் கணிக்ககூடிய வர்த்தக ஆட்சியை உருவாக்குதல் போன்ற ஒருதலைப்பட்சமான தாராளமயமாக்கல் நமக்குத் தேவை. வர்த்தகம் சார்ந்த வளர்ச்சி நமக்கு முக்கியம் எனின், வெளிப்படைத்தன்மை என்பது வெளிநாடுகளில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது; அது உள்நாட்டிலும் வேரூன்றியிருக்க வேண்டும்.

கண்டிப்பாக, இலங்கைக்கு இல்லாத சில கட்டமைப்பு ரீதியான நன்மைகளை இந்தியா கொண்டுள்ளது. அது அளப்பரிய பொருளாதாரப் பரிமாணம் (scale), பரந்த தொழிலாளர் படை மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் ஒரு பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்டுள்ளது. இலங்கையிடம் அந்த அளப்பரிய பரிமாணம் இல்லை. ஆனால் அந்த யதார்த்தம் தயக்கத்திற்கான ஒரு சாக்குப்போக்கு அல்ல; அதனால்தான் நாம் உலகளாவிய வர்த்தக வலைப்பின்னல்களில் வேகமாகவும் ஆழமாகவும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஒரு எளிய பாடம்

ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று கணிப்புத்தன்மை ஆகும். ஆட்சி கட்டமைப்புகள் பெரும்பாலும் பலவீனமாகவும் அடிக்கடி கொள்கை மாற்றங்கள் நிகழும் இலங்கை போன்ற நாடுகளில், ஒருதலைப்பட்சமான வரி குறைப்புகள் கூட ஆட்சி மாற்றம் அல்லது அழுத்தம் கொடுக்கும் குழுக்களின் காரணமாக மாற்றியமைக்கப்படலாம். ஒரு பிணைப்பு ஒப்பந்தம் ஒழுக்கத்தை வழங்குகிறது. இது சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துகிறது.

தற்போதுள்ள ஒப்பந்தங்கள் குறித்து பரவலான தவறான கருத்துக்களும் உள்ளன. ISFTAஐ எடுத்துக்கொள்வோம். இது இந்தியாவிற்கு மட்டுமே அதிகப்படியான பலனைத் தருகிறது என்று பலர் கருதுகின்றனர். இருப்பினும், தரவுகள் மிகவும் நுணுக்கமான வேறு கதையைச் சொல்கின்றன.

2021 ஆம் ஆண்டில், இலங்கை இந்தியாவிற்கு சுமார் 815 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதில் சுமார் 525 மில்லியன் டொலர் (கிட்டத்தட்ட 64%) ISFTA சலுகைகளின் கீழ் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதே ஆண்டில், இலங்கை இந்தியாவிலிருந்து சுமார் 4.4 பில்லியன்  டொலர் பெறுமதியான பொருட்கள இறக்குமதி செய்தது, ஆனால் அதில் சுமார் 208 மில்லியன் டொலர் (5% க்கும் குறைவானது) மட்டுமே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வந்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கைக்கு வரும் பெரும்பாலான இந்திய ஏற்றுமதிகள் ISFTA சலுகைகளை நம்பியிருக்கவில்லை; அவை சாதாரண வரி விதிப்பின் கீழேயே நுழைகின்றன. மாறாக, இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியில் கணிசமான பங்கு இந்த ஒப்பந்தத்தையே சார்ந்துள்ளது. ஏற்றுமதி என்பது இறக்குமதியை விட 'சிறந்தது' என்று ஒருவர் நம்பினால் கூட, இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு இலங்கைக்கு ஒரு அர்த்தமுள்ள அணுகலை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. இதனை நீக்குவது அல்லது பலவீனப்படுத்துவது இந்திய ஏற்றுமதியாளர்களை விட இலங்கை ஏற்றுமதியாளர்களையே அதிகம் பாதிக்கும்.

இதேபோன்ற ஒரு போக்கை பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் அவதானிக்கலாம்.

இந்தச் சூழலில், 'செஸ்' (cess) வரி மற்றும் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (PAL) போன்ற மேலதிக வரிகளை நீக்கிவிட்டு, நான்கு அடுக்கு வரி கட்டமைப்பை நோக்கி நகர்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு பாராட்டத்தக்கது. இந்த முறைப்படுத்தல் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் சீர்திருத்தம் சீரானதாக இருக்க வேண்டும். வரிகளை எளிமைப்படுத்தும் அதே வேளையில், வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து விலக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளான 'எதிர்மறைப் பட்டியல்களை' (negative lists) விரிவுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். விலக்குகளை விரிவுபடுத்துவது தாராளமயமாக்கலின் நோக்கத்தையே முறியடிக்கிறது.

இந்தியா, தனது அரசியல் சொல்லாடல்களுக்கு மத்தியிலும், விவசாயம் போன்ற வரையறுக்கப்பட்ட மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட உணர்திறன் மிக்க துறைகளைத் தவிர ஏனைய பகுதிகளில் தனது பொருளாதாரத்தை படிப்படியாகத் திறந்துவிட்டுள்ளது. உண்மையில், இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அண்மையில் 'The Economist' இதழில் எழுதியுள்ளவாறு, இந்தியா உலகின் மிகவும் திறந்த முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும் விளிம்பில் இருக்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரை, எமக்கான பாடம் மிகவும் எளிமையானது. வரம்புக்குட்பட்ட உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட ஒரு சிறிய தீவுப் பொருளாதாரத்தில், வர்த்தக சீர்திருத்தத்திற்கு நிலையான மாற்று வழி எதுவுமில்லை. பாதுகாப்புக் கொள்கை (protectionism) குறுகிய காலத்திற்கு பாதுகாப்பானதாகத் தோன்றலாம், ஆனால் தனிமைப்படுவது வாய்ப்புகளைச் சுருக்குகிறது. தயக்கம் காட்டுவது தீர்வாகாது. உலகப் பொருளாதாரத்துடன் வேகமான, ஆழமான மற்றும் முன்கணிப்பு செய்யக்கூடிய ஒருங்கிணைப்பே தீர்வாகும்.

வர்த்தகம் என்பது இலங்கைக்கு ஒரு ஆடம்பரமல்ல. அது ஒரு அத்தியாவசியம். அந்தச் சீர்திருத்தங்கள் இனி காத்திருக்க முடியாது.

இலங்கையில் ஊழல் குறைந்துள்ளதா?

இந்த கட்டுரை ஒரு சிங்கள கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும்.

ஊழலால் ஏற்படும் அநீதியை முடிசுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் Transparency International என்ற உலகளாவிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2025 ஊழல் உணர்வுச்சுட்டிக்கு (Corruption Perceptions Index 2025: CPI) ஏற்ப, இலங்கை, சர்வதேச தரப்படுத்தல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டியுள்ளது. அதாவது, 181 நாடுகளில், 107வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அப்படியென்றால், இலங்கையில் ஊழல் குறைந்துள்ளதா? இந்த CPI மூலம் என்ன அளவிடப்படுகிறது? ஊழலை எதிர்த்துப் போராட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

ஊழல் என்பது என்ன?

யாதேனும் ஒரு நபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஊழல் என்று கருதப்படும். பல காலமாக எம்முடைய நாட்டில் நிலையற்றதன்மை, பொருளாதார சிக்கல்களின் மத்தியில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை அடிக்கடி கேட்க முடிந்தது. அதிகாரம் தவறான முறையில் பாவிக்கப்படும் போது ஏற்படும் ஊழலால் நம்பிக்கை சிதைவது மட்டுமன்றி, ஜனநாயகம் பலவீனமடைகிறது. இன்னும் எளிமையாக சொல்வதானால், பொருளாதார அபிவிருத்திக்கு தடை ஏற்பட்டு, சமத்துவமின்மை, வறுமை, சமூக பிளவு மற்றும் சூழல் நெருக்கடிகள் உண்டாகின்றன.

CPI குறியீட்டால் அளவிடப்படுவது என்ன?

CPI குறியீடு மூலம் 181 நாடுகள் எடுக்கப்பட்டு, அந்த அந்த நாடுகளில் உள்ள ஊழலின் நிலைக்கு ஏற்ப நாடுகளை நிரல்படுத்தல் நடைபெறும். இந்த குறிகாட்டியில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுக்கு ஏற்பவே நாடுகளின் தரப்படுத்தல் இடம்பெறும். அந்த வகையில், 0 முதல் 100 வரையில் புள்ளி வீச்சு உள்ளது. அதில் ஒரு நாடு எடுக்கும் புள்ளி, 0க்கு அருகில் இருக்குமாயின், அல்லது மிக குறைவான புள்ளியை பெறுமெனின், அந்த நாட்டின் அரச கட்டமைப்பு ஊழல் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று பொருள்படும். அதேவேளை, ஒரு நாட்டின் புள்ளி, 100க்கு அருகில், அல்லது, அதிகூடிய புள்ளியை பெறுமாயின், அந்நாடு, ஊழல் குறைவாக உள்ள, சுத்தமான நாடு என கருதப்படும்.

இந்த ஆண்டு குறிகாட்டியைத் தயாரிக்கும்போது ஒவ்வொரு நாட்டிலுள்ள ஊழல் தொடர்பில் பின்வரும் பல அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்பட்டன: இலஞ்சம் மற்றும் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், தண்டனைக்கு பயமின்றி தனிப்பட்ட லாபத்திற்காக அரசு அலுவலகங்களைப் பயன்படுத்துதல், அரசுத் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் உள்ள திறன், ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க கூடிய அரசதுறையின் நிலைகள் மற்றும் அரச சேவையில் இடம்பெறும் உறவினர்களுக்குச் சலுகை வழங்கும் நியமனங்கள் (Nepotism).

இதற்கு மேலதிகமாக, நிர்வாகிகள் தங்கள் நிதி நலன்களை வெளிப்படுத்துமாறு உறுதிப்படுத்தும் சட்டங்கள், ஊழலைப் புகாரளிப்பவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு, குறுகிய லட்சியங்கள் மூலம் அரசைக் கைப்பற்றுதல் மற்றும் அரசுத் தகவல்களைப் பெறுவதற்கான அணுகல் போன்றவையும் அடங்குகின்றன.

2025 CPI குறிகாட்டியில் குறிப்பிடப்படும் விடயங்கள்

2025-ஆம் ஆண்டில் உலகின் ஊழல் மிகக் குறைந்த நாடாக டென்மார்க் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்காண்டிநேவிய நாடுகள் தரவரிசையின் முதல் 10 இடங்களுக்குள் பெருமளவில் உள்ளன. மிகக் குறைந்த புள்ளிகளுடன் தரவரிசையில் கீழே உள்ள நாடுகளில் தெற்கு சூடான், சோமாலியா மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்கும்

நாடு தரவரிசை புள்ளிகள்
டென்மார்க்  1 89
பின்லாந்து  2 88
சிங்கப்பூர்  3 84
நியூசிலாந்து  4 81
நோர்வே  4 81
ஸ்வீடன்  6 80
சுவிற்சர்லாந்து  6 80
லக்சம்பர்க்  8 78
நெதர்லாந்து  8 78
ஜெர்மனி  10 77
ஐஸ்லாந்து  10 77
மூலம்: Transparency International annual rankings

இலங்கைக்கு புள்ளிகள் வழங்கலாமா? 

கடந்த 10 வருட காலத்தில் CPI குறிகாட்டியில் இலங்கை பெற்றுக்கொண்ட புள்ளிகள் பின்வருமாறு:

வருடம் தரவரிசை புள்ளிகள்
2015 83 37
2016 95 36
2017 91 38
2018 89 38
2019 93 38
2020 94 38
2021 102 37
2022 101 36
2023 115 34
2024 121 32
2025 107 35
மூலம்: Transparency International annual rankings

இலங்கையின் புள்ளிகள் 32 முதல் 38 வரையிலான வரம்பிற்குள் இருப்பதால், ஊழல் மட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இருப்பினும், 2015 இலிருந்து 2026 வரையான காலத்திற்குள் தரவரிசையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கையின் தரவரிசை மோசமாக இருந்துள்ளது. 2024இல் இலங்கை 32 புள்ளிகளுடன் 121-வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த அடிப்படையில், 2025இல் இலங்கை 14 இடங்கள் முன்னேறி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2012 ஆம் ஆண்டிலிருந்து சில நாடுகள் ஊழலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், ஏனைய நாடுகள் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கின்றன. கருத்தில் கொள்ளப்பட்ட 181 நாடுகள் அல்லது பிராந்தியங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையானவற்றால் 50க்கும் குறைவான புள்ளிகளையே பெற முடிந்துள்ளது. இதற்காகப் பொதுமக்களே நஷ்டஈடு செலுத்த வேண்டியுள்ளது. ஊழல் காரணமாக நிதி குறைந்த வைத்தியசாலைகள், நிர்மாணிக்கப்படாத வெள்ளப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் அழிந்து போயுள்ளன.

இலங்கையின் CPI தரவரிசை என்பது வெறும் எண் மட்டுமல்ல; இது முதலீட்டாளர்கள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து வழங்கப்படும் ஒரு சமிக்ஞையாகும். இலங்கையின் CPI தரவரிசையை மேம்படுத்துவது என்பது நாட்டின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதாகும். வெளிப்படையான கொள்முதல் முறை, வலுவான ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் ஆகியவை பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நேரடியாகப் பங்களிக்கும். ஊழல் மற்றும் பலவீனமான நிர்வாக அமைப்புகளுக்குத் தீர்வுகாணாதவரை, நிலையான வளர்ச்சியை எட்ட முடியாது.

இலங்கை பொருளாதார ரீதியாக மீட்சியடைவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தில், நிர்வாக மறுசீரமைப்பை ஒரு துணை உரையாடலாக கொள்ளக்கூடாது. அது நிலையான வளர்ச்சியின் மையப்புள்ளியாகும். உயர்ந்த CPI தரவரிசையினால் மாத்திரம் எமது பொருளாதார சவால்கள் ஒரே இரவில் தீர்ந்துவிடாது. ஆனால், ஊழல் மற்றும் நிறுவன ரீதியான பலவீனங்களுக்குத் தீர்வுகாணாத வரை நிலைமை சிறப்பாக அமையாது. எனவே, பொருளாதார ஸ்திரத்தன்மை இலக்காக இருந்தால், நிறுவன ரீதியான ஒருமைப்பாடு அதன் அடிப்படையாக அமைய வேண்டும்.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை Advocata நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

பொருளாதாரம் நிமிர்ந்தும் பலனை உணரா இலங்கை மக்கள்

பல வருட பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின்பு, இலங்கையின் பொருளாதார குறிகாட்டிகள் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளன. நாணய மதிப்பு நிலையாகிவிட்டது. 2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டில் உச்சத்திலிருந்த பணவீக்கம் குறைந்துள்ளது, வெளிநாட்டு இருப்புக்கள் அதிகரித்துள்ளன, சர்வதேச நாணய நிதியம், அதன் ஆதரவைத் தொடர்கிறது, மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீண்டும் விருத்தியடைய ஆரம்பித்துள்ளது 

இலங்கை சாலைகளில், புதிய BYD வாகனங்களினால் படிப்படியாக நிரம்பத் தொடங்கியுள்ளன. சிற்றுண்டி மற்றும் உணவகங்கள் நெரிசலில் உள்ளன, மேலும் வார இறுதி நாட்களில் மக்கள் பொது பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளுக்குச் செல்கின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால், பொருளாதாரம், பாரிய மீட்சியை அடைந்ததாகவே தெரிகிறது.

ஆயினும், இந்த நேர்மறையான அறிகுறிகள் இருந்தபோதிலும், பெரூம்பாலான இலங்கை மக்கள் இந்த பொருளாதார மீட்சியை இதுவரை உணரவில்லை. சராசரி குடிமக்களை கேட்டால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதுவும் மாறவில்லை என்று சொல்வார்கள்: பணவீக்கம் குறைவு, ஆனால் பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன, ஊதியங்கள் பாரிய அளவில் இதுவரை அதிகரிக்கப்படவில்லை. வேலையின்மைக் குறிகாட்டி குறைவாக உள்ள போதும் வேலை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கை மக்கள் மனதில் மங்கலாகவே உள்ளது. இந்த முரண்பாடு,  பொருளாதார புள்ளிவிவரங்கள் வளர்ச்சியைக் குறிக்கின்ற போதும் நுண்ணிய அளவிலான அனுபவங்கள் தேக்கத்தை பிரதிபலிக்கின்றன.  இவ்விடயம் இலங்கையின் தற்போதைய பொருளாதார பேசு பொருளாகியுள்ளது .

பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தை மக்கள் ஏன் உணரவில்லை, மீட்சியின் கட்டமைப்பு, சமூக மற்றும் உளவியல் பரிமாணங்கள் என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. மேலும், பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உணரப்படுவதாகவும் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆராய்கிறது.

பொருளாதார மீட்சியும் யதார்த்தமும்

இந்தத் துண்டிப்புக்கான முதன்மைக் காரணம், பொருளாதார ஸ்திரத்தன்மை தானாகவே செழிப்பாக மாறாது. நிதிப் பற்றாக்குறைகளைக் குறைத்தல், பணவியல் கொள்கையை இறுக்குதல் மற்றும் மானியங்களை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கத்திற்கமைய தேசிய வரவு செலவுக் கணக்குகளை சமநிலைப்படுத்த உதவுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் அடிமட்டம் முதல் நடுத்தர குடும்பங்களை வலுப்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை செலுத்தவில்லை.

பணவீக்க விகிதம் குறைதல் (2022ஆம் வருடம் நடுப்பகுதியில் 70% க்கும் அதிகமாக இருந்து, 2025ஆம் வருடம் நடுப்பகுதியில் 5% க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.), வலுவடைந்த ரூபாய் மற்றும் அதிகரித்து வரும் வெளிநாட்டு இருப்புக்கள் போன்ற இலங்கையின் பொருளாதார குறிகாட்டிகள் உண்மையான பெறுபேறுகளாகும். ஆனால் இந்த முன்னேற்றங்கள் பெரும்பாலும் அரசு, முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக்கின்றன. சராசரி குடிமகனுக்கு - குறிப்பாக தினக்கூலிகள் அல்லது நிலையான வருமானம் (மாத சம்பளம்) ஈட்டுபவர்களுக்கு, அவர்களின் வாங்கும் சம்பளம்  குறைவாக இருப்பதனால் அன்றாடம் வாழ்வாதாரத்துடன் போராட வேண்டியுள்ளது. அதனால்  இந்த எண்ணிக்கைகளினால் சாதாரண மக்களுக்கு எவ்விதமான பயனுமில்லை.

பணவீக்கம் தொழில்நுட்ப ரீதியாகக் குறைந்திருந்தாலும், மூன்று ஆண்டுகால உயர் விலைகளின் ஒட்டுமொத்த விளைவும், மக்களை எரியும் தீயில் பெற்றோல் ஊற்றிய உணர்வையே ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தே உள்ளன, மேலும் எரிபொருள், மின்சாரம் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்னும் பலரால் வாங்க முடியாத நிலையில் உள்ளன.

மளிகைப் பொருட்களுக்கு ரூ. 10,000 செலவழித்த ஒரு குடும்பம் இப்போது அதே பொருட்களுக்கு ரூ. 18,000 முதல் ரூ. 20,000 வரை செலுத்த வேண்டியுள்ளது. நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கும் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்தாலும் கூட தங்கள் வருமானம் தேக்கமடைந்துள்ளதை கண்டுள்ளனர். பணவீக்கம் "குறைந்தாலும்", நிதி மூச்சுத் திணறல் உணர்வு இன்னும் தொடர்கிறது.

குறைந்த ஊதியம்

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் பட்டினி இருந்தாவது சகித்துக் கொள்ள பணித்தாலும், சம்பள உயர்வுகள் ஏதேனும் இருந்தால் அவை மிகக் குறைவாகவே உள்ளன. ஏற்றுமதிகள் மற்றும் சேவைகளில் ஓரளவு மீட்சி இருந்தாலும், வணிகங்கள் எச்சரிக்கையாகவே உள்ளன. யாரும் பணத்தைத் தாரை வார்க்கத் தயாரில்லை. பல வருடங்களின் பணவீக்கத்தின் காரணமாக ஊதியங்கள் அதிகரித்திருந்தாலும், முன்னரை விடக் குறைவான பொருட்களயே வாங்க முடிகின்றது, மேலும் புதிய வேலை வாய்ப்புகள் - குறிப்பாக தரமான, அதிக ஊதியம் தரும் வேலைகள்,  போதுமான எண்ணிக்கையில் உருவாகவில்லை.

முறைசாரா பொருளாதாரத்தில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விட, உண்மையான அடிப்படையில் குறைவாகவே உழைக்கின்றோம் என்று தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு, பொருளாதார வளர்ச்சி பற்றிய பேச்சு அன்றாட வாழ்க்கையின் குழப்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு உயரடுக்கு உரையாடலாக உணர்கிறது.

அதிக நகர்ப்புற வளர்ச்சி

நெரிசலான உணவகங்கள் மற்றும் புதிய வாகனங்கள் போன்ற செழிப்பின் காட்சி குறிப்புகள் பெரும்பாலும் கொழும்பு, கண்டி அல்லது காலி போன்ற நகர்ப்புற மையங்களில் மட்டுமே உள்ளன. இந்த மையங்கள் சேவைத் துறை வல்லுநர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து நிதியளிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவை. அவை பொருளாதார அதிர்ச்சிகளிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு, மீட்சியின் போது விரைவாகப் பயனடைகின்றன.

இருப்பினும், இலங்கையிலுள்ள, கிராமப்புற பிரதேசங்கள் வேறுபட்ட கதையைச் சொல்கின்றன. மொனராகலை, முல்லைத்தீவு அல்லது அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில், மீட்சியின் வேகம் மிகவும் மெதுவாக உள்ளது. விவசாயிகள் தொடர்ந்து சீரற்ற வானிலை, அதிக உள்ளீட்டு செலவுகள் மற்றும் சந்தைகளுக்கான மோசமான அணுகல் ஆகியவற்றுடன் போராடுகிறார்கள். ஒரு காலத்தில் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக இருந்த அரசாங்க ஆதரவு மற்றும் மானியங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கநிலைப்பாட்டுடன் பிணைக்கப்பட்ட சிக்கனத் திட்டங்களின் கீழ் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, நகர்ப்புறம்  சுறுசுறுப்பாக இயங்கினாலும், கிராமப்புறங்களில் பெரும்பான்மையானவை இன்னும் அன்றாட வாழ்வாதாரத்துக்காக சிக்கித் தவிக்கின்றன.

மீட்பின் உணர்வை முடக்கும் மற்றொரு முக்கியமான காரணி வீட்டுக் கடனின் சுமை. பொருளாதார சரிவின் உச்சக்கட்டத்தில் (2021–2023), பல குடும்பங்கள்  உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முறைசாரா கடன், நுண்நிதி கடன்கள் அல்லது பல வங்கிக் கடன்களை நம்பியிருந்தன.

இன்று, பொருளாதாரம் நிலைபெறும் போது, அந்தக் கடன்களும்  அப்படியே உள்ளன. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள், மீளச் செலுத்துதல்களை, பலருக்கு இன்னும் வேதனையடையச் செய்துள்ளன. குறைக்கப்பட்ட பணவீக்கத்தால் பயனடைந்திருக்கக்கூடிய குடும்பங்கள், அதற்கு பதிலாக தங்கள் வருமானத்தை கடன்களைச் செலுத்தப் பயன்படுத்துகின்றன, இதனால் எதிர்காலத்தில் நுகர்வு, சேமிப்பு அல்லது முதலீட்டிற்கு சிறிய வாய்ப்பே கிடைக்கிறது.

வேலையின்மை வளர்ச்சி

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளால் இயக்கப்படுகிறது, இது பல துறைகளில் குறிப்பிடத்தக்க வேலை உருவாக்கத்திற்கு வழிவகுக்கவில்லை. ஒரு காலத்தில் குறைந்த திறமையான தொழிலாளர்களின் முக்கிய தொழில்துறையாக இருந்த ஆடைத் துறை, இன்னும் முழுமையாக மீளவில்லை. இளைஞர்களின் வேலையின்மை அதிகமாக உள்ளது, குறிப்பாக பல்கலைக்கழக பட்டதாரிகளிடையே, அவர்களின் கல்விக்கும் சந்தைத் தேவைகளுக்கும் இடையில் பொருந்தாத தன்மையை எதிர்கொள்கிறது.

வேலை செய்பவர்கள் கூட அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யாத ஊதியத்திற்காக நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களைச் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய தொழிலாளர் சந்தை இல்லாமல், பொருளாதார வளர்ச்சி என்பது, மக்களுக்கு வெறுமையாகவே இருக்கும்.

உளவியல் அதிர்ச்சி

புள்ளிவிவரங்களுக்கு அப்பால், இலங்கையின் பொருளாதார சரிவின் உளவியல் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது - எரிபொருள் வரிசைகள், மருந்து பற்றாக்குறை, மின்சாரத்தடை நேரங்கள், பாடசாலை மூடல்கள் மற்றும் அரசியல் குழப்பம் ஆகியவை ஆழமான உணர்ச்சி வடுக்களை ஏற்படுத்தியது.

இப்போது கூட, ஸ்திரத்தன்மை திரும்பியிருந்தாலும், பலர் பதட்டமாகவே உள்ளனர். அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கை குறைவாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது. நெருக்கடி மீண்டும் வரக்கூடும் என்ற பயம் அதிகமாக உள்ளது, இது மக்களை செலவு அல்லது முதலீடு செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வைக்கிறது.

இந்த உளவியல் பலவீனம் பொருளாதார உந்துதலை தாமதப்படுத்துகிறது, ஏனெனில் குறிகாட்டிகள் மேம்பட்டிருந்தாலும் வணிகங்கள் பழமைவாதமாகவே இருக்கின்றன. எனவே நுகர்வோர் பணத்தைச் செலவழிக்கத் தயங்குகிறார்கள.

விமர்சகர்கள் பெரும்பாலும் பரபரப்பான ஆடையகங்கள், ஆடம்பர SUV, BYD வாகனங்களுடன் கூடிய போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் கடற்கரைகளில் வார இறுதியில் கூடும் மக்கள் கூட்டத்தை சுட்டிக்காட்டி, "மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியும்?" என்று கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், காணக்கூடிய நுகர்வு ஒட்டு மொத்த் பரந்த சமூகத்தின் பிரதிபலிப்பு அல்ல.

உயர் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் செல்வந்தர்களில் ஒரு சிறுபான்மையினர் உண்மையில் செலவு செய்கிறார்கள் - அவர்களில் சிலர் நெருக்கடியின் போது லாபம் ஈட்டினர், மற்றவர்கள் வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களால் பாதுகாக்கப்பட்டனர். இதற்கிடையில், பலர் நிதி நெருக்கடியில் இருந்தாலும், அவ்வப்போது ஓய்வுவை அனுபவிப்பதற்காக வாழ்க்கை முறை தியாகங்களைச் செய்கிறார்கள். இடைவிடாத அழுத்தத்திலிருந்து தற்காலிகமாக சுகம் அனுபவிப்பிப்பது, நிரந்தர ஆறுதலின் சான்று அல்ல.

சமத்துவமின்மை 

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் சமத்துவமின்மை மோசமாகிவிட்டது. செல்வந்த குடும்பங்கள் புயலைத் தாங்கிக்கொண்டன, சில சமயங்களில் நாணய மதிப்புக் குறைவு, பங்குச் சந்தை அல்லது நிலம் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலமும் கூட பயனடைந்தன. இதற்கிடையில், ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சொத்துக்கள் அரிக்கப்படுவதையும், சேமிப்பு மறைந்து போவதையும், வாய்ப்புகள் மறைந்து போவதையும் கண்டனர்.

இந்த வளர்ந்து வரும் பிளவு இரண்டு பிரிவான சமூகத்தை உருவாக்கியுள்ளது - ஒன்று மீட்சியில் செழிப்பாக வாழ்கிறது. மற்றொன்று நாளுக்கு நாள் செத்துச் செத்துப் பிழைக்கிறது. இந்த சமத்துவமின்மையின் அப்பட்டமான தன்மை வளர்ச்சியின் புலப்படும் அறிகுறிகளைக் கூட அந்நியமாகவும் அதன் நன்மைகளிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவும் உணர வைக்கிறது. 

அரசாங்கம் அதன் பொருளாதார சாதனைகளை பறைசாற்றியுள்ளது, ஆனால் மக்கள் இன்னும் அனுபவிக்கும் அன்றாட வலியை ஒப்புக் கொள்ளவோ அல்லது நிவர்த்தி செய்யவோ தவறிவிட்டது. நேரடி நிவாரணம் அல்லது பொது துன்பத்தைக் குறைப்பதற்கான தெளிவான செயல் திட்டம் எதுவும் இதுவரை இல்லை.

தரையில் உணரப்படாத ஒரு மீட்சி இழிவான தன்மையை வளர்க்கிறது. நேர்மையான உரையாடல் மற்றும் அரச சேவைகள், ஊதியங்கள் மற்றும் மலிவு விலையில் உறுதியான முன்னேற்றங்கள் இல்லாமல், வளர்ச்சி என்பது வேறு ஒருவருக்கு என்று பொதுமக்கள் தொடர்ந்து உணருவார்கள்.

இடைவெளியைக் குறைத்தல்

இலங்கையின் பொருளாதார மீட்சி, பெரிய அளவில் உண்மையானதாக இருந்தாலும், முழுமையடையாமல் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு இது பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம் அல்லது நிதி ஒருங்கிணைப்பு போன்ற குறிகாட்டிகளில் குறுகிய கவனம் செலுத்துவது முதலீட்டாளர்களையும் சர்வதேச கடன் வழங்குநர்களையும் மகிழ்விக்கக்கூடும், ஆனால் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை இல்லாமல், நாடு இன்னும் ஆழமான சமூக மற்றும் அரசியல் துண்டிப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

இந்த இடைவெளியைக் குறைக்க, அரசாங்கம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சமமான ஊதிய வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கிராமப்புற மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும். உணவு, எரிசக்தி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதிக பொருளாதார சுமை உள்ள வீடுகளுக்கு கடன் நிவாரண வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

பொருளாதாரமீட்சிஎன்பதுஎண்களைப்பற்றியதுமட்டுமல்ல - அதுவாழ்க்கையைப்பற்றியது. இலங்கைமக்கள்தங்கள்வீடுகள்,பணப்பைகள்மற்றும் சமூகங்களில் முன்னேற்றத்தை உணரும்வரை, மீட்சி என்று அழைக்கப்படுவது அவர்களுக்கு அளவீடுகளில் மூடப்பட்ட ஒருகட்டுக் கதையாகவே இருக்கும்.

இலங்கை - இந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பும் வடக்கின் வளர்ச்சியும் வாய்ப்புகளும்!

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி ஒரு திருப்புமுனையில் உள்ளது. ஏற்றுமதியை பல்வகைப்படுத்துவது முக்கியம், மேலும் இந்தியாவுடனான சமீபத்திய வர்த்தக விரிவாக்கம் ஒரு சிறந்த முதல் படியாகும். இந்தியா ஒரு உலகளாவிய வர்த்தக மையமாக வளர்ந்து வருவதால், இது உலக சந்தையில் நுழைய இலங்கைக்கு ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது. வர்த்தக தாராளமயமாக்கல் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ஏழை மக்களுக்கும் குறைந்த விலையில் பொருட்களை நுகர வழிவகுக்கிறது, அதாவது இறக்குமதி கட்டுப்பாடுகள் இல்லாமல் அத்தியாவசிய பொருட்களை எளிதாக வாங்க முடியும்.

இலங்கை, தற்போது வர்த்தக சமநிலை சிக்கல்களையும், உயர்ந்த கடன் மட்டங்களையும் எதிர்கொள்வதால், இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் விரிவான மற்றும் வளர்ந்து வரும் சந்தை இலங்கை நிறுவனங்களுக்கு தங்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், உற்பத்தி செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கவும், உலகளாவிய சந்தைகளில் திறம்பட போட்டியிடவும் உதவுகிறது. இந்தியாவின் ஜி20 பொருளாதாரங்களில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கவிருப்பதாலும், இந்தியாவின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியா இலங்கைக்கு உதவக்கூடிய நிலையில் உள்ளது1. இதற்குப் பிரதியுபகாரமாக, இலங்கை தனது மூலோபாய அமைவிடம், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மற்றும் சேவைத் துறைகளில் உள்ள வாய்ப்புகள் மூலம் இந்தியாவின் பிராந்திய மற்றும் உலகளாவிய லட்சியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காளியாக இணைய முடியும். தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களில் இந்திய முதலீடுகள் இலங்கைக்கு தேவையான அந்நிய செலாவணி வருவாயை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, திறன் பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கும். மேலும், இலங்கையுடன் மீள்புதுப்பிக்கத்தக்க மின் கட்டமைப்பு வாயிலாக இணைக்கும் திட்டங்கள், நாட்டின் பிற சக்தி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கு பெரிதும் துணைபுரியும். நீண்டகால நோக்கில், போதுமான முதலீடுகள் கிடைத்தால், இலங்கை தனது கணிசமான புதுப்பிக்கத்தக்க சக்தி திறனைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நிலையை அடைய முடியும்.

இந்தியா ஏற்கனவே இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகும். இந்தியாவின் 2030 ஆம் ஆண்டில் 700 மில்லியனை அடையவுள்ள நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுத் திறனை இலங்கை நிறுவனங்கள் பயன்படுத்தும் வாய்ப்பை இந்த ஒருங்கிணைப்பு உருவாக்கும். இந்தியா–இலங்கை இலவச வர்த்தக ஒப்பந்தம் (FTA) 2000 இல் அமலுக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுக்கான இலங்கை ஏற்றுமதிகளில் 60% க்கும் மேற்பட்டவை அதன் கீழ் நன்மை பெற்றுள்ளன. இலங்கை தனது GSP+ அந்தஸ்து கேள்விக்குறியாகும் இந்த சூழலில் இந்தியாவுடன் நேரடியாக போட்டியிடுவதை விட, இந்தியாவின் விநியோகச் சங்கிலியில் இணைந்து, இந்தியாவில் உற்பத்தி செய்ய முடியாதவற்றை செய்வதற்கு கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில், ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) ஆதரிப்பதன் மூலமும், கடன் வசதிகளை வழங்குவதன் மூலமும், வெளிநாட்டு சந்தையை கண்டறிவதன் மூலமும் ஏற்றுமதியை மேம்படுத்த முயன்று வருகிறது. ஏற்றுமதிப் பன்முகத்தன்மை மற்றும் வெளிப்புறத் துறை நிலைத்தன்மைக்கான தொடர்ச்சியான தேவையை இலங்கையின் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கையின் வடக்கு பகுதி, இந்தியாவின் தென்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார ஒருங்கிணைப்பு வட மாகாண வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாகும்4. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான போரின் வடுக்கள் மெல்ல மெல்ல ஆறிவரும் நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் புவியியல் ரீதியான அண்மித்தன்மை வடக்கு மாகாணத்திற்கு ஒரு தனித்துவமான நன்மையாகும். தமிழகத்தின் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள், தென்னிந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தைக்கும், வேகமாக வளரும் பொருளாதார மையங்களுக்கும் நேரடி அணுகலைக் கொண்டுள்ளன. இது பொருட்களின் போக்குவரத்து செலவைக் குறைப்பதுடன், விநியோகச் சங்கிலிகளை திறம்பட நிர்வகிக்கவும் உதவுகிறது. 2022 இல் 4.0% ஆக இருந்த இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு, 2023 இல் 4.5% ஆக உயர்ந்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணப்பட்ட சுமார் 15-20% அதிகரிப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. இருப்பினும், பிற மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பங்களிப்பிற்கான காரணங்கள் ஆழமானவை மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை, இது மூன்று தசாப்த கால உள்நாட்டு மோதலின் தாக்கம் ஆகும். சில தடைகள் பின்வருமாறு:

நில உரிமைப் பிரச்சினைகள்: போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததாலும், இராணுவக் கட்டுப்பாட்டாலும், நில ஆக்கிரமிப்பாலும் பலரின் நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன. சமீபத்திய ஐ.நா. அறிக்கைகள் (ஜூன் 2025), வடக்கு மற்றும் கிழக்கில் நிலப் பிரச்சினைகள், குறிப்பாக அரசு சார்ந்த நிறுவனங்கள் (இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம்) சம்பந்தப்பட்டவை, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன. இது விவசாயம் மற்றும் தொழில் முதலீடுகளுக்கு பெரும் தடையாக உள்ளது6.

திறமையான மனிதவள இழப்பு (Brain Drain): போரின் போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்பு ஏற்பட்ட புலம் பெயர்வு காரணமாக பல திறமையான தொழிலாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால், பிராந்தியத்தில் நவீன தொழில்களுக்குத் தேவையான மனிதவளம் குறைவாக உள்ளது. இது குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மற்றும் தனியார் துறை முதலீடுகளுக்கான கவர்ச்சித்தன்மையை குறைக்கின்றன.

தனியார் முதலீட்டின் பற்றாக்குறை: குறைந்த வருமானம், குறைந்த வளர்ச்சி, மற்றும் நீண்டகால மோதலின் அபாயங்கள் காரணமாக தனியார் நிறுவனங்கள் இந்த மாகாணங்களில் முதலீடு செய்ய தயங்குகின்றன6. இதனால், பொருளாதார சுழற்சி உருவாகாமல் தடைபடுகிறது. அரசு ஊக்கங்களும் வெளிப்படையான முதலீட்டு சூழலும் அத்தியாவசியமாகின்றன.

பௌதீக குறைபாடுகள் (உட்கட்டமைப்பு): போக்குவரத்து, மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் சவால்கள் உள்ளன. சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் முன்னேற்றங்கள் இருப்பினும், முக்கிய நகரங்களுக்கிடையேயான இணைப்புகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். மலிவான மின்சார விநியோகம் இன்னும் ஒரு சவாலாக உள்ளது, இது தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களின் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரிக்கிறது. குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கான போதுமான வசதிகள் பல இடங்களில் இல்லை, குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நாட்டிலேயே வடக்கு மாகாணத்தில் தான் மிகக் குறைவு என அண்மைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொழில் கட்டமைப்பின்மை (குறைந்த பன்முகத்தன்மை): பிராந்தியத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் வாழ்வாதார அடிப்படையிலான விவசாயம் மற்றும் மீன்பிடியைச் சார்ந்துள்ளது, இங்கு மதிப்புக் கூட்டல் குறைவாகவே உள்ளது. மேற்கு மாகாணத்துடன் ஒப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கில் உற்பத்தி மற்றும் தொழில் துறை பங்களிப்பு மிகக் குறைவு. காங்கேயன் துறை சிமெண்ட் தொழிற்சாலை போன்ற பழைய தொழிற்சாலைகளும் இன்னும் முழுமையாக இயங்கவில்லை.

மனித திறன் தேவைகள் (Skills Gap): நவீன தொழில்கள் மற்றும் சேவைத் துறைகளுக்கு அத்தியாவசியமான ஆங்கில மொழி மற்றும் கணினி பயன்பாட்டுத் திறன்கள் உள்ளூர் மக்களிடையே குறைவாக உள்ளன. பின்தங்கிய பாடசாலைகளில் போதுமான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே இருக்கின்றனர். ஊழல், நீண்ட கால திட்டமிடல் இல்லாமை மற்றும் வெளிப்படையான தன்மை இல்லாமை நீண்டகால, ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட சவால்கள் இருக்கும் அதே சமயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு பல குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் கொண்டுள்ளன7:

புவியியல் காலநிலை மற்றும் இந்தியாவுடனான அணுகல்: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுடனான அதன் ஒருங்கிணைப்பு (இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உடனான FTAகள்) இலங்கைக்கு, குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்திய விநியோக சங்கிலிகளில் இணைவதன் மூலம், இந்தியாவிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும், இந்தியா வழங்க முடியாத சேவைகளை வழங்கவும் இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளின் வளர்ச்சியுடன், இந்தியாவிற்கு மின்சார ஏற்றுமதி ஒரு பெரிய வாய்ப்பாக உருவாகியுள்ளது, இது பிராந்தியத்தை ஒரு மின் சக்தி மையமாக உருவாக்க வழிவகுக்கும். வரலாற்று ரீதியாக, வடக்கு கிழக்கு இந்தியாவின் தென்னிந்திய மாநிலங்களுடன் வலுவான வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தது, இந்த தொடர்புகளை மீண்டும் புதுப்பிப்பது இருதரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும்.

மனித வளம் (உழைப்பாளிகள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள்): வடக்கின் மக்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள், இது ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கு அவசியமான மூலதனமாகும். புலம் பெயர்ந்த தமிழர்கள் வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூணாவர், அவர்களின் நிதி முதலீடுகள், உள்ளூர் வணிக முயற்சிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விவசாயத் துறைக்குத் தேவையான மூலதனத்தைப் பெருக்கும். அத்துடன், அவர்களின் தொழில்நுட்ப அறிவு, மேலாண்மை திறன்கள் மற்றும் உலகளாவிய வணிக தொடர்புகள் புதிய தொழிற்சாலைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு உதவும். இது உள்ளூர் தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தைகளை அணுக வழிவகுக்கும்8. இந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, இலங்கை அரசு வெளிப்படையான முதலீட்டு சூழல், நிலப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு மற்றும் பாதுகாப்பான முதலீட்டு உறுதிப்பாடு போன்ற சரியான கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பது அவசியம்.

சுற்றுலா: வடக்கில் அபிவிருத்தி செய்யப்படாத பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன, காங்கேயன் துறை, பருத்தித்துறை துறைமுகம், முல்லைத்தீவு கடற்கரைகள், நீர் விளையாட்டு வாய்ப்புகள். மாலத்தீவு மற்றும் கரீபியன் போன்ற உயர்தர சுற்றுலா மாதிரிகளைப் பின்பற்றி, நட்சத்திரத் தரம் வாய்ந்த ஹோட்டல்கள் மற்றும் நீர் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும். இது உள்ளூர் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் மென்பொருள் சேவைகள்: பல IT பயிற்சி நிறுவனங்களை நிறுவுவதன் மூலமும், இலவச பயிற்சி வழங்குவதன் மூலமும், பிராந்தியம் ஒரு மென்பொருள் மேம்பாடு மற்றும் IT சேவை மையமாக மாற முடியும். தென்னிந்திய மாநிலங்களில் உள்ள IT மையங்களுடன் ஒருங்கிணைக்க இது உதவும்.

இரண்டாம் துறைகள் (Manufacturing/Industry): காங்கேயன் துறை சிமென்ட் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற பழைய தொழிற்சாலைகளை புதுப்பிப்பதன் மூலம் பிராந்தியத்தின் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும். இலங்கை முதலீட்டுச் சபை (Board of Investment of Sri Lanka) வடக்கு மாகாணத்தில் புதிய தொழில் வலயங்களை (பரந்தன், காங்கேயன் துறை) உருவாக்குவதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முயற்சிக்கிறது, இது ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற உலகளாவிய அமைப்புகள், இலங்கையின் வடக்கு மாகாணம் போன்ற போரால் பாதிக்கப்பட்ட மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பசுமையான மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. 'GROW திட்டம்' இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

முடிவுரை

இலங்கையின் வடக்கு மாகாணம்  தேசிய பொருளாதாரத்தில் முழுமையாக இணைந்து, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைவதற்கான மகத்தான திறனையும், ஏராளமான வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. 2022 இல் 4.0% ஆக இருந்த வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பங்களிப்பு, 2023 இல் 4.5% ஆக உயர்ந்திருப்பது, ஒரு நேர்மறையான வளர்ச்சிப் போக்கைக் காட்டுகிறது. அதிக மூலதன முதலீடு, தீவிரமான நிர்வாகச் சீர்திருத்தங்கள், ஊழலற்ற, வெளிப்படையான செயல்முறைகள், மற்றும் மக்களிடையே நீடித்த அரசியல் நம்பிக்கை ஆகியவை இதற்கான தூண்களாகும். நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, மற்றும் நிதிச் சேவைகளை எளிதாக்குவது போன்ற அடிப்படைகளை சரி செய்வதன் மூலம் வடமாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக  இந்த ஆண்டின் முதல்   காலாண்டில் இலங்கைக்கு கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 203 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 90% வளர்ச்சி ஆகும். இது போன்ற முதலுடுகளை அதிகரித்து அதனை உரியவைகையில் முகாமை செய்வதன் மூலம் மேலும் முதுலுடுகளை ஈர்க்கமுடியும் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு, இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய காரணியாக அமையும். இந்தியா மற்றும் இலங்கையின் பொருளாதார ஒருங்கிணைப்பானது, வெறும் இரு நாடுகளுக்கான ஒரு வாய்ப்பாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியம் முழுவதற்குமான நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான அடித்தளமாகவும் அமையக்கூடும். சவால்களை எதிர்கொண்டு, ஒருங்கிணைந்த நலன்களைப் பயன்படுத்துவதன் மூலம், இரு நாடுகளும் ஒரு நீடித்த கூட்டுறவைக் கட்டியெழுப்ப முடியும். இது பொருளாதார ஸ்திரத்தன்மையையும், நெருக்கமான பிணைப்புகளையும் உறுதி செய்து, தெற்காசியப் பிராந்திய ஒருங்கிணைப்புக்கான ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும்.இந்த ஒருங்கிணைப்போனது வெறுமனே இந்தியாவுடன் மட்டுமல்லாது ஏனைய  மேற்கொள்ளப்படுவதனுடாக ஏனைய நாடுகளின் சந்தையை அணுகுவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்க பெரும். வர்த்தக விரிவுபடுத்தல் ஒரு  வளர்ச்சிக்கு இன்றியமையாதது ஆகும். 

அபிஷாயினி கிருஷாந்த்

GSP+ வரிச்சலுகை மீண்டும் இழக்கப்படுமா?

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் விதிக்கப்பட்ட புதிய சுங்க வரிகள் உலக பொருளாதாரத்தில் குழப்பத்தை உண்டாகியுள்ளது. அத்துடன் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடுகளுக்கு மத்தியில் ஒரு வர்த்தக போரை உருவாகியுள்ளது. இந்த நாடுகள் ஏட்டிக்கு போட்டியாக தத்தமது வரிகளையும் அமெரிக்கவுக்கு எதிராக அதிகரித்தாலும் இந்த விடயத்தில் இலங்கை போன்ற நாடுகள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளன. அதேநேரத்தில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியம் (EU) குறைந்த வருமானம் பெறும் இலங்கை போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை (GSP+) தொடர்பாக மீளாய்வு செய்துள்ளது. ஏனென்றால் இலங்கை போன்ற நடுத்தர வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நாடுகள் இந்த வரிச் சலுகையின் மூலம் கணிசமான அளவு அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்கின்றன.  இந்நிலையில், இந்த வரிச் சலுகையும் இடைநிறுத்தப்பட்டால் ஏற்கனவே பாரிய கடன் சுமையிலிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்ற கேள்வி நியாயமானது.

GSP+ என்றால் என்ன?

Generalised Scheme / System  of Preferences Plus (GSP+) என்பது, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மூலமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு வழங்கப்படும்  ஒரு சிறப்புச் சலுகைவரிச்சலுகைத் திட்டமாகும். GSP சட்ட அடித்தளம் 1971ஆம் ஆண்டில் பொருள் வர்த்தக மற்றும் சுங்க இறக்குமதி  ஒப்பந்தமான GATT (General Agreement on Tariffs and Trade) ஆவணத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது கைத்தொழில்துறைரீதியான நாடுகளுக்கும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையில் பரஸ்பரமான வர்த்தக சலுகைகள் வழங்க அனுமதித்தது. இந்த ஏற்பாடு 1979ஆம் ஆண்டில் "Enabling Clause" (சாத்தியமான விதி) என்பதனை ஏற்கின்ற முறையில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது, இதன் மூலம் இவ்வாறு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பன்னாட்டுக் வர்த்தக உடன்படிக்கைகளின் நிலையான அம்சமாக அனுமதிக்கப்பட்டது. GSP மூன்று முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. முதலாவது Standard  (GSP) இது வளர்ந்து வரும்  நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்த  சுங்க வரி வழங்கக்கூடிய சலுகையாகும். (GSP+)  மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான சர்வதேச தரத்தை திறம்படச் செயல்படுத்தும் நாடுகளுக்குக் கூடுதல் சுங்க வரிக் குறைப்புகளை வழங்கும்  சிறப்பு சலுகையாகும். ஆயுதங்களைத் தவிர மற்ற அனைத்தும் (Everything But Arms - EBA): குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து (ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தவிர) அனைத்துத் தயாரிப்புகளுக்கும்  முழுமையாக வரி இல்லாத மற்றும் ஒதுக்கீடு இல்லாத சந்தை அணுகலை வழங்குகிறது.  இவ்வகையான GSP சலுகைகள்  உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளுடனும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடனும்  சிறந்த முறையில் ஒன்றிணைவதற்கு பல திருத்தங்கங்களுக்கு உட்பட்டுள்ளது. குறிப்பாக, ஒழுங்குமுறை (EU) எண் 978/2012 குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது, இதில் மிகவும் தேவையுள்ள நாடுகள்  மீதே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 

கொள்கைகள் மீறல்கள் ஏற்படுகின்ற பட்சத்தில்  முன்னுரிமைகளை கண்காணித்து, தற்காலிகமாக இந்த சலுகைகளை  நீக்கும் வழிமுறைகள் உள்ளடைக்கியதாக  காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக GSP+ என்பது, வளர்ந்து வரும் நாடுகளில் நிலைத்துநிற்கும்  அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி (Good Governance) ஆகியவற்றை ஊக்குவிக்க வழங்கப்படும் ஊக்கத்திட்டமாகும். இதற்காக, 27 சர்வதேச உடன்படிக்கைகள் மீது கையெழுத்திட்டு அதைப் பின்பற்ற வேண்டும். அவை மனித உரிமைகள், தொழிலாளி உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சி என்ற  நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன இந்த உடன்படிக்கைகளுக்கு ஏற்ப செயல்படும் நாடுகளுக்கு மட்டுமே இந்த சலுகைகள். இலங்கை, போலிவியா, கேப் வெர்டே, கிர்கிஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான்  போன்ற நாடுகள் இந்த சலுகைகளை பெற்றுவருகின்றன. தற்போது வழங்கப்படும் GSP+ திட்டம் 2027 வரை மட்டுமே செல்லுபடியாகும். 2027ஆம் ஆண்டுக்கு பிறகு, GSP+ தொடர வேண்டுமானால், இலங்கை போன்ற நாடுகள்  மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக, முன்பே அளித்திருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்க வேண்டும். இல்லையெனில், ஐரோப்பிய ஒன்றியம் அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். ஏனெனில், ஏற்கனவே குறிப்பிட்டபடி, மீளாய்வின் போது  ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் மீறப்பட்டிருந்தால், இந்த சலுகை நிறுத்தப்படும்.


இலங்கைக்கும் GSP+ எப்படி வந்தது?

2004 சுனாமிக்குப் பிந்தைய காலகட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக இலங்கை முதன்முதலில் 2005 இல் GSP+ அந்தஸ்தைப் பெற்றது. ஏனெனில் இது நாட்டின் மீட்கும் முயற்சிகளுக்கு ஊக்குவிக்குமுகமாக  வழங்கப்பட்டது. ஆனால் உள்நாட்டுப் போரின் இறுதி கட்டங்களிலும் அதைத் தொடர்ந்த காலப்பகுதியிலும் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்  காரணமாகக் 2010இல் இது இழக்கப்பட்டது. பின்னர், 2015இல் அமைந்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முயற்சி எடுத்து அதாவது , கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களை நிலைநிறுத்துவதற்கான புதிய உறுதிப்பாட்டிற்குப் பிறகு, இலங்கை 2017 இல் மீண்டும் GSP+ 2017இல் மீண்டும் இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டது.  GSP+ சலுகை இலங்கை பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  இலங்கையின் ஏற்றுமதி  இலக்கு சந்தையில்  அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதி  இலக்கு சந்தையாக  பரந்த ஐரோப்பிய ஒன்றிய சந்தை காணப்படுகிறது.  அந்த வகையில்  GSP+ என்பது இலங்கை ஏற்றுமதிக்கு பாரிய ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பம் இலங்கை  தயாரிப்புககளை மேலும் போட்டிதனிமையாக்கின்றது. 2023 ஆண்டில்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி தோராயமாக €2.6 பில்லியன் ஆக இருந்தது, இதில் கணிசமான பகுதி GSP+ சலுகைகளால் ஏட்பட்ட பயனாகும். 

இலங்கையில் சில முக்கிய துறைகள் இந்த GSP+ சலுகையில் இலாபம் ஈட்டுகின்றன. குறிப்பாக ஆடைத்தொழித்துறை, மீன்வளத் துறை, விவசாயப் பொருட்கள் முக்கியனமானவையாகும். இவற்றிலும் குறிப்பாக இலங்கை ஏற்றுமதி பொருளாதாரத்தின் ஒரு மூலக்கல்லாகும் ஆடைத் துறை  காணப்படுகின்றது. ஆடைத்தொழில்  தொழில் (Garment Industry) அதிகமான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டும் மற்றும் அதிகமான வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இருப்பதால், இந்த சலுகை அவசியமாகின்றது. பல  வகையான ஆடைகளுக்கு கணிசமான அளவு  சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுவதால், இலங்கையின் ஆடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகின்றன.  இலங்கையின் மொத்த ஏற்றுமதியில்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை ஏற்றுமதி  பெரும் பங்கைக் கொண்டுள்ளது (2020 இல் சுமார் 50%) மற்றும் நாட்டின்  தொழில்துறை பணியாளர்களில் கணிசமான பகுதியினருக்கு வேலை வழங்குகிறது, இதில் அதிக சதவீத பெண்கள் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர திறமையுள்ள தொழிலாளர்கள் உள்ளனர் (Fibre2Fashion, 2024; IPS, 2025). GSP+ இன் நன்மைகள் இத்துறையில் முதலீட்டை ஊக்குவிக்கிறது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க பங்களிக்கிறது. அதே போல  இலங்கையின் மீன்வளத் துறையின் புத்துயிர்ப்பு  மற்றும் வளர்ச்சிக்கு GSP+ திட்டம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. கடல் உணவுகளுக்கான வரிகள் சுமார் 18.5% இலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுவதால், இலங்கையின் மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் ஐரோப்பிய சந்தையில் திறம்பட போட்டியிட முடிகிறது . இது ஏற்றுமதி அளவை அதிகரிகின்றது  மற்றும் வணிக தொடர்புகளை மீட்டெடுக்க உதவுகிறது  விவசாயப் பொருட்கள் நோக்குகின்ற போது மிக குறைந்தளவில்  ஏற்றுமதி காணப்பட்டாலும் கூட GSP+ ரப்பர் பொருட்கள், தேயிலை, மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய் பொருட்கள் உட்பட பல்வேறு விவசாயப் பொருட்களுக்கும் முன்னுரிமை அணுகலை வழங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் "சிலோன் இலவங்கப்பட்டை"க்கு புவியியல் குறியீடு (GI) அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தயாரிப்புத் திறனை உறுதி செய்வதன் மூலமும் விவசாயப் பொருட்களுக்கான தேவையை அதிகரிப்பதன் மூலமும் இத்துறையில் இலங்கையின் ஏற்றுமதி திறனை மேலும் பலப்படுத்துகிறது. 

உடனடி வர்த்தக நன்மைகளுக்கு அப்பால், GSP+ நிலையான  உள பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்கு உட்பட்ட நிபந்தனை, பொறுப்பான நடைமுறைகளை பின்பற்ற நாட்டை ஊக்குவிக்கிறது. இதில் சிறந்த பணி நிலைமைகளை ஊக்குவித்தல், வழக்கமான ஊதிய உயர்வுகளை உறுதி செய்தல் மற்றும் குறிப்பாக ஆடைத் துறைகளில் தொழிலாளர்களுக்கு ஆதரவு சேவைகளை வழங்குதல் ஆகியவை அடங்குகின்றன. இத்திட்டம் பொருளாதார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், சர்வதேச தரநிலைகளை மதிக்கும் ஒரு நாடு என்ற சமிக்ஞை மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கவும் பாரியளவு பங்களிக்கின்றது. 

இலங்கையைப் போன்ற பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ (Generalised Scheme of Preferences Plus) சலுகை ஒரு அத்தியாவசியமான பாதுகாப்பு வலையாகச் செயல்படுகிறது. உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இது இலங்கையின் ஏற்றுமதித் துறையை உறுதிப்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கிறது. எனினும், இந்தச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதில் இலங்கை பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது, குறிப்பாக மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களைக் கடைபிடிப்பதில். இலங்கை (Institute of Policy Studies - IPS) சமீபத்திய அறிக்கை, GSP+ சலுகையின் முக்கியத்துவத்தையும், அதை இழந்தால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஐரோப்பிய சந்தையில் இருந்து ஏற்றுமதித் தேவை குறைந்தால், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறையலாம். இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், வெளிநாட்டு நாணய வருவாய்க்கும் பெரும்  பதிப்பாக அமையும்.  இந்த இழப்பால் 73,574 வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் யாதெனில்  பாதிக்கப்படுவோரில் 65.65% பெண்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் குறைந்த அல்லது நடுத்தர திறமைகளுடன் கூடிய தொழிலாளர்கள். இலங்கையின் ஏற்றுமதியில் ஆடைத் துறை ஒரு முக்கியப் பங்களிப்பாளர். GSP+ இல்லையென்றால், ஐரோப்பாவுக்குச் செய்யப்படும் ஆடைத் தொழில் ஏற்றுமதிக்கு 10% வரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதி குறைவு, வேலை இழப்பு, வெளிநாட்டு நாணய இழப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும், இது சமூகப் பிரச்சினைகளையும் அதிகரிக்கச் செய்யும்.   

ஏன் GSP+ இழக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது ?

GSP+ சலுகைகள் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்களை முறையாகக் கடைப்பிடிப்பதன் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகளில் மனித உரிமைகள் முதன்மையானவை.

  • பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA): இலங்கையில் நடைமுறையில் உள்ள (PTA) குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இந்தச் சட்டம் தற்போதுள்ள நிலையில் தொடர முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய இலங்கை அரசாங்கம் PTA-ஐ நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ உறுதியளித்துள்ளது. 2027க்குள் GSP+ சலுகையைத் தொடர விரும்பினால், PTA தொடர்பான மாற்றங்கள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் PTA மூலம் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுவதை கடுமையாகக் கண்டிக்கிறார்கள், ஏனெனில் இது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 2017 இல் GSP+ மீண்டும் பெறப்பட்டபோது, PTA-ஐ மாற்றி புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று இலங்கை உறுதியளித்தது. 10 வருடங்கள் கடந்தும் இந்த உறுதிமொழிகள் முழுமையாகச் செயல்படுத்தப்படாத நிலையில், 2027 இல் இந்தச் சலுகை தொடரும் நம்பிக்கை குறைந்து வருகிறது.

  • இணையப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act): இலங்கையின் புதிய  Online Safety Act குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் தனது கவலைகளைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சட்டம், "தடைசெய்யப்பட்ட கருத்துக்கள்" எனக் கருதப்படும் இணைய உள்ளடக்கங்களை அரசாங்கம் அகற்றும் அதிகாரத்தை அளிக்கிறது. விமர்சகர்கள் இந்தச் சட்டம் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம், தனியுரிமை மற்றும்  புத்தாக்கங்களை  பாதிக்கக்கூடியது என்று வாதிடுகின்றனர். அமெரிக்கத் தூதுவர் ஜூலி சேங் கூட இந்தச் சட்டத்தின் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். GSP+ போன்ற வரிச்சலுகைகள் மனித உரிமை மீறல்கள் நடந்தால் இழக்கப்படும். 

தற்போது, GSP+ சலுகையைத் தொடர்வதற்கு இலங்கையின் நிலைமையை சரிபார்க்க ஒரு ஐரோப்பிய ஆய்வுக் குழு நாடு வந்துள்ளது. ஹர்ஷ டி சில்வா போன்ற நிபுணர்கள், GSP+ இழக்கும் அபாயம் குறைவாகவே உள்ளது என்றாலும், இலங்கை ஒரு புதிய திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு புதிய திட்டம் ஆரம்பிக்கும் வரை ஏற்படும் இடைவேளை ஒரு முக்கிய சவாலாக அமையும். PTA நீக்கப்படாமல் இருந்தால், 2027 இல் புதிய சலுகையைப் பெற முடியாமலும் போகலாம்.

GSP+ ஒரு நிரந்தரமான சலுகை அல்ல என்பது உண்மைதான். ஆனால், கொரோனா பெருந்தொற்று மற்றும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், இந்தச் சலுகை மிக அவசியமானது. தற்போதுள்ள நிலையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பும் முயற்சிக்கு GSP+ ஒரு பெரிய துணையாக இருக்கிறது.

அமெரிக்கா ஏற்கனவே ஒரு "சிவப்பு விளக்கை" காட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தால், இலங்கையின் வெளிநாட்டு நாணயம், வேலைவாய்ப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்படலாம். இலங்கை இன்னும் மாற்றங்களைச் செய்ய நேரம் உள்ளது. ஆனால், நாம் உறுதியளித்த விஷயங்களில் முன்னேற்றம் காட்டவில்லை என்றால், ஐரோப்பிய ஒன்றியம் தனது எச்சரிக்கையை நிறைவேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. இலங்கை அதற்கு தகுந்த பொருளாதார அரசியல் கொள்கைகளை உருவாக்க வேண்டும். இல்லையெனில் இலங்கையின் எதிர் காலம்  கேள்விக்குறியே!

ஆக்கம்: அபிஷாயினி கிரிஷாந்த்

பொருளாதார சுதந்திரமும் நிஜமான சுதந்திரமும்: இலங்கையின் நிலை

சுதந்திரம் என்பது வெறுமனே அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. ஒரு தனிமனித னாயினும் ஒரு நாடாயினும் பொருளாதார சுந்தந்திரமே, ஏனைய சுதந்திரத்தை அனுப்பவிக்கவும், அணுகுவதற்கும் வழி வகுக்கும்.

 உள்ளூரிலும்  தேசிய ரீதியிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் குறைந்த செலவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அரசாங்கங்களின் குறைந்த தலையீட்டுடன்  சுதந்திரமாக வர்த்தகத்தை மேற்கொள்வதே பொருளாதார சுதந்திரத்தின் வரைவிலக்கணமாக கொள்ளலாம். இலங்கை வாழ் மக்களாகிய நாம் சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எமது நாட்டின் பொருளாதார சுதந்திரத்தின் இப்போதைய நிலை என்ன?

 கடந்த 77 ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாம் இலங்கையை வளமான மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக பல்வேறு உத்திகளை   கையாண்டு வந்துள்ளோம். இருப்பினும்,   நிஜமான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் நாம் பயணித்துள்ளோமா என்பது கேள்விக்குறியே. நாம்  அரசியல் சுதந்திரம் பெற்றபோது, மானிட அபிவிருத்தியில்( உதாரணமாக எழுத்தறிவு வீதம், ஆயுள் எதிர்ப்பார்க்கை வீதம் )  ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே சிறந்த நிலையில் இருந்தோம் என்பதே நிதர்சனம். ஏன் சிங்கப்பூர்(அன்றைய மலாயா ) கூட எங்களுக்குப் பின்னால் இருந்தது. இலங்கையை அவர்களின் வளர்ச்சிக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையின் சுதந்திரத்தின் பெரும்பகுதி பெயரளவான சுதந்திரமாகவே இருந்து வந்துள்ளது, பொருளாதார சுதந்திரத்தின்  மூலம் கிடைக்கப் பெற்று இருக்க கூடிய ஆதாயங்களை நிலைபேறான வளர்ச்சிக்கு உட்படுத்த தவறி  விட்டோம்.  சிங்கப்பூர், ஜப்பான் போன்ற  ஏனைய நாடுகளும் இலங்கையை வெறுமனே உதாரணமாகக் கொள்ளாமல் பொருளாதார சுதந்திரத்தின் கூறுகளை பல்வேறு நிலைகளில் நிலைநிறுத்தி இன்று உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன.

 வளங்களை உகந்த முறையில் மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப   உத்தமமனா முறையில் பயன்படுத்துதல்  என்பது ஒரு  திறனாகும் வரையறுக்கபட்டதும் அருமையானதுமான  இயற்கை கனிய , மானிட  வளங்களை திறம்பட பயன்படுத்துவதும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதுமே செல்வச் செழிப்புக்கு வழிவகுக்கும் .தனிநபர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க உரிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அரசாங்கம் சந்தைகளில் தலையிடாமல், தனிநபர்கள் தொழில் செய்து செல்வம் உருவாக்க ஊக்குவிக்க வேண்டும். மேலும், போட்டித்தன்மை வாய்ந்த சந்தை நிலைமைகளை உருவாக்க வேண்டும். அரசாங்கம் குறைந்தபட்ச ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கொண்டு, போட்டியை உறுதி செய்வதும் . பணத்தின் பெறுமதியை  பேணுவதி  ஒரு அரசாங்கத்தின் முதன்மை  கடமையாகும் .

 இந்த ஐந்து கோட்பாடுகளையும் பின்பற்றுவதன் மூலம் செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை பொருளாதார சுதந்திரத்தின் உலக குறிகாட்டி  உணர்த்துகின்றது. அதிக பொருளாதார சுதந்திரம் கொண்ட நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகமாகவும், வறுமை குறைவாகவும் உள்ளது. கடந்த 77 ஆண்டுகளில், பொருளாதார சுதந்திரத்தின் தற்பரியத்தை  நாம் சரியாக அனுபவிக்க தவறிவிட்டோம். அரசுவுடமையுள்ள வணிக  நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் நில உரிமையை உறுதிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்தி உயர்  பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .

 சிங்கப்பூர் அன்று எம்மை உதாரணமாகக் கொண்டார்கள், நாம் அவர்களை உதாரணமாக கொள்ள வேண்டிய காலம் இது. இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத போதும் பொருளாதார சுதந்திரத்தை திறம்பட கடைப்பிடித்ததன்   மூலம் உலகிலேயே முன்னுதாரணமான ஒரு  நாடாக திகழ்கிறது. பொருளாதார சுதந்திரம் ஒன்றே உண்மையான சுதந்திரத்தை ஏற்படுத்த வல்லது.

 பொருளாதார சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரத்தைப் போன்று ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இலங்கையில் பொருளாதார சுதந்திரம் என்பது குறைந்த அளவிலேயே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது பொருளாதார சுதந்திரம் மிகக் குறைவாக முன்னுரிமை படுத்தபட்டுள்ளது.   இவற்றினை கவனத்தில் கொள்ளுகின்ற போது  உற்பத்தி திறன்  மேம்படுவதற்கான  வாய்ப்பு அதிகரிக்க படுவதோடு  உலக சந்தையில் போட்டியிடுவதற்கான உயர் உற்பத்தி திறன் வாய்ந்த நவீன அறிவுடைய  பொருளாதாரமாக  இலங்கை உருமாற்றம்  செய்ய முடியும்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

ஆக்கம் : அபிஷாயினி கிருஷாந்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்

வினைதிறனற்ற நிர்வாகம், மோசமான மேற்பார்வை, மோசடியான கொள்முதல் செயல்முறைகள், அரசியல் தலையீடு, வெளிப்படைத் தன்மையின்மை மற்றும் ஊழல் மிக்க  இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களினால் இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தியத்தின் ஆளுமையை கண்டறியும் மதிப்பீடு (GDA) அறிக்கை தெரிவிக்கின்றது.

அரசு செல்வாக்கு செலுத்தும் தொலைத்தொடர்பு, வங்கி, துறைமுகங்கள், பெட்ரோலியம் மற்றும் வலுச்சக்தி உள்ளிட்ட நானுறுக்கும் மேற்பட்ட முப்பத்திமூன்று துறைகளில், 250,000 மேலான தொழிலாளர்களை பணிக்கு வைத்துள்ளதால் அவை ஒரு திறமையற்ற வீக்கமடைந்த பணித்துறையை உருவாகியுள்ளது. 

இலங்கையின் மொத்த கடன் சுமையில் 10 வீதம் இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தக்கடன் அரசின் நிதி இருப்பை மேலும் மோசமாகியுள்ளதாகவும் அவ்வறிக்கை அடிக்கோடிட்டுக்  காட்டுகின்றது. 

அரச நிறுவனங்களின் வெளிப்படையற்றத் தன்மை பலவீனமான மேற்பார்வை பொது வளங்களை வீண் விரயம் செய்தல் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை முடக்கியுள்ளதாக அடையாளப்படுத்துகின்றது.

அத்துடன், தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் வலுச்சக்தி போன்ற முக்கிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தி சந்தைப்போட்டித் தன்மை, புத்தாக்கங்கள் சந்தை சமநிலையை சிதைகின்ற அதேவேளை தனியார் முதலீடுகளின் ஊக்கத்தையும் பாதிக்கின்றது. 

இந்த பிரச்சனைகளின் காரணமாக இலங்கை பாராளுமன்ற மேற்பார்வையில், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீரமைக்கும் கொள்கைகளுக்கு அமைவாக   வணிகமயமாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முயறசிகள் நீண்ட இழுபறிக்கு மத்தியில் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அரச நிறுவனங்கள் அதே செயற்பாட்டில் இயங்கியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. 

2020ஆம் ஆண்டில் பல உயிர்களை பலி கொண்ட மற்றும் வீடுகளை எரித்த தொடர் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தேசத்தை உலுக்கியது. அதன் குற்றவாளி யார்? தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்த அரசுக்கு சொந்தமான லிட்ரோ காஸ் நிறுவனமாகும். 

அரசுக்கு சொந்தமான அரச மருந்து கூட்டுத்தாபனம் (SPC) தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்து ஊழலில் சிக்கியது. 2019ஆம் ஆண்டில் முக்கியமான இரத்த உற்பத்தி பொருளான மனித இம்யூனோகுளோபுலின் தரம் குறைந்த கொள்கலன் ஓன்று சட்டத்தினுடாக நழுவிச் சென்று நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. கடுமையான தரக்கட்டுப்பாடு இல்லாமை மற்றும் சில மருந்து இறக்குமதிகளில் SPC யின் ஏகபோக  உரிமை பொது மக்களின் ஆபத்தான நிலைக்கு தள்ளியது. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில், இலங்கையை அதன் பொருளாதார புதைகுழியில் இருந்து மீட்பதற்காக தனியார் மயப்படுத்துதல் அவசியமாகின்றது.  தனியார்மயப்படுத்தல் அரசின் நிதி அழுத்தங்களை குறைக்கும். நலிந்த நிறுவனங்களில் செயல்திறனை மேம்படுத்தும். தனியார் முதலீடுகளை ஈர்க்கும். முக்கியமாக அரசியல்வாதிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஆதிக்கத்தை தூண்டிக்கும். 

இது,  இலாபத்தை முன்னுரிமையாக கொண்டிருப்பதால் சந்தை ஒழுக்கத்தை உட் புகுத்துகின்றது. அது மேம்பட்ட செயல்திறன் மற்றும் குறைவான செலவுகளுக்கு வழிவகுக்கின்றது.  நவீன மயமாக்கல் மற்றும் விரிவாக்கத்துக்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதால் அரசுக்கும் வருவாய் அதிகரிக்கின்றது. மேலும், அரசு சொத்துக்களை விற்பது பொருளாதாரத்தின் மீதான அரசியல்வாதிகள் மற்றும் கந்து வட்டிகளின் பிடியை பலவீனப்படுத்தி ஊழலுக்கான வாய்ப்புகளை குறைகின்றது. 

செயல்திறனற்ற அரச நிறுவனங்கள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் வளங்களை வீண் விரயம் செய்யாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தாம் சுமையாக இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அளவுக்கதிகமான அரச பணியாளர்களின் வேலை இழப்புகள் அரச நிறுவனங்களின் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். அதிகளவிலான பணி நீக்கங்கள் செய்யும் பொது அரசு தலைமையேற்க வேண்டும். தன்னார்வ துண்டிப்புகளுக்குரிய இழப்பீடுகளை வழங்குவது அதிக செலவுடையதாக இருந்தாலும் அதிக பொருளாதார வருவாயை பெற்றுக்கொடுக்கின்றது. பணி நீக்கம் செய்யப்பட்ட  தொழிலாளர்கள் வேலை சந்தையில் மீண்டும் இணைய உதவும் வகையில் மறுபயிற்சி திட்டங்களுடன் இணையக்கப்படவேண்டும். வேலை இழப்புகள் நியாயமான கவலையாக இருந்தாலும் சிறிய வேலை ஒன்றிக்காக அளவுக்கதிகமான சேவையாளர்களை பணிக்கமர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. செயல்திறனுள்ள பொருளாதாரத்தின் நீண்ட கால பலன்கள் குறுகிய கால கவலைகளை விட மிக அதிகம்.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயப்படுத்துதலின் போது நுணுக்கமான புரிதல் அவசியமாகின்றது. தனியார் முதலீட்டாளர்கள் மதிப்பு குறைந்த அரசுக்கு சொந்தமான மதிப்பு குறைந்த நிறுவனங்களை வாங்கி மதிப்பு மிக்க சொத்துக்களை துண்டுதுண்டாக விற்று ஏனையவற்றை கைவிட்டு விடுவார்கள். இதனால் வேலை இழப்புகள் ஏற்படும் என விமர்சகர்கள் அஞ்சுகின்றார்கள். இருப்பினும், இந்த கண்ணோட்டம் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டால் பொருளாதார செயல்திறனை மேம்படுத்தக்கூடிய சேவையை வழங்க முடியும், 

ஒரு நிறுவனத்தின் பாகங்கள் முழுதாக மதிப்பு தருவதை விட, தனித்தனியாக மதிப்புமிக்கதாக இருக்கும்போது, பெரும்பாலும் தவறான முகாமைத்துத்வம் அல்லது வளங்களை குறைவாகப் பயன்படுத்துத்வதால், சொத்துத் பறிப்பு பொதுவாக நிகழ்கிறது. இந்த பிரச்சனைகள் இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பரவலாக உள்ளன. நேர்மையற்ற முதலீட்டாட்டாளர்கள்' குறிப்பாக பலவீனமான ஒழுங்குமுறை சூழல்களில், சொத்துக்களை விற்பனை செய்து கொள்வதற்கு  குறை மதிப்பீடு செய்வதன் மூலமும் அரசியல் தொடர்புகளினுடாகவும்   நிறைவேற்றிக் கொள்கின்றனர். 

அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவின் ஒரு பகுதியாக சொத்துக்களின் தேய்மான மதிப்பீட்டு செயல்முறைகள் மற்றும் வெளிப்படையான போட்டி ஏலங்கள் இந்த சிக்கலை தீர்க்கின்றன. செயல்திறன் விதிகள் மற்றும்  சொத்து விற்பனை மீதான தற்காலிக கட்டுப்பாடுகளை உள்ளடக்கி ஒப்பந்தங்களை கட்டமைப்பது முற்றிலும் அரச சொத்து விற்பனை தொடர்பான ஊகங்களை அகற்றுவதற்கு  அனுகூலமாக இருக்கும். 

உலக வங்கிக் குழுமத்தின் ஒரு அங்கமமான சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் வளர்ந்து வரும் நாடுகளில் துறை அபிவிருத்தியை ஊக்குவிக்க முதலீடு, ஆலோசனை மற்றும் சொத்து மேலாண்மை போன்ற சேவைகளை வழங்கிவரும் ஒரு பன்னாட்டு நிதிநிறுவனமாகும், அந்தவகையில், அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பரிவர்தனைகளில் அந்நிறுவனம் உதவுகின்றது. 

எந்தவொரு சொத்து விற்பனையும் அரசியல் ரீதியாக தொடர்புடையவர்களின் பைகளை நிரப்புவதற்கு பதிலாக பொருளாதார செயல்திறன் மற்றும் பொது நலனுக்கு உண்மையான பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்கின்றது.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை இலங்கையால் தாங்கிக்கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்கள் செயல்படும் சந்தையில் போட்டியை அதிகரிக்கும்  ஒழுங்குமுறை சீர்த்திருத்தங்களுடன் தனியார்மயமாக்கல் இருக்கவேண்டும். ஏகபோகங்கள் நிலவும் துறைகளில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும் நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்கும் வலுவான மற்றும் கட்டுப்பாடுகளுடைய பொறிமுறை அவசியமாகின்றது. 

செயற்திறனின்மை மற்றும் ஊழலிலிருந்து விடுபடவும் நிலையான பொருளாதார வளர்ச்சியை தொடங்கவும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் அவசியம். 

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்கள் ஊழல் நிறைந்த அரசியல் உயிர்நாடிகளாக  உள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் கூட்டாளிகளுக்கு புதையல்களாக செயல்படுகின்றன. இந்த அரச நிறுவனங்கள் அரசியல் கட்சியின் ஆதரவாளர்களுக்கு வேலைகள், நிதியாளர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி ஊழல் மிக்க இடமாக இருக்கின்றது. 

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனமானது அதியுயர் டெண்டர்களின் மூலம் அரசியல்வாதிகளின் பணப்பைகளை நிரப்பி நிரப்பும் அதேவேளை நாட்டை வங்குரோத்து அடைய செய்தது. 

நாடு மீண்டும் நிலையான வளர்ச்சியை அடைய சீர்திருத்தங்களை செய்வது மட்டுமல்ல இந்த அரசியல் வணிக வளாகத்தையும் அகற்ற வேண்டும். அரச நிறுவனங்களின் தீவிர தனியார் மயமாக்கல் துணிச்சலான, விரிவான சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான ஊழல் எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் அதிகாரம் பெற்ற நீதித்துறை ஆகியவற்றால் மட்டுமே இந்த சுழற்சியை உடைக்க முடியும்.

தனியார்மயமாக்கல் என்பது வெறும் பொருளாதார தேவையல்ல. அரச நிறுவனங்களை வெளிப்படையாகவும் போட்டிதத்தன்மையுடனும் விற்பனை செய்வதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி ஊழல் பசியோடு இருக்கும் அரசியல்வாதிகளையும் பட்டினியாக்கின்றோம். கொள்கைகள் மற்றும் செயல்திறனில் போட்டியிட அரசியல்வாதிகளை கட்டாயப்படுத்துகின்றோம். இது பொருளாதார மீட்சிக்கு மட்டுமல்ல ஆரோக்கியமான பொறுப்புள்ள ஜனநாயகத்திற்குமான பாதையை வகுக்கின்றது. இலங்கையின் எதிர்காலம் அதன் செழிப்பு அதன் நிர்வாகம் அதன் ஆன்மா எல்லாமே அரசியல் தொடர்பில்லாமல் சுயாதீனமாக இயங்குவதில் உள்ளது. அரைகுறை நடவடிக்கைகளுக்கான நேரம் முடிந்து விட்டது. 

இளைஞர்களின் கனவுகளை நசுக்கும் சுங்க வரி

கனவு என்பது நீங்கள் தூங்கும் போது மட்டும் காண்பது  அல்ல, கஷ்டப்பட்டு உழைத்து அதனை நிஜமாக்கி கொள்வதே கனவு என்று அப்துல் கலாம் கூறியிருக்கின்றார், இலங்கையில் இளைஞர்களிடம் உங்கள் கனவு என்னவென்று கேட்டால் அவர்களிடம் பொதுவாக இரண்டு கனவுகள் இருக்கின்றன.  ஓன்று, அழகான ஒரு வாகனத்தை வாங்க வேண்டும். அழகிய வீடொன்றை கட்ட வேண்டும் என்பதே.  ஆனால் இலங்கை அரசின் சுங்க வரிக் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளை  குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றது. 

வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், இன்றைய இளைஞர்கள்  இது  தெரியாமல் அவர்களுடைய கனவுகளை மெதுவாக தொலைத்து கொண்டிருக்கின்றார்கள் . 

ஆசியாவில், யாரிடமாவது நீங்கள் என்ன வேலை செய்ய விருப்பம் என்று கேட்டால் முதலில் அவர்கள் எல்லோரும் கூறுவது, வைத்தியராக, என்ஜினீயராக, வழக்கறிஞராக வர வேண்டுமென்பதே. ஆனால் அதேநேரம் ஏன்  வியாபாரியாக வர விருப்பமில்லையா என்று கேட்டால், இல்லை, மிகவும் விரைவாக வீடொன்றை வாங்குவதற்கு, காரொன்றை வாங்குவதற்கு இதுவே சிறந்த வழி என்று கூறுவார்கள் அத்துடன், மிகவும் குறுகிய காலத்துக்குள் வாகனமொன்றை அல்லது அழகிய வீடொன்றை வாங்குவதற்கு அதற்கேற்றவாறு எமது தொழில் வாய்ப்புக்களும் இங்கே அமைந்துள்ளன.  

ஆனால், இந்த இளைஞர்களின்  வாகனம் மற்றும் வீட்டு கனவுகளை இலங்கை அரசு தமது  தீர்வு வரி கொள்கைகளின் மூலம் கலைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. சாதாரணமாக புதிதாக  வேலைக்கு செல்லும் அனைத்து இளைஞர்களினதும் அடுத்த கட்டமாக புதியதோர் வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்பது இலக்காக இருக்கும்.

வாகனம் ஒன்றை வாங்கும் போது, லீஸ் ஒன்றையோ அல்லது இலகு கட்டண முறை ஒன்றாயோ நாம் தெரிவு செய்வோம் என்றாலும், உண்மையில் உங்களுக்கு தெரியுமா? நீங்கள் வாங்கும் வாகனத்துக்கு அரசாங்கம் நூற்றுக்கு நூறு சதவீகிதத்துக்கும் மேலாக வரிப்பணம் வசூலுகின்றது,

டொயட்டா நிறுவனம் பல ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டு பற்பல ஆய்வுகளை செய்து இரும்புகளை உருக்கி துண்டுகளை இணைத்து  பல்வேறு புத்தம்புது  தொழில்நுட்பங்களை கொண்டு வந்து  ஹாய் ப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனையில் கிடைக்கும் இலாபத்தை விட துறைமுகத்திலிருந்து இலங்கைக்குள் வரும் வாகனத்துக்கு அறவிடும்  தீர்வு வரி மூலம் அரசாங்கம் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்கின்றது. யாருக்கும் நூற்றுக்கு நூறு சதவிகித இலாபத்தை பெற்றுக்கொள்வது கடினம். ஆனால், இந்த வாகனத்தின் விலையை போல்  இரண்டு மடங்கு இலாபத்தை ஒன்றுமே செய்யாமல் இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

நீங்கள் ஓரு வாகனத்தை வாங்குவது என்பது இரண்டு வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதாகும். நீங்கள் இரண்டு வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தினாலும் உங்களுக்கு கிடைப்பது ஒன்றேயாகும். ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் என்று கடைகளில் விளம்பரப்படுத்திருப்பார்கள், ஆனால் இலங்கையில் வாகனம் இரண்டை வாங்கினாலும் அடுத்தது இலவசமல்ல. அதேநேரம், இரண்டு வாகனங்களுக்கு செலுத்தும் கட்டணத்தை நீங்கள் ஒரு வாகனத்துக்கு செலுத்துவதென்றால் சிந்தித்து பாருங்கள், இன்னுமொரு வாகனத்தை வாங்குவதற்குரிய பணத்தினை நீங்கள் விரயமாகுகின்றிர்கள்.

உண்மையில் அந்த பணம் உங்கள் கையில் இருந்தால்  நீங்கள் கட்டாயமாக அதனை பலன் தரும் விதத்தில் செலவு செய்வீர்கள். உஙகளுடைய உயர் கல்விக்காக செலவழிக்கலாம் . உங்கள் அழகிய வீட்டை கட்டியிருக்கலாம்.  உங்களுடைய கனவுகளை நிஜமாக்கி இருக்கலாம். நீங்கள் அந்த பணத்தை  உங்கள் உயர் கல்விக்காக செலவழித்திருந்தால் உங்கள் கல்வி தரம் உயர்வதோடு மேலும் உயர்  பதவிகளை பெற்றுக்கொள்ள, பணம் சம்பாரிக்க அது உங்களுக்கு உதவியிருக்கலாம்.

உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது என்பது உங்களுக்கு மேலும் ஒரு வியாபாரத்தை கொண்டு செல்வற்கான வழியை காட்டலாம். உங்களை இறக்குமதி செய்ய தூண்டலாம். புதிய வணிகங்களை ஆரம்பித்து இன்னொருவருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு அளவுக்கு உங்களை உயர்த்தலாம்.

ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால்  இரண்டு வாகனங்களுக்கான பணத்தை ஒரு வாகனத்துக்கு கொடுத்து எங்களுடைய பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கிக்கொள்கின்றோம்.

அதுமட்டுமல்ல உன்மையில் நீங்கள் இரண்டு வாகனங்களுக்கு மேலான கட்டணத்தை செலவிடவேண்டி வரும்,  ஏன் தெரியுமா? உண்மையில் அந்த  வாகனத்துக்கான கட்டணத்தை நீங்கள் லீஸ் செய்து கட்டடியிருப்பீர்கள். 

இரண்டு வாகனத்துக்கான கட்டணத்தை நீங்கள் லீசிங் முறையில் பெற்றிருப்பீர்கள் . அந்த லீசிங்கிக்காக சாதாரணமாக 14 முதல் 15 சதவிகிதம் வரை, ஏன் கடந்த காலங்களில் 20 சதவிகிதம் வரை வட்டி செலுத்தவேண்டியிருந்தது.

வாகன பெறுமதிக்கும் கூடிய கட்டணத்துக்கு மேலும் வட்டி கட்டித்தான் குறித்த வாகனத்தை வாங்கக்கூடியதாக இருந்தது அது மட்டுமா, அந்த வாகனத்துக்கு காப்புறுதி செய்யும் போது அந்த வாகன உண்மையான பெறுமதிக்கு புறம்பாக   இரட்டிப்பாக காப்புறுதி செய்ய நேரிடும். அத்துடன், வாகனத்துக்கு நீங்கள் இரட்டிப்பாக கட்டணம் செலுத்தினாலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதும் ரி கண்டிஷன் செய்யப்பட்ட அல்லது ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் தானே. அதுமட்டுமல்ல உங்கள் வாகனத்தை நீங்கள் திருத்தும் போது வாங்கும் உதிரி பாகங்களுக்கும் மீண்டுமொரு முறை வரி செலுத்த வேண்டும். 

உன்மையில் நீங்கள் ஒரு உபயோகித்த வாகனத்தை இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி அதற்கு மேல் இன்னுமொரு கடனையும் வாங்கி அதற்கும் வட்டியை செலுத்தி அதன் பிறகு அதை பாவிப்பதற்கும் அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கின்றது. 

அடுத்ததாக உங்களுக்கிருக்கும் கனவு வீடு. அதிகமானவர்கள் கடனுக்கு இடத்தை வாங்கி அந்த இடத்திதான் மிகுந்த கஷ்டத்துடன் வீட்டை கட்ட ஆரம்பிப்பார்கள். உங்களுக்கு தெரியும் எப்படி அவர்கள் வீட்டை காட்டுவார்கள் என்று. அதிகமாக இரண்டு மாடி கட்டடமாக திட்டமிடுவார்கள்  முதலில் கீழ் பகுதியை கட்டி அங்கே சென்று குடி புகுந்து அதன் பின்னர் தான் மாடி பகுதியை கட்ட ஆரம்பபிப்பார்கள். ஆகவே இலங்கையில் நீங்கள் பல பகுதிகளுக்கு செல்லும் கண்டீருப்பீர்கள் நிறைய இடங்களில் மாடிப்பகுதி முற்றுவுறாமல் இருக்கும். அநேகமாக அந்தப்பணத்தை நீங்கள் வாங்கிய வாகனத்துக்கு இரட்டிப்பாக பணத்தினை செலுத்தியிருப்பீர்கள்.

உங்களுக்கு தெரியுமா நீங்கள் வீட்டை கட்டும் போது  உங்களுக்கு தேவைப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இரும்புகளுக்கு 82 வீதம் வரியாக அறவீடு செய்கின்றார்கள் நீங்கள் உங்கள் வீட்டை கட்டுவதற்கு முன்னர் நல்ல பாத்ரூம் ஒன்றை கட்டிக்கொள்ளவே முயறசி செய்வீர்கள் . குளியலறை உதிரி பாகங்களுக்கும் நூற்றுக்கு நூறு வீதம் வரி அறவீடு செய்கின்றது அரசாங்கம். அது தவீர வோல் டைல், floor டைல் போன்றவற்றுக்கும் நூற்றுக்கு 80 வீதம் வரி விதிக்கின்றது. 

சாதாரணமாக இலங்கை போன்ற நாடுகளில் வீடொன்றை கட்ட முற்படும் போது ஏற்படும் செலவுக்கு, இரும்பு, மின்சார பொருட்கள்  மற்றும்  சீமெந்துக்கு விதிக்கப்டுகின்ற வரி காரணமாக மேலதிகமாக 40 சதவிகிதம் கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளது. அதாவது ஒன்றரை வீட்டை கட்டி முடிக்க வேண்டிய பணத்தில் வெறும் ஒரு வீட்டை மட்டுமே கட்ட முடியும். பணப்பற்றாக்குறைக்கு வங்கி கக்கடன் வாங்கும் நீங்கள் கடனுக்கு வட்டியும், வட்டிக்கு வட்டியும் கட்டி நெருக்கடிக்குள்ளாக்கப்படுகின்றிர்கள். 

அரசாங்கத்தின் வரி கொள்கைகள் காரணமாக அநேகமான இளைஞர்களின் வாகனக்கனவும் வீட்டுக்கனவும் நிதந்திரமாக நிஜமாக  முடியாமல் கலைந்து விடுகின்றன. இலங்கையில் இளைஞர்களுக்கு கனவை நிஜமாக்க முடியாத ஒரு எதிர்காலம் தேவையா? நீங்கள் வெளிநாட்டுக்கு சென்ற பின்னர் வாழ்க்கையில் மிக வேகமாக மேலே வர முடிகின்றது. ஏனென்றால் அங்கே உங்களுக்கு இப்படியான வரிகள் அறவிடப்படுவதில்லை.  வீடு கட்டவும் இப்படியான வரிகள் அறவிடப்படுவதில்லை. 

ஆனால் இலங்கையில்  அரசாங்கத்தின் வரிக்கொள்கைகளால் இப்படித்தான் உங்களுடைய வாகன கனவும் வீட்டுக்கனவும் தகர்க்கப்படுகின்றன. தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீங்களே சொல்லுங்க, இப்படி வரி வரியாக கட்டிக்கொண்டிருந்தால் நாங்க எப்படி வாழ்வது? இதுக்கு என்னதான் வழி?

1980 களில் முன்னாள் சிங்கப்பூர் நிதியமைச்சர் டாக்டர் கோ கெங் ஸ்வீ நாடு இஸ்திரமாக இருக்க, ஐந்து யோசனைகளை  அப்போதைய ஜனாதிபதி ஜேர் ஜெயவர்தனவுக்கு  கடிதம் மூலமாக எழுதியிருந்தார்.

அதில் முதலாவதாக திறைசேரி உண்டியல்களை கட்டுப்படுத்துங்கள் கூறியிருந்தார். அதாவது, அளவுக்கு மீறி பணத்தை அச்சடிக்க வேண்டாம் அப்படி செய்த பண வீக்கம் கூடி பொருட்களுடைய விலை கூடும் 

அந்நிய செலாவணி கையிருப்புக்களை கட்டுப்படுத்தல். இல்லையென்றால் கடந்த காலங்களில் நடந்தவை போன்று மீண்டும் கேஸுக்காக கியூவில் நிற்க வேண்டியிருக்கும். ரூபாயின் மாற்று விகிதம் மதிப்பிழக்கமால் பார்த்துக்கொள்ளுங்க. கட்டுமான பொருட்களின் விலைகள் கட்டுக்குள் வைத்திருங்கள் என்பவையும் உள்ளடங்கும். 

இவை அனைத்தையும் நாம் அன்று தொடக்கம் பின்பற்றியிருந்தால் இந்தளவுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்ப்பட்டிருக்காது. 

சரியான கொள்கைகளை அமுல்படுத்த அரசை நிர்பந்திப்போம். ஆமாம் சரியான கொள்கைகளை வகுத்து சீர்திருத்தங்களை செயல்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துவோம்!

கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கங்கள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Economic implications of COVID-19

கொவிட்-19 இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தாக்கங்களில் வேலை நாட்களின் எண்ணிக்கையை நேரடியாகக் குறைத்தல் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான சமூக இடைவெளி, நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாளுவற்கான மருத்துவ செலவுகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் தேவையான சமூக இடைவெளி  தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தயாராக இல்லாதவர்களுக்கு ஏற்படக் கூடிய பாரிய தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான செலவுகள் ஆகியன உள்ளடங்கும். 

வருமானத்தில் உடனடி விளைவு இருக்கும் என்றாலும், வைரஸ் பரவுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் கொள்கைகளிலிருந்து நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவுகள் ஏற்படும். நோய்த்தொற்றுகளின் வீதத்தைப் பொருத்தவரை, இதுவரை நாங்கள் சிறப்பாகச் செய்துள்ளோம். பிரச்சினை என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்தி நோய்தடுப்புப் பொறிமுறையை நம்மால் பராமரிக்க முடியுமா  என்பதாகும். 

பொருளாதாரத்திற்கான இந்த அதிர்ச்சியானது நாம் சந்தித்த (2008-2012) உலகளாவிய நிதி நெருக்கடியைவிட பெரியதும் மற்றும் ஆழமானதுமாகும். எமது முக்கிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களில் குறைவுகளை சந்தித்தமை காரணமாக அந்த நெருக்கடியின் வரையறுக்கப்பட்ட விளைவு காணப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு எமது சுற்றுலாத் துறையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் கொவிட்-19 தாக்கியபோது அதிலிருந்து நாங்கள் முழுமையாக மீளவில்லை. ஆனால் விளைவானது  ஒப்பீட்டளவில் சிறியதாகும் ஒரு துறைக்கு வரையறுக்கப்பட்டதாகவும் இருந்தது.

ஆரம்ப நிலைமைகள்

கொவிட்-19 தாக்கியபோது நாங்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தோம். 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2.6% ஆக இருந்தது, கொவிட் -19 இன் தாக்கத்துடன் கணிசமான சீர்திருத்தங்கள் மற்றும் பெரிய உட்பாய்ச்சல்கள் இல்லாமல், குறிப்பாக நேரடி வெளிநாட்டு முதலீடு இன்றி, எமது சராசரி வளர்ச்சி விகிதத்தை மீட்டெடுப்பதனை (மூன்று தசாப்தங்களுக்கு 4% சராசரி) எதிர்வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அடைவதற்குக் கடினமாக இருக்கும்.

2018 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு சுற்றுலாத்துறையின் வருமானம் கணிசமாகக் குறைவடைந்தது. சுற்றுலாத்துறையின் உடனடி எதிர்காலம் நன்றாகத் தெரியவில்லை. எங்கள் ஏற்றுமதிகள் நடப்புக் கணக்கில் பணம் செலுத்தும் அளவுக்கு உதவுவதற்குப் போதுமான அளவில் அதிகரிக்கவில்லை. இதற்கிடையில், கடன் வாங்கிய நிதியின் ஒரு பகுதி உட்பட நமது அந்நிய செலாவணி ஒதுக்கமானது சுமார் 7.0 பில்லியன் டொலராக குறைவானதாகவே உள்ளது. இறுதியாக, எதிர்வரும் 2020-2023 ஆகிய நான்கு ஆண்டுகளில் 16 .0 பில்லியன் டொலர் பெறுமதியுயான பாரிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

கொவிட் -19 இன் பொருளாதாரத் தாக்கம்

வைரஸ் பரவலின் கணிசமான பொருளாதார தாக்கத்தை நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்பார்க்கலாம், பிந்தையது முந்தையதை விட முக்கியமானது. வழங்கப்பட்ட நேரடி தாக்கம் என்னவென்றால், இன்றுவரை ஊழியப்படையானது மெய்நிகர் தனிமைப்படுத்தலில் உள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இதற்கு முன்னர் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிதிகள் செலவு செய்யப்படும். மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிக செலவு ஏற்படும்.

சிறப்பு நிதி ஒதுக்கீடு காணப்பட வேண்டும். மற்ற நாடுகளின் அனுபவத்தைப் பார்த்தால் இந்த நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும், ஆனால் சரியான நெறிமுறைகளைப் பின்பற்றினால் குறிப்பாக சமூக இடைவெளி மூலம் நமது நோய்த்தொற்றுகள் குறைவாகவே இருக்கும். நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ சேவைகளுக்கான அணுகலை வழங்க சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றின் தாக்கத்தை நாம் குறைக்க முடியும். அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் பயிற்சி பெற்ற தொற்றுநோயியல் நிபுணர்களை நம்புவது உதவும்.

பொருளாதாரத்தில் வைரஸின் நேரடித் தாக்கமானது, அனைத்து துறைகளிலும் உற்பத்தி கிட்டத்தட்ட ஒரு முழு நிறுத்தத்திற்கு வந்துள்ளமையால்  வெளியீடு குறைந்துள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில் மட்டுமே அதிகரிக்கப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் அதிக சனத்தொகை கொண்ட கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவிருப்பதுடன்  அவர்கள் இன்னும் தங்கள் வீடுகளிலே உள்ளனர்.

தேசிய வருமானத்தைப் பொறுத்தவரை - ஊதியங்கள், இலாபங்கள் மற்றும் வட்டி வருமானங்கள் அண்மைக் காலத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். இது மீட்டெடுப்பதற்கு மிகவும் தேவையான கொள்கைகளை உருவாக்குகிறது. அவசரகாலத்தை நாங்கள் சமாளிக்கும் அதே வேளை, முறையான கொள்கைகளுக்கு நாம் அண்மைய எதிர்காலத்திற்கு அப்பால் சிந்திக்க வேண்டும். இந்த அவசர நிலைமைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கொவிட் -19 தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிகழ்ச்சிகள்

நிவாரண நடவடிக்கைகளின் முழு பட்டியலையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில் பின்வருவன உள்ளடங்கும்:

  • வருமான வரி செலுத்துவதற்கான தயவுக்காலங்கள். மற்றும் சேர்பெறுமதி வரி, வாகன அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல், தண்ணீர்க் கட்டணங்களை செலுத்துதல் மற்றும் ரூ. 15,000 இற்குக் குறைந்த  ஆதன வரிகளைச் செலுத்துதல், 50,000 க்கும் குறைவான மாதாந்த  கனட்டைப் பட்டியல்களைச் செலுத்துவதற்கு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிப்பு வழங்குதல்.

  • முச்சக்கர வண்டிகளின் குத்தகை கடன் கொடுப்பனவுகளை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துதல்.

  • மே 30 வரை அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களிடமிருந்து கடன் தொகையை மீளஅறவிடாமை.

  • ரூபா. 1 மில்லியனுக்கும் குறைவான தனிநபர் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துதல்.

  • பயிற்சியைப் பின்பற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ரூபா. 20,000 கொடுப்பனவு வழங்கப்படுதல்.

  • நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான அக்ரஹாரா காப்புறுதிச் சலுகைகளை இரட்டிப்பாக்குதல்.

  • சுற்றுலா மற்றும் தைத்த ஆடைத் துறைகளைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு (SME) ஆறு மாத கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு காலம் தாழ்த்துதலை வழங்குதல்.

  • பணச் சந்தையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன கூட்டாக திறைசேரிப் பிணையங்கள் மற்றும் பத்திரங்களில் 7% வட்டி வீதத்தில் முதலீடு செய்தல்

இந்த நடவடிக்கைகள் எதுவும் விலை முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவை வழிகாட்டல்கள், கட்டளைகள் மற்றும் தொகைரீதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

நிவாரணம் வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளில் பின்வருன  அடங்குகின்றன

  • கடனட்டைகளில் உள்நாட்டு கொடுக்கல்வாங்கல்களில் அதிகபட்சம் 15% வட்டி விகிதம் ரூ. 50,000 வரை மற்றும் குறைந்தபட்ச மாதாந்த கட்டணங்களில் 50% குறைப்பு.

  • அனைத்து வங்கி கிளைகளும் ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரங்களில் திறந்திருத்தல்.

  • துறைமுகங்கள், சுங்கம் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள் அத்தியாவசிய உணவு, உரம், மருந்துகள் மற்றும் எரிபொருளை தொடர்ந்து தொடர்புடைய நபர்களுக்கு வழங்குதல்.

  • சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் சமுர்த்தி அட்டை வைத்திருபவர்களுக்கு வட்டி இல்லாத முற்பணம்  அல்லது 10,000 ரூபாவை  சமுர்த்தி வங்கிகள் மூலம் வழங்குதல்.

  • சமுர்த்தி அதிகாரசபையானது உடனடியாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சத்துணவுப் பொருட்களுக்கான உரித்துச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

  • சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு சேர்பெறுமதி வரி மற்றும் பிற வரிகளிலிருந்து விலக்களித்தல்.

  • உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இலங்கை வங்கியில் இல் ஒரு சிறப்பு கணக்கு திறக்கப்பட்டது. ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் அரிசி, பருப்பு மற்றும் உப்பு வழங்கப்படுதல். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இந்த நிதியில் பங்களிப்பதற்காக வரி மற்றும் அந்நிய செலாவணிக் கட்டுப்பாடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இருந்தபோதிலும், ஏழைகளுக்கும் குறிப்பாக வேலையற்றோர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கும் பொருளாதார நிவாரணம் வழங்குவது கடினம். சமுர்த்தி சரியாக இலக்கு வைக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகும். உதவி பெறத் தகுதியான சிலருக்கு இந்த வருமான இடமாற்றங்களுக்கு அணுகல் இல்லை, அதிக வருமானம் உள்ள ஏனையோர் சமுர்த்தி நிதியைப் பெறுகிறார்கள். தகுதியான ஏழைகளுக்கு உதவ எமது எதிர்கால திட்டங்களில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

சிலி போன்ற பிற நாடுகளில் விரிவான குடும்ப மற்றும் வருமான தரவுகளின் அடிப்படையில் வருமான பரிமாற்ற முறை உள்ளது. சமுர்த்தி பெறாதவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பங்கீட்டு அட்டைகளை வழங்குவதற்கு எமது அரசாங்கம் எடுத்திய சமீபத்திய முயற்சி உதவியாக இருக்கும். ஆனால் நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு, நாம் சமுர்த்தி திட்டத்தை சீர்திருத்தி தகுதியானவர்களுக்கு நன்மைகளை வழங்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியானது கடன் கட்டுப்பாடுகள் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது, இது பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் நீண்ட கால சிதைவுகளை உருவாக்கி அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தக் கொள்கைகள் மூலம், போட்டி பரிமாற்ற வீதம் உட்பட பொருளாதாரத்தை நிர்வகிக்க விலைகளைப் பயன்படுத்துவதை விட தொகைரீதியான நடவடிக்கைகளில் அதிக நம்பகத்தன்மையை இது குறிக்கிறது. விலை முறை பயன்படுத்தப்படாதபோது, ​​பகுத்தறிவற்ற ஒதுக்கீடு மற்றும் ஊழலை வளர்க்கும் ஒரு அதிகாரம் அல்லது “ஸார்” மூலமாக அளவுகளை ஒதுக்க வேண்டி ஏற்படும்.

முடிவுகள்

கொவிட்-19 ஆல் உருவாக்கப்பட்ட குறுகிய கால சூழ்நிலையை, குறிப்பாக நுகர்வு தரப்பில் தீர்வு காண ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் பொருத்தமானவையாகும். ஆனால் தனியார் மருந்தகங்களை மூடுவது போன்ற முழுமையான பணிநிறுத்தங்கள் நீரிழிவு, நாள்பட்ட இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற தினசரி மருந்துகள் தேவைப்படுபவர்களின் சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பதற்கு எதிர்மறையானவை. தனியார் மருந்தகங்களை திறக்க அனுமதிப்பது போன்று கட்டுப்பாட்டை தளர்த்துவது சாத்தியமானது என்று கண்டறியப்பட்டது.

இருப்பினும், நாங்கள் ஏற்கனவே பலவீனமான ஆரம்ப நிலைமைகளிலிருந்து தொடங்குவதால், இந்தப் பணி எளிதானதல்ல. மேலும், இது பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கை விரிவாக்குவதற்கும் அதிகாரத்தை அதிகம் பயன்படுத்துவதற்கான ஆபத்தைக் கொண்டுள்ளது. சில நேரங்களில், அதை குறைத்துப் பயன்படுத்துவது, வருமான இடமாற்றங்கள் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை செயல்படுத்துவது பொது சேவையை பெரிதும் சார்ந்துள்ளது. இது திறமையாகவும் விரைவாகவும் செயல்படுவதாகத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் கையை மிகைப்படுத்தி அரசாங்கத்திற்கு கூடுதல் மற்றும் நிரந்தர அதிகாரத்தை வழங்குவதற்கான ஆபத்தை கொண்டுள்ளது. அந்த சோதனையின் முடிவுகளை 1970-1977 காலகட்டத்தில், வருமான உச்சவரம்புகளுடன், நெல் போக்குவரத்து மீது 100% இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் நாம் கண்ணுற்றோம். அரசாங்கத்தின் அதிகமாகத் தலையீடு செய்தமை அந்த காலகட்டத்தில் பேரழிவு தரும் முடிவுகளுக்கு வழிவகுத்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்தது, வேலைவாய்ப்பைப் போலவே வாழ்க்கைத் தரத்திலும் அபரிதமான வீழ்ச்சி ஏற்பட்டது.

இலங்கை மத்திய வங்கியானது கடன் அளவில் செல்வாக்குச் செலுத்துவதற்கு நேரடி தொகையியல் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது. இது கொவிட்-19 அதிர்ச்சியைக் கையாள்வதற்கான பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கும் மற்றும் ஒதுக்கங்களை  முகாமை செய்வது  உள்ளிட்ட தொகைரீதியான நடவடிக்கைகளுக்கான அதன் விருப்பத்தை குறிப்பாக நெகிழ்வான மற்றும் போட்டி பரிமாற்ற வீதங்களைத் தவிர்த்தல்.

நேரடி நடவடிக்கைகள் போட்டி இல்லாத பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும், குறிப்பாக நமது ஏற்றுமதி வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். இறக்குமதியை நேரடியாக தடை செய்வது ஏற்றுமதிக்கு எதிரான ஒரு சார்பை உருவாக்கும். பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கு ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களில் நாம் தங்கியிருக்க வேண்டும். குறுகிய காலத்தில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது அவசியமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியை உறுதிப்படுத்த இது போதாது.

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகும். அவை எட்வகாடோ நிறுவகம் அல்லது நிறுவகத்துடன் இணைந்த எவரின் கருத்துக்களையும் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.