இந்த முறை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) என்ற பெயரை நீங்கள் கேட்டிருக்காமல் இருந்திருக்க முடியாது. மைதானத்தில் அவரது அட்டகாசமான ஆட்டம், Norway என்ற நாட்டை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ஆனால், வெறும் 5.63 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நாட்டிற்குள், கால்பந்தையும் தாண்டி உலகமே வியக்கும் பல ஆச்சரியங்களும் ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன.
சுவிட்சர்லாந்து போன்ற மிகச்சிறிய நாடுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், உலகின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) கொண்ட நாடுகளில் Norway முதன்மையாக உள்ளது. குறைந்த வேலையின்மை, மக்களின் மிக நீண்ட ஆயுட்காலம், திறமையான உழைப்பாளர்கள், மற்றும் கடுமையான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் எனப் பல சிறப்பம்சங்கள் இங்கு உள்ளன.
அமெரிக்காவில் 10.4% மக்களும், இலங்கையில் சராசரியாக 32% மக்களும் அதிக நேரம் (Over-time) வேலை செய்யும்போது, Norwayயில் வெறும் 1.4% மக்கள் மட்டுமே ஓவர்-டைம் வேலை செய்கிறார்கள். கடுமையான பனிப்பொழிவு இருந்தாலும், உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் Norway 6-வது இடத்தில் உள்ளது.
அதிக வரி வசூலிக்கும் ஒரு நாடாக இருந்தாலும், மக்கள் எவ்வாறு இவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் அங்கு வாழ்கிறார்கள்? அவர்களின் ரகசியம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில், அந்த நாட்டின் பொருளாதார மாதிரியாகத் தான் இருக்கும்.
மீன்பிடி தொழிலில் இருந்து எண்ணெய் வளம் வரை:வரலாற்றுப் பயணம் இன்றைக்கு இவ்வளவு பணக்கார நாடாக இருக்கும் நார்வே, 1960-களில் ஒரு சாதாரண மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருந்த ஏழை நாடாக இருந்தது. அப்போது அவர்களின் வாழ்கைத்தரம் ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளைப் போலத்தான் இருந்தது. அப்போதைய மக்களின் GDPயானது, பங்களாதேஷ், நைஜீரியா போன்ற நாடுகளை போலத்தான் இருந்தது. ஆனால், 1963 மே மாதத்தில் அங்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. வட கடல் (North Sea) பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என Norway அரசு சட்டமியற்றியது. அதிர்ஷ்டவசமாக, 1969-இல் அங்கு எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், 'Ocean Viking' மூலம் எண்ணெய் துளையிடுதல் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, Norwayயின் எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 1.6 மில்லியன் பீப்பாய்கள் வரை எகிறியது.
'Sovereign Wealth Fund':எதிர்கால சந்ததிக்கான தொலைநோக்கு பார்வை எண்ணெய் வளம் கிடைத்தவுடன் பெரும்பாலான அரபு நாடுகள் செய்தது போல, Norway ஆடம்பரமாகச் செலவு செய்து பணத்தைக் கரியாக்கவில்லை. எண்ணெய்க் கிணறுகள் நிரந்தரமானவை அல்ல என்பதை Norway அரசு தெளிவாக உணர்ந்திருந்தது. அதனால், எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு "Sovereign Wealth Fund" (அரசு இறையாண்மை நிதி) என்ற மிகப்பெரிய சேமிப்பு நிதியை உருவாக்கியது. இன்றைக்கு இதுதான் உலகிலேயே மிகப்பெரிய அரசு சேமிப்பு நிதி (Sovereign Wealth Fund) ஆகும். இது சீனாவின் சமூக நல சேமிப்பை விடப் பெரியது.
இந்த நிதியின் இயக்கம் எவ்வாறு செயல்படுகிறது?
மக்களுக்கான நிதி: இந்த இயற்கை வளம் நாட்டின் மக்களுக்குச் சொந்தமானது என்பதால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் மக்களுக்கே சேர வேண்டும் என அரசு கருதியது.
நேரடிச் செலவு இல்லை: எண்ணெய் பணத்தை நாட்டின் பொருளாதாரத்திற்குள் நேரடியாகக் கொண்டு வராமல், உலக நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தனர்.
கட்டுப்பாடு: மக்கள் நினைத்தவுடன் இந்த பணத்தில் சொகுசுப் பொருட்களை வாங்க முடியாது; ஏன், Norway அரசாங்கம் கூட இந்த அசல் நிதியைத் தொட முடியாது.
3% விதி: வெளிநாட்டு முதலீடுகள் மூலம் வரும் லாபத்தில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே நாட்டின் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.இதன் காரணமாக, உலகச் சந்தையில் எண்ணெயின் விலை எவ்வளவு சரிந்தாலும், அது Norwayயின் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிப்பதே இல்லை. இந்த லாபப் பணத்தைக் கொண்டுதான் இலவசக் கல்வி, தரமான மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மக்களுக்கு வழங்குகிறது.
அதிக விலைவாசி vs சமூக பாதுகாப்பு வலை (Social Safety Net):Norwayயில் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகம்.
| ஒப்பீடு | அமெரிக்கா (USD) | நோர்வே (USD) |
|---|---|---|
| ஒரு ஹோட்டலில் 2 பேர் உண்ண | $78 | $102 |
| மாதாந்த மின்சாரம் & Gas கட்டணம் | $216 | $257 |
| Volkswagen Golf காரின் விலை | $35,500 | $47,135 |
ஆனால், இவ்வளவு அதிக விலைவாசியையும், அதிக வரியையும் Norway மக்கள் ஏன் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார்கள்? சுருக்கமான ஒரு பதிலாக கூறின், அவர்கள் செலுத்தும் வரிக்கு, பதிலுக்கு முழுமையான பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கிறது.
மருத்துவச் செலவு: மருத்துவச் செலவுகளுக்காக அங்கு யாரும் கடனாளி ஆவதில்லை.
கல்வி: உயர்கல்விக்காக மாணவர்கள் கடன் வாங்கிப் பயப்படத் தேவையில்லை.
வேலையின்மை பாதுகாப்பு: வேலை பறிபோனால் கூட நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வராது.
Norwayயிடம் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
Norwayயின் சோசலிச ஜனநாயகக் கலப்பு மாதிரியை (Socialist-Capitalist Mixed Economy) மற்ற நாடுகள் அப்படியே நகலெடுத்தது போல் பின்பற்றிட முடியாது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், மக்கள் தொகை மற்றும் புவியியல் அமைப்புகள் முற்றிலும் மாறுபட்டவை. ஆனால், Norwayயின் நிர்வாக முறையிலிருந்து சில முக்கிய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்:
அ) பொது-தனியார் கூட்டுமுறை (Public-Private Partnership)
வளரும் நாடுகளில் அரசு ஒரு தொழிலை நடத்தினால், அங்கு தேவையில்லாத அரசியல் தலையீடுகளும் ஊழலும் இருக்கும். ஆனால், Norwayயில் Equinor, Telenor, DNB போன்ற பெரிய நிறுவனங்களில் அரசாங்கத்திற்குப் பங்குகள் இருந்தாலும், அரசு ஒரு முதலீட்டாளராக மட்டுமே செயல்படுகிறது. நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளைத் தனியார் துறை வல்லுநர்களே எடுக்கிறார்கள்.
ஆ) தொழில் தொடங்க இலகுவான தன்மை (Ease of Doing Business)
உலகில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் எளிதான நாடுகளில் Norway 9வது இடத்தில் உள்ளது. வெளிப்படைத்தன்மை, லஞ்சமின்மை மற்றும் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் காரணமாகத் தனியார் முதலீட்டாளர்கள் தைரியமாக முதலீடு செய்கிறார்கள்.
இ) புதிய தொழில்களுக்கான பயமின்மை (Risk-Taking Environment)
வளரும் நாடுகளில் ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது ஒரு சூதாட்டம் போன்றது. அந்த முயற்சி தோல்வியடைந்தால், வாழ்நாள் சேமிப்பிலிருந்து குழந்தையின் படிப்பு செலவு வரை அத்தனையும் பாதிக்கப்படும். ஆனால், Norwayயில் அரசால் வழங்கப்படும் வலுவான சமூகப் பாதுகாப்பு (Social Safety Net) காரணமாக, தொழில் முயற்சி தோற்றாலும் அடிப்படை வாழ்க்கை பாதிக்கப்படாது என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இந்தத் தைரியமே அவர்களைப் புதிய கண்டுபிடிப்புகளையும் தொழில்களையும் உருவாக்க வைக்கிறது. இந்த வளங்களைக்கொண்டு அவர் சுவிட்சர்லாந்தின் முகவரியையே மாற்றிய இரண்டு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தினார். முதலாவதாக, சுவிட்சர்லாந்தின் அனைத்து மூலை முடுக்குகளையும் ரயில்வே மூலம் இணைத்தார். இன்று அவர்களின் உள்கட்டமைப்பு எந்தளவிற்குச் சிறந்து விளங்குகிறது என்றால், மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைதூர ஆல்பைன் (Alpine) கிராமங்கள் வரை தண்டவாளங்களை அமைத்து, உலகிலேயே மிக அடர்த்தியான ரயில்வே வலையமைப்பைக் கொண்ட நாடாகச் சுவிட்சர்லாந்து திகழ்கிறது. நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதியைக் கூட அவர்கள் இணைத்துள்ளனர். இதனை அவர்கள் 1800-களிலேயே சாத்தியமாக்கிக் காட்டினர். ஆனால், இலங்கையில், கடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த தண்டவாளங்களைக் கூட இன்னும் முழுமையாகச் சீரமைக்க முடியாத நிலை நீடிக்கிறது. ஆனால், இவர்களோ 200 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
முடிவுரை
அரசாங்கம் மக்களுக்கு ஒரு வலுவான பாதுகாப்புத் தூணாக இருந்து, தனியார் துறையோடு இணைந்து தொழில்களை வளர்க்கும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளரும்; மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள். கால்பந்து மைதானத்தில் ஹாலண்ட் ஒரு மிளிர்கின்ற நட்சத்திரமாக இருக்கலாம். ஆனால், பொருளாதார உலகத்தைப் பொறுத்தவரை Norwayயின் இந்த நிர்வாக மாதிரிதான் உண்மையான 'சூப்பர் ஸ்டார்'!
ஆக்கம்:- ச.துலாங்கன்.

