அளவுக்கதிகமான வரிகள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
A Belly Full of Taxes

- டில்ஷானி ரணவக

புத்தாண்டு வாரம் முடிவடைந்து வருவதால், உங்கள் உணவுப் பட்டியலுக்கான மொத்தத் தொகையானது மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். பண்டிகை காலத்தை நீங்கள் இதற்குக் காரணம் காட்டியிருக்கலாம், மேலும் இலங்கையில் உணவு உண்மையில் மிகவும் விலை உயர்ந்ததாகும். இருப்பினும், இது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்களா? இவ்வளவு அத்தியாவசியமான ஒன்றுக்கு நாம் ஏன் இவ்வளவு பணம் செலுத்துகிறோம்?

உங்கள் குடும்பம் வாங்கும் ஒவ்வொரு உணவிற்கும், நீங்கள் இரண்டாவது உணவுக்கு (ஒரு தனிநபருக்காக) மீண்டும் அரசாங்கத்திற்கு விலை செலுத்துகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் குடும்பத்தின் அன்றாட நுகர்விற்காக  நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதிருக்கலாம்! நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு  கொள்வனவுக்கும் செலுத்தும் மறைமுக வரி நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம்?

ஒரு குடும்பத்தில் நான்கு பேரின் சமநிலையான உணவுக்கான மளிகைப் பட்டியலைப் பார்ப்போம் (உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) பரிந்துரைத்த அளவுகள்).

Balanced+Meal+tax+figures.png

இந்த புள்ளிவிவரங்களை ஒருவர் ஆராயும்போது, ​​இந்த சிறிய கூடை மளிகைப் பொருட்களில் மட்டுமே நாங்கள் அரசாங்கத்திற்கு ரூபா 150 இற்குமதிகமான தொகையை வரி வடிவில் செலுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமானது. அது மதிய உணவுக்கு நீங்கள் வாங்கியிருக்கக்கூடிய ஒரு அரிசிப் பொதிக்குச் சமமானதாகும்!

இரண்டு முக்கிய காரணங்களுக்காக வரி விதிக்கப்படுகிறது; அவை அரசாங்க வருவாயின் முக்கிய ஆதாரமாக இருப்பதுடன் அவை உள்ளூர் உற்பத்தியாளர்களை இறக்குமதிப் போட்டியில் இருந்து பாதுகாக்க முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசாங்க வருவாயில் 80% மறைமுக வரி மூலம் வசூலிக்கப்படுகிறது. வருமானத்திற்கு விதிக்கப்படும் வரிகளுக்கு மாறாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மறைமுக வரி விதிக்கப்படுகிறது.

உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்து பலப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்தையே நுகர்வுப் பொருட்களின் மீதான இத்தகைய கடுமையான வரிகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு வாதமாக முன்வைக்கின்றனர். ஒரு தீர்வையை விதிக்கும்போது, ​​இறக்குமதியின் விலை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் மலிவான மாற்றுப்பொருளாக இருக்கும் போட்டிக்கு எதிராக போட்டியிட வாய்ப்பளிக்கிறது. உதாரணமாக, ஒரு கிலோ பச்சை போஞ்சிக்கு நாட்டின் எல்லையில் 101% வரி விதிக்கப்படுகிறது (செலவு, காப்புறுதி மற்றும் சரக்கு (CIF) விலை). இதன் பொருள் நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பச்சை போஞ்சியை வாங்கினால், பொருளின் உண்மையான மதிப்பின் இரு மடங்கு விலையை நீங்கள் செலுத்த வேண்டும்.

இது உள்ளூர் தயாரிப்பாளர்களை ஈர்க்கிறது, ஏனெனில் அவர்கள் அதே நன்மைக்காக ஒப்பீட்டளவில் குறைந்த விலையை வழங்க முடியும். இந்தக் கொள்கைகள் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு உதவியாகக் காணப்பட்டாலும், அவை நிச்சயமாக நீண்ட காலத்திற்கு உதவாது.

நுகர்வோர் தோல்வியடைகின்றனர்

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மலிவான இறக்குமதியை எதிர்த்துப் போட்டியிட உதவும் வகையில் தீர்வைகள் விதிக்கப்படும் போது, ​​உள்ளூர் உற்பத்தியாளர்கள் திறமையாகவும், உற்பத்தித் திறனுடனும்  இருப்பதற்காக அனைத்து சந்தை சலுகைகளையும் அரசாங்கம் திறம்பட நீக்குகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான தீர்வைகள் அவற்றின் பிரதான போட்டி உள்நாட்டுப் பொருட்களை விட அதிக விலை கொண்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதன் விளைவாக, நீங்களும் நானும், உள்ளூர் நுகர்வோர் இரண்டு தடவை இழக்கிறோம். முதலாவதாக, நாங்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க விரும்பினால், உள்ளூர் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு உயர் தரமான, சிறந்த பொருளைக் கொடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இரண்டாவதாக, நாங்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிருப்தியடைந்து, இறக்குமதி செய்யப்பட்ட மாற்றீட்டை வாங்க விரும்பினால், இந்தப் பொருள் அதிக தீர்வைகளுக்கு உட்படுத்தப்படுவதால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டும்.

இறக்குமதியின் அதிக விலை இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் இறுதி விலைக்கும் உள்ளூர் பொருளுக்கான விலைக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்குகிறது என்பதன் மூலம் நுகர்வோருக்கு இந்த இழப்பு அதிகரிக்கிறது. இந்த இடைவெளியை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இலாப விகிதமாக மாற்ற முடியும், ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட மாற்றீட்டில் விதிக்கப்பட்ட உயர் தீர்வையினளவுக்கு  தரத்தை மேம்படுத்தாமல் அவர்களின் பொருளின் விலையை அதிகரிக்க முடியும்.

நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமா?

ஊக்குவிப்புக்கள் இல்லாததால் எங்கள் உற்பத்தியாளர்கள் வினைத்திறனற்ற உற்பத்திக்கு பழக்கப்படுகிறார்கள். இந்த விடயத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களை அரசாங்கம் மேலும் பாதுகாக்க வேண்டுமா? அப்படியானால், வர்த்தக பரிமாற்றங்களை நாங்கள் கவனமாக பரிசீலிக்கிறோமா; நுகர்வோருக்கு ஏற்படும் செலவுகள் என்ன?

பாதுகாப்புவாதம் என்பது நாட்டில் சூடுபிடிக்கும் தலைப்பொன்றாகும். இலங்கை பொருளாதாரம் 1977 இல் திறக்கப்பட்டதிலிருந்து, உள்ளூர் தொழில்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்கள் செயல்படுத்தப்பட்டன. பொருளாதாரத்தைத் திறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்காசிய பிராந்தியத்தில் அவ்வாறு செய்த முதல் நாடாகிய நாங்கள் இன்னும் பின்தங்கியுள்ளோம்.

மாறாக, மற்ற நாடுகளுடனான தொழில்நுட்ப முதலீடுகளில் தொடர்புபடலாம், அவை நாட்டில் குறைந்த விளைதிறன், குறைந்த செயல்திறன் கொண்ட, பாதுகாக்கப்பட்ட கைத்தொழில்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை பரிமாறிக்கொள்ள உதவும். இது வெளிநாட்டு முதலீட்டிற்காக பொருளாதாரத்தைத் திறத்தல், முதலீட்டாளர் நட்பு சூழலை உருவாக்குதல், அரசாங்கத்தால் பெரிதும் வரி விதிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கைகளில் பெரும்பாலானவற்றை தளர்த்துதல்  ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.

பாதுகாப்புவாதத்தின் இந்த நிருவாகமுறை தோல்வியுற்றதால், எங்கள் உற்பத்தியாளர்களை வெளிநாட்டுப் போட்டியில் இருந்து பாதுகாக்குமாறு நாங்கள் இன்னும் அரசாங்கத்திடம் கேட்கப்போகிறோமா?